வெக்டர் கிராபிக்ஸ் படங்கள் வரைய கூகிள் டிராயிங் நீட்சி
கூகிள் தரும் வசதிகள் பல. அவைகள் அனைத்தும் இலவசம். அதுபோன்ற ஒரு இலவச வசதிதான் கூகிள் டிராயிங் நீட்சி.
கூகிள் டிராயிங் நீட்சியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பம்போல் வெக்டர் கிராபிக்ஸ் படங்களை உருவாக்கலாம். அதுமட்டுமல்லாமல் Chart, Diagrams போன்றவற்றினை உருவாக்கும் வசதி இதில் உண்டு.
![]() |
வெக்டர் கிராபிக்ஸ் படம் |
கூகிள் டிராயிங் நீட்சியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பம்போல் வெக்டர் கிராபிக்ஸ் படங்களை உருவாக்கலாம். அதுமட்டுமல்லாமல் Chart, Diagrams போன்றவற்றினை உருவாக்கும் வசதி இதில் உண்டு.
கூகிள் டிரைவ் என்பது கணினியில் உள்ள Hard Drive போன்றது. ஒரே வித்தியாசம் உங்கள் கணினி ஹார்ட் டிரைவில் (computer hard disk) கோப்புகளை சேமித்தால் உங்கள் கணினியை இருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் கோப்புகளை அணுக முடியும்.
கூகிள் டிரைவில் சேமித்தால், உங்களுக்கு இணைய இணைப்புடன் கூடிய ஏதாவது ஒரு கணினி இருந்தாலே போதும். ஜிமெயிலை அணுகுவது போல, உங்களுடைய கூகிள் கணக்கில் சென்று கூகிள் டிரைவில் உள்ள கோப்புகளை (Google Drive files) உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எடுத்துப் பயன்படுத்திட முடியும். அவற்றை எடிட் செய்திடவும் முடியும்.
வெக்டர் ஓவியங்களை கூகிள் டிரைவில் சேமிக்கும் வசதி:
வெக்டர் ஓவியங்கள் வரையும் வசதி, கூகிள் டிரைவ் வசதியுடன் இணைந்தே கிடைக்கிறது.அதனால் கூகிள் டிராயிங் வசதியின் மூலம் நீங்கள் வரையும் ஓவியங்கள், கிராபிக்ஸ் படங்கள், சார்ட்கள், டயகிராம்ஸ்கள் அனைத்தும் (Drawing, Charts, Diagrams) கூகிள் டிரைவ் தானாகவே சேமிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.சேமிக்கப்பட்டவைகளை மீண்டும் மற்ற கணினிகளில் திறந்து பயன்படுத்திட முடியும்.
கூகிள் டிரைவில் நீங்கள் வரையும் ஓவியங்கள் சார்ட்கள் சேமிக்கப்படுவதால் உலகத்தில் எந்த ஒரு கணினியைப் பயன்படுத்தியும், உங்களது கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளவற்றை எடுத்துப் பயன்படுத்திட முடியும். அவற்றை மீண்டும் மாற்றம் செய்ய (Editing) முடியும்.
Google Drawing நீட்சியை கூகுள் குரோம் உலவியிலும் இணைத்துப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. வெக்டர் கிராபிக்ஸ் படங்கள் வரைய இந்தகூகிள் டிராயிங் நீட்சி பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment