Sunday, 3 January 2016

டீம் வியூவர் | கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் அணுகல் மென்பொருள்



கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் அக்சஸ் செய்ய பயன்படும் மென்பொருள் டீம் வியூவர். அதாவது நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்தாவாறே டீம் வீயூவர்மூலம் வேறொரு இடத்தில் உள்ள உங்களுடைய நண்பருடைய கம்ப்யூட்டரை அணுகுவதற்கு உருவாக்கப்பட்ட மென்பொருள்தான் டீம்வியூவர்.
team-viewer-software
டீம் வியூவர் | கம்ப்யூட்டர் to கம்ப்யூட்டர் 

இன்னும் எளிதாக கூறுவதென்றால், நண்பருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீன் அப்படியே உங்கள் ஸ்கிரீனுக்கு வந்துவிடும். அப்பொழுது உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்தவாறே உங்களுடைய கம்ப்யூட்டரின் மௌஸ், கீபோர்ட் இரண்டையும் பயன்படுத்தி, தொலைதூரத்தில் உள்ள நண்பரின் கம்ப்யூட்டரை இயக்கலாம்.   நீங்கள் இங்கிருந்து அவருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீனீல் செய்யும் வேலைகள் அனைத்தையும் அங்கிருந்தவாறே நண்பர் கவனிக்க முடியும்.

இதற்கு தேவை.

1. இன்டர்நெட் கனெக்சன்
2. டீம் வியூவர் மென்பொருள் (இரு கம்ப்யூட்டர்களிலும்)

டீம் வியூவர் பயன்படுத்தும் முறை: 


  • இருவருடைய கம்ப்யூட்டரிலும் முதலில் டீம்வியூர் மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். 
  • பிறகு Team Viewer மென்பொருளை Open செய்து கொள்ளவும். 
  • உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும். அதில் டீம் வீயூவர் ID மற்றும் பாஸ்வேர்ட் காட்டும். 
  • யாருடைய கம்ப்யூட்டரை அணுக வேண்டுமோ, அவருடைய டீம்வியூர் பாஸ்வேர்ட் மற்றும் டீம் வியூவர் ID யை மற்றவருக்கு அனுப்ப வேண்டும். 
  • (அலைபேசியிலோ அல்லது FB, Google Plus சாட்டிங்களோ அவற்றை அனுப்பிவிடலாம்)
  • டீம் வியூவர் ID, Password இரண்டையும் அணுக போகிறவரின் டீம்வியூர் விண்டோவில் கொடுக்க வேண்டும். 


அவ்வளவுதான். இப்பொழுது நண்பருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீன் உங்கள் ஸ்கீரினில் தெரிய ஆரம்பிக்கும். இப்பொழுது அவருடைய கணினியை நீங்கள் அணுக முடியும்.

டீம் வீயூவர் பயன்கள்:


  • நண்பருடைய கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமில் (அல்லது ஏதேனும் ஒரு வேலை) ஏதேனும் அவருக்கு தெரியவில்லை எனில், இங்கிருந்தே அதை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி சொல்லிக் கொடுக்கலாம். 
  • உங்களுடைய கம்ப்யூட்டரிலிருக்கும் ஃபைல்களை அவருடைய கம்ப்யூட்டருக்கு மாற்றிக்கொள்ளலாம். | File Transfer வசதி
  • ஒருவருக்கொருவர் தகவல்களை அனுப்ப முடியும் |  Chat  வசதி...
  • ஆன்லைன் மூலம் பேசிக்கொள்ளும் வசதி | Online Meeting 
  • Business Presentation பரிமாறிக்கொள்ள 

இப்படி நிறைய வசதிகள் இதில் உண்டு. தற்பொழுது டீம் வியூவர் மென்பொருளானது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களுக்கும் வெளிவந்திருக்கிறது. நீங்கள் ஆன்ட்ராய்ட்மொபைல் பயன்படுத்தினால், அதற்கான டீம் வியூவர் மென்பொருளும் உண்டு.

Widows, Apple Mac, Linux, Chrome OS போன்ற அனைத்து கம்ப்யூட்டர் OS களிலும் இயங்க கூடியது. iPhone, iPad, Android, Windows Phone 8 போன்ற மொபைல் போன்களுக்கும் டீம் வியூவர் மென்பொருள் உண்டு.

"டீம் வியூவர்" மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free Team viewer Software

No comments:

Post a Comment