Monday, 11 January 2016

ஃபேஸ்புக்கில் விரைவாக வெப்சைட் பக்கங்களை பகிர



பேஸ்புக் இணையதளத்திற்கு செல்லாமலேயே இணையத்தில் நீங்கள் பார்க்கும் வலைத்தளப் பக்கங்கள் (Web Page), படங்கள் (Images), வீடியோக்கள் (Videos)  அல்லது உங்களுக்குப் பிடித்த உள்ளடக்கத்தை உடனடியாக பேஸ்புக்கில் பகிர பயன்படுகிறது Facebook Share Bookmarklet  வசதி.

share on facebook
Share On Facebook

Share on Facebook வசதியை செயல்படுத்த


இந்த வசதியை உங்கள் பிரௌசரில் செயல்படுத்த இங்கு செல்லவும். 

இப்பொழுது பேஸ்புக்கில் லாகின் செய்ய உங்களுடைய பயனர் பெயர் (Email or Phone) மற்றும் கடவுச்சொல் கேட்கும். உங்கள் பேஸ்புக் பயனரைக் கொடுத்து லாகின் செய்துகொள்ளுங்கள். 

quickly share  pages videos prictures in FaceBook

நீங்கள் ஏற்கனவே லாகின் செய்திருந்தால் நேரடியாக உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு பக்கம் தோன்றும். 


அதில் உள்ள share on Face book என்ற பட்டனை இழுத்து (Drag and Drop உங்களுடைய பிரௌசரின் புக்மார்க் பாரில் (Book mark bar) மீது விட்டுவிடுங்கள். 

பிறகு share on Face book என்ற பட்டன் உங்கள் பிரௌசரில் இப்படி காட்சியளிக்கும். அவ்வளவுதான். 

Bookmark Bar -ல் Share on Facebook






நீங்கள் பிரௌஸ் செய்யும்பொழுது உங்களுக்குப் பிடித்த பக்கங்களை, படங்களை, வீடியோக்களை (web content, videos, pictures and more content) அல்லது வலைத்தளத்தில் உள்ள ஏதாவது ஒன்றை உங்களுடைய பேஸ்புக் நண்பர்களுக்கும் பகிர வேண்டுமானால், ஷேர் ஆன் பேஸ்புக் பட்டனை அழுத்தினாலே போதுமானது. 

நீங்கருள் விப்பட்ட பகுதியானது உங்கள் நண்பர்களுக்கு பேஸ்புக் தளத்திற்குச் செல்லாமலேயே அங்கு தோன்றும் விண்டோவில், லாகின் செய்து பகிர்ந்துவிடலாம். (ஏற்கனவே லாகின் செய்திருந்தால், லாகின் செய்யக் கேட்காது.) தோன்றும் விண்டோவில் Share  என்பதை அழுத்தி, உங்களுடைய பேஸ்புக் நண்பர்களுக்கு அவற்றை பகிர்ந்துவிடலாம்.

====================================================

ஃபேஸ்புக்கில் Fan Page உருவாக்க:


பேன்பேஜ் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறோம். நீங்கள் ஒரு வலைத்தளம் அல்லது வலைப்பூ வைத்திருந்தால், உங்கள் வலைத்தளத்திற்கான பேஸ்புக் பேன்பேஜ் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் உங்களுடைய நண்பர்களுக்கு, தகவல்களை (படங்கள், வீடியோக்கள், வலைப்பக்கங்கள்) பகிரலாம். 

Facebook Fan page உருவாக்க முகவரி: https://www.facebook.com/pages/create.php


  • இங்கு சென்று Company, Organization or Institution என இருப்பதில் கிளிக் செய்யவும்.
  •  choose a category என்பதில் உங்கள் வலைத்தளம் எந்த வகையானது என்பதை தேர்ந்தெடுக்கவும். 
  • கம்பெனி நேம் என்பதில் வலைத்தளம் அல்லது கம்பெனி பெயரை கொடுக்கவும்.
  • I Agree  என்பதில் டிக் மார்க் ஏற்படுத்திக்கொண்டு, Get started என்பதில் சொடுக்கவும்.
  • அடுத்து பேஸ்புக்கில் லாகின் செய்ய கேட்கும். லாகின் செய்து கொள்ளுங்கள். பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்கள் புதிய அக்கவுண்டை திறந்துகொள்ளவும். (நீங்கள் ஏற்கனவே பேஸ்புக்கில் லாகின் செய்திருந்தால் லாகின் செய்யச்சொல்லிக் கேட்காது.)
  • Add a description and website to improve the ranking of your Page in search என கேட்கும் பெட்டியில் உங்கள் நிறுவனம் அல்லது உங்களுடைய வலைத்தளத்தைப் பற்றிய விளக்கத்தை கொடுக்கவும்.
  • அடுத்துள்ள கட்டத்தில் உங்களுடைய வலைத்தளத்தின் முகவரியை (Website URL): கொடுக்கவும். 
  • Save Info  பட்டனை கிளிக் செய்யவும்.



  • அடுத்து உங்களுடைய ப்ரோபைல் பிக்சரை தேர்வு செய்யவும். அல்லது ஸ்கிப் கொடுக்கவும். (எப்பொழுது வேண்டுமானாலும் புரோபைல் பிக்சரை வைத்துக்கொள்ளலாம்)
  • அடுத்து Add to Favorite  கொடுக்கவும். அல்லது ஸ்கிப் கொடுத்துவிடலாம்.
  • உங்களுடை பேஸ்புக் பக்கம் நிறைய நபர்களைப் போய் சேர வேண்டுமெனில் பணம் கொடுத்தும் பிரபலமாக்கலாம். அதற்கான ஆப்சன் Reach More People. தேவையில்லை எனில் இதையும் ஸ்கிப் கொடுத்துவிடலாம். 

Facebook Fan Page -ன் பயன்கள்


உங்களுக்கான - உங்கள் வலைத்தளத்திற்கான பேஸ்புக் பக்கத்தை உருவாக்கிவிட்டீர்கள்.

இனி நீங்கள் உங்கள் வலைப்பூ அல்லது வலைத்தளத்தில் பகிரும் விடயங்கள் அனைத்து இப்பக்கத்திலும் பகிரலாம். 

உங்கள் பேஸ்புக் பேஜில் பகிரும் ஒவ்வொரு விடயமும், அதில் இணையும்-இணைந்திருக்கும் நண்பர்களுக்கு உடனடியாக பகிரப்படும். 

இதுபோன்ற உங்கள் வலைத்தளத்திற்காக ஒரு பேஸ்புக் பேஜ் உருவாக்கி அதன் மூலமும் நீங்கள் இணையத்தில் பார்வையிடும் வீடியோக்கள், படங்கள், மற்ற பயனுள்ள தகவல்களை உங்களுடைய பேஸ்புக் பேஜிலும் பகிரலாம். 

Facebook Fan Page for tholilnutpam.com


புதிய பேஸ்புக் பேஜ் இது. 



முந்தைய பேஸ்புக் பக்கத்திற்கான முகவரி இது


விருப்பபடுபவர்கள் இதில் இணைந்துகொள்ளலாம். இப்பக்கங்களில் இணைவோருக்கு, இத்தளத்தில் பகிரப்படும் பதிவுகள் அனைத்தும் உடனடியாக வந்தடையும். 

இவ்வாறு நீங்கள் இணையத்தில் விரும்பும் அனைத்தையும், இணையத்தில் காணும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பேஸ்புக் நண்பர்களுக்குப் பகிர முடியும். 


நன்றி நண்பர்களே...!

No comments:

Post a Comment