Saturday, 2 January 2016

வேர்ட் டிப்ஸ்!-வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்:


வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். ‘bulleted’ என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும். இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது.
இது சிறிய புள்ளியிலிருந்து எந்த வகை அடையாளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். A numbered list என்பது, இதே பட்டியலில், அடையாளப் படத்திற்குப் பதிலாக, வரிசையாக எண்கள் இருக்கும். தொடர் கருத்து அல்லது தகவல்களைத் தருகையில், இந்த லிஸ்ட் வகை பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், நம் கவனத்தைக் கவரும் வகையில் தரப்படும் தொடர்பற்ற, ஆனால், முக்கியமான தகவல்கள் புல்லட் இணைந்த பட்டியலாகத் தரப்பட வேண்டும். வேர்ட் இதனைத் தயாரித்து வழங்க எளிய வழிகளைக் கொண்டுள்ளது. முதலில், ஒவ்வொரு தகவலையும் டைப் செய்து, அதன் முடிவில் என்டர் அழுத்தவும். ஒரு தகவல், ஒரு வரிக்கு மேல் சென்றாலும், இறுதியில் மட்டுமே என்டர் அழுத்தவும். ஒவ்வொரு வரி முடிவிலும் என்டர் அழுத்த வேண்டாம்.
அனைத்து தகவல்களையும் பட்டியலாகத் தந்த பின்னர், மொத்தமாக அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ரிப்பனில், ஹோம் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து பாரா குரூப்பில் உள்ள Bullets tool மற்றும் Numbering tool என்பவற்றில், எது உங்களுக்கு தேவைப்படுமோ, அதில் கிளிக் செய்து பட்டியலை நிறைவு செய்திடவும்.
வேர்ட் டேபிளைப் பிரிக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் சில வேளைகளில் பெரிய அளவில் டேபிளை அமைத்து விடுவோம். அதன் பின்னர், அதனைப் பிரிக்க முயற்சித்தால், அதற்கான வழி எளிதில் கிடைக்காது. பல வேளைகளில், பலரும், படுக்கை வரிசைகளைக் காப்பி செய்து, பின் வேறொரு இடத்தில் பேஸ்ட் செய்து, புதிய டேபிளை உருவாக்குவார்கள். பழைய டேபிளிலிருந்து நீக்கப்பட்ட நெட்டு வரிசைகளை, அழித்துவிடுவார்கள். இதற்குப் பதிலாக, வேர்ட், இது போல டேபிளைப் பிரிப்பதற்கு, எளிய வழி ஒன்றைக் கொண்டுள்ளது.
1. ஏற்கனவே அமைந்த டேபிளில், எந்த படுக்கை வரிசையிலிருந்து டேபிளைப் பிரித்து அமைக்க வேண்டுமோ, எந்த வரிசை புதியதாய் அமைய இருக்கும் டேபிளின் முதல் வரிசையாக அமைய வேண்டுமோ, அதில் கர்சரைக் கொண்டு வைக்கவும்.
2. அடுத்து ரிப்பனில், Layout டேப்பினை கிளிக் செய்திடவும். (இந்த டேப், டேபிள் உள்ளாக கர்சர் அமைக்கப்பட்டிருந்தால் தான் காட்டப்படும்)
3. இங்கு Merge குரூப்பில் Split Tool என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போது வேர்ட், நீங்கள் கர்சரை வைத்த வரிசைக்கு மேலாக வழக்கமான வடிவில் பாரா ஒன்றை அமைக்கும். மேலாகவும், கீழாகவும் இரண்டு டேபிள்கள் கிடைக்கும். இவற்றைத் தனித்தனியே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment