கூகிள் வழங்கும் இலவச சேவைகளில் மிக முக்கியமானது ஜிமெயில். உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் இச்சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் இடம்பெற்றுள்ள வசதிகளும் ஏராளம்.
ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் அனுப்புவதோடு மட்டுமல்லாமல், அட்டாச்மெண்ட்டாக கோப்புகள் (Images, Documents) அனுப்ப முடியும்.
![]() |
Email அட்டாச்மெண்ட் கூகிள் டிரைவில் சேமிக்கும் வசதி |
Also Read: SMS மூலம் ஜிமெயில் பெறலாம்..!
அவ்வாறு மின்னஞ்சலுடன் இணைப்பட்டு வரும் கோப்புகளை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் சேமிப்பீர்கள். கம்ப்யூட்டருக்கு பதிலாக இப்பொழுது கூகிள் ட்ரைவிலும் கோப்புகளை சேமிக்கலாம்.
Also Read: கூகிள் டிரைவ் என்றால் என்ன?
அதாவது உங்களுக்கு வந்திருக்கும் மின்னஞ்சலில் உள்ள அட்டாச் பைல்களை நீங்கள் தரவிறக்கும்பொழுது (Download) தானாகவே உங்களுடைய கணக்கில் உள்ள கூகிள் டிரைவிலும் (Google Drive) அக்கோப்புகள் சேமிக்கப்படும்.
நன்மைகள்:
உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, அதனால் டவுன்லோட் செய்யபட்ட ஃபைல்கள் அழிந்து விட்டாலும், கூகிள் டிரைவில் உள்ள கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும். அவற்றை மீண்டும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த முறையில் வீடியோக்கள், படங்கள், பிடிஎப் கோப்புகள், வேர்ட் டாகுமெண்ட்கள், எக்சல் டாக்குமெண்ட்கள் (Videos, IMages, PDF files, Word documents, Excel documents) போன்ற கோப்புகளினை சேமிக்க முடியும் என கூகிள் அறிவித்துள்ளது.
Also Read: ஜிமெயிலில் தமிழில் எழுத..
இனி, நீங்கள் ஜிமெயில் டவுன்லோட் செய்த ஃபைலை (Downloaded file) தொலைத்து விட்டாலும், உடனடியாக கூகிள் டிரைவ் சென்று அவற்றை மீண்டும் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
உங்கள் ஜிமெயில் மூலம் கிடைக்கும் கோப்புகள் அனைத்திருக்கும் இனி இரட்டைப் பாதுகாப்புதான்.
Also Read: ஜிமெயிலில் டேப் இன்பாக் வசதி..!
No comments:
Post a Comment