Thursday, 21 January 2016

உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான சிறந்த வெப் பிரௌசர்கள்..!



நண்பர்களுக்கு வணக்கம். இன்று பெரும்பாலும் இளைஞர்கள் பயன்படுத்தப்படும் மொபைல்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆன்ட்ராய்ட்.. ஆன்ட்ராய்ட் என்கிறார்களே.. அப்படி என்றால் என்ன என கேட்கிறீர்களா? ரொம்ப சுலபங்க..

the best anroid browser
Best Android Browser
இது மொபைல்களுக்கான ஒரு இயங்குதளம்.. அவ்வளவுதான். இதில் அடங்கியிருக்கும் வசதிகள் பல.. இந்த வகை மொபைகளில் பயன்படுத்தப்படும் வலை உலவிகளில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். அவற்றிற்கான தரவிறக்க இணைப்புடன் இங்கு கொடுத்துள்ளேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆன்ட்ராய் மொபைலுக்கான UC Browser

இது உலக அளவில் அதிகமானோரால் பயன்படுத்தப் படும் மொபைல் பிரௌசர்.. இது ஆன்ட்ராய்ட் தளங்களில் சிறப்பாக இயங்குகிறது
best browser for android mobile phone
Best Android Browsers

இதைத் தரவிறக்க: https://play.google.com/store/apps/details?id=com.UCMobile.intl

ஆன்ட்ராய்ட் மொபைலுக்கான Firefox Browser

உங்கள் கணினிக்கான சிறந்த இணைய உலாவியை(Internet browser) வழங்கிவந்த Mozilla நிறுவனத்தின் Android cellphone ற்கான பதிப்பு இது. இது வேகமாக இயங்கக்கூடியது. பயன்படுத்த எளிதானது. இந்த உலவியின் செக்யூரிட்டி(Security) மற்றும் பிரைவசி சிறப்புகள் (Privacy Feature) சிறந்த இணையப்(Online)பாதுகாப்பை தருகிறது.
ஆன்டார்ய்ட் மொபைலுக்கான ஃபையர் ஃபாக்ஸ் பிரௌசர் தரவிறக்க:Download Firefox Browser 

ஆன்ட்ராய் மொபைலுக்கான Skyfire Web Browser

Flash Support செய்வதுதான் இந்த இணைய உலவியின் சிறப்பம்சம். வேகமாகவும் செயல்படக் கூடியது. இந்த பிரௌசரில் சிறந்த்தொரு இணைய அனுபவத்தை இந்த உலாவியில் பெற்று மகிழலாம். தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள். 

தரவிறக்கச் சுட்டி: Download Skyfire Web Browser

https://play.google.com/store/apps/details?id=com.skyfire.browser

ஆன்ட்ராய்ட் மொபைலுக்கான Dolphin Browser HD

Dolphin Mini, Dolphin, Dolphin HD என மூன்று பதிப்புகளில் வெளிவந்திருக்கும் இந்த இணைய உலவி உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கு ஏற்றதாகும். இதன் வேகம் மற்ற இணைய உலவிகளுக்கு ஒரு சவால் விடுக்கும் அளவுக்கு உள்ளது. மிள எளிதாக கையாளும் விதமான கட்டமைப்பைக் கொண்டது. 

இந்த Dolphin Browser HD Web Browser தரவிறக்க: Download Dolphin Browser HD Web Browser

https://play.google.com/store/apps/details?id=mobi.mgeek.TunnyBrowser

ஆன்ட்ராய் மொபைலுக்கான Opera Mini Browser

அனைத்து வகை மொபைல்களிலும் இயங்கும் இந்த Opera Mini Browser  தான் இப்போது ஆல் அன் ஆல் அழகுராஜா... உண்மையாகவே அனைத்துவிட மொபைல்களில் நன்றாக இயங்குகிறது. ஆன்ட்ராய்ட் மொபைலுக்கான Browser ஆகவும் சூப்பராக இயங்கக் கூடியது. பயன்படுத்த எளிதாக இருக்கும் இந்த Opera Mini Browser தரவிறக்கிப் பயனடையுங்கள்.

Opera Mini Browser தரவிறக்கச் சுட்டி: Download Opera Mini Browser

web&blogger design

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

No comments:

Post a Comment