Saturday, 9 January 2016

பாஸ்வேர்டை திருடும் Key Logging தடுப்பது எப்படி?

:

கீ லாகிங் என்றால் என்ன? 

கீலாகிங் என்பது இணைய திருடர்களால் நிரலாக்கப்பட்ட ஒரு மென்பொருள். இந்த மென்பொருளை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கி, நீங்கள் உள்ளிடும் பாஸ்வேர்ட்களை திருடிவிடும். திருடிய பாஸ்வேர்டை உடனுக்குடன் அந்த புரோகிராமை இயக்குபவருக்கு அப்படியே அச்சு பிசகாமல் அவற்றை அனுப்பி வைத்துவிடும்.

கீ லாகிங் முறையில் திருடபடுபவைகள்

1. இமெயில் பாஸ்வேர்ட்,
2. பேங்க் அக்கவுண்ட் பாஸ்வேர்ட்
3. இணையத்தில் Password கட்டத்தில் நிரப்படுபவை அனைத்தும்.

அதாவது இன்டர்நெட்டில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள், யூசர் நேம்கள் போன்றவற்றை அப்படியே தன்னுள் பதிந்துகொண்டு, அவற்றை கீலாகிங் புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்தவருக்கு மின்னஞ்சலாக அனுப்பி விடும்.

anti key-logger software free

கம்ப்யூட்டரில் கீ-லாகிங் நிரல் செயல்படுகிறதா என எப்படி கண்டுபிடிப்பது?

கீலாகர் புரோகிராம் கம்பூயூட்டரில் செயல்பட்டு கொண்டிருக்கிறதா என இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்.

1. CTR+ALT+DEL கீகளை ஒரே சமயத்தில் அழுத்தி TASK MANGER சென்று ஏதாவது தொடர்ப்பபில்லாத புதிய புரோகிராம் இயங்கி கொண்டிருக்கிறதா என பார்க்கலாம். அப்படி சந்தேகத்திற்குரிய புரோகிராமாக இருந்தால் அதை "END Process கொடுத்து நிறுத்த முடியும்.

2. ஆன்டி கீ லாகிங் மென்பொருள்மூலமும் கீ லாகிங் நிரல்களை கண்டுபிடிக்கலாம்.

கீலாகிங் நிரலை தடுப்பது எப்படி?

இதுபோன்ற கீலாகர் புரோகிராம்களுக்கு பாஸ்வேர்ட் செல்லாமல், நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்ட்களை உடனுக்குடன் Scrambling செய்து தடுப்பவைதான் ஆன்டி லாகர் மென்பொருள். இந்த வகை மென்பொருள் நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்ட்டை மற்ற கீலாகர்கள் உணரும் முன்பு அவற்றை சிதைத்துவிடுகிறது.

அதாவது, நீங்கள் தட்டச்சிடும் பாஸ்வேர்ட், பயனர் பெயர்கள் உடனுக்குடன் ஸ்கிராம்ப்ளிங் (சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை) செய்யபடுவதால் கீலாகர் புரோகிராம் ஆனது நீங்கள் தட்டச்சிடுவதை (Key Stroke)  என்ன எழுத்து என கண்டுபிடிக்க முடியாது. அவை கீ லாகர்களுக்கு சிதைக்கப்பட்ட எழுத்துக்களாகவே கிடைக்கும்.

எனவே கீ-லாகர் புரோகிராம்உங்களுடைய கம்ப்யூட்டரில் பதிய பட்டிருந்தாலும், ஆண்டி லாகர் மென்பொருள் நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ளிடும் பாஸ்வேர்ட் தகவல்களை சிதைத்து விடுவதால் சிதைந்த எழுத்துகளையே கி - லாகர் புரோகிராம் பெற முடியும்.

சிதைந்த எழுத்துகளை பெற்று, யாரும் பாஸ்வேர்ட்டை முழுவதுமாக கண்டுபிடிக்க இயலாது. இதனால் கீலாகிங் புரோகிராம் அனுப்பியவருக்கு தேவையான தகவல்கள் கிடைக்காது.

ஆன்டி கீ - லாகர் போன்ற மென்பொருள் உங்களுடைய முக்கியமான பாஸ்வேர்ட், பயனர் பெயர்கள் திருடு போகாமல் தடுத்து பாதுகாக்கிறது.

AntiLogger மென்பொருளை தரவிறக்க சுட்டி: 

Download AntiLogger For Free

No comments:

Post a Comment