கீ போர்டைப் பயன்படுத்தி வேர்ட் டேபிள் போர்டிலிருந்து விரல்களை எடுக்காமல், மவுஸ் கொண்டு வேர்ட் ரிப்பன் மெனு செல்லாமலும், வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை உருவாக்கலாம். அதற்கான வழிகளையும், அதில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வுகளையும் பார்க்கலாம்.
டாகுமெண்ட்டில், புதிய வரி ஒன்றின் இடது மார்ஜின் அருகே, நான்கு ப்ளஸ் அடையாளத்தினை (+ + + +) அமைக்கவும். ஒவ்வொரு ப்ளஸ் அடையாளத்திற்கு முன்னும், ஒரு ஸ்பேஸ் இருக்க வேண்டும். அமைத்த பின்னர், என்டர் தட்டவும்.
அவ்வளவுதான். எளிமையான டேபிள் ஒன்று, ஒரே ஒரு படுக்கை வரிசையுடன் கிடைக்கும். ஆனால், இது டேபிள் அமைக்கும் வழியில் தொடக்கம் தான். ப்ளஸ் அடையாளத்திற்குப் பதிலாக நெட்டு பார் (|) (முன்பக்க சாய்வு கோடு தரும் கீ, ஷிப்ட் கீயுடன் அழுத்தும்போது கிடைப்பது) உங்களுடைய டேபிளின் நெட்டு வரிசை இன்னும் அகலமாக அமைக்கப்பட வேண்டும் என எண்ணினால், இந்த குறியீடுகளை டேஷ் உடன் இணைத்து அமைக்க வேண்டும். (|–|—|) (+——-+—–+) எடுத்துக் காட்டாக, ஒரு ப்ளஸ் அடையாளம், பத்து டேஷ் அடையாளம், அடுத்து ஒரு ப்ளஸ் அடையாளம், பின்னர் என்டர் என அழுத்தினால், அகலமான நெட்டு வரிசை கொண்ட டேபிள் கிடைக்கும்.
மேலே சொல்லப்பட்ட வழிகள் செயல்படவில்லை என்றால், இந்த வசதியினை, உங்கள் வேர்ட் புரோகிராமில், நீங்களோ அல்லது உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்திய ஒருவர் முடக்கியிருக்கலாம். அதனைச் சரி செய்து, இந்த வசதியினைப் பெறக் கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸை இயக்கவும். (வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின் கீழாக உள்ள Word Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 என்றால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, Options என்பதில் கிளிக் செய்திடவும்.).
2. இந்த டயலாக் பாக்ஸின் இடதுபுறத்தில் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், AutoCorrect என்பதில் கிளிக் செய்திடுக. வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில் AutoFormat As You Type என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
4. இங்கு Tables என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.
5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, மேலே கூறியபடி, டேபிள் ஒன்றை, கீ போர்ட் வழியாக நீங்கள் அமைக்க முடியும்.
வேர்ட் டேபிளில்
சில செயல்பாடுகள்
TAB: ஒரு வரிசையில் அடுத்த செல்லுக்குச் செல்ல
SHIFT+TAB: ஒரு வரிசையில் முந்தைய செல்லுக்குச் செல்ல
ALT+HOME: படுக்கை வரிசையில் உள்ள முதல் செல்லுக்குச் செல்ல
ALT+END: படுக்கை வரிசையில் உள்ள கடைசிசெல்லுக்குச் செல்ல
ALT+PAGE UP : நெட்டு வரிசையில் உள்ள முதல் செல் செல்ல
ALT+PAGE DOWN: நெட்டு வரிசையில் உள்ள கடைசி செல்லுக்குச் செல்ல
UP ARROW : முந்தைய படுக்கை வரிசை செல்ல
DOWN ARROW: அடுத்த படுக்கை வரிசை செல்ல

No comments:
Post a Comment