Monday, 11 January 2016

கூகிள் கதை

கூகிள் கதை


Google Story In Tamil 

வணக்கம் நண்பர்களே..!

நாமெல்லாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்தளங்களில் முதன்மையானது கூகிள் தளம்தான். கூகிள் வழங்கும் பல்வேறு இலவச வசதிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். கூகிள் தளம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முடங்கிவிட்டால், உலகம் முழுவதும் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும் அளவிற்கு அதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை (Google Users)உள்ளது. அந்தளவிற்கு ஏராளமான இலவச வசதிகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது கூகிள். 

இத்தனை பெருமைமிகு கூகிள் நிறுவனம் (Google company) உருவான சுவராஷ்யமிக்க கதையை பார்ப்போம். 
Google founder Larry page
கூகிள் நிறுவனர் லாரி பேஜ்

கூகிள் என்ற பெயர் உருவானதே ஒரு சுவராஷ்யம்தான். "கோடிக்கணக்கான இணையப் பக்கங்கள் இருந்தாலும் நீங்கள் தேடிய தகவல்களை அவற்றிலிருந்து உடனடியாக தேடித் தந்துவிடுவோம்" என்ற அர்த்தத்தில்தான் கூகால் (googol) என்ற பெயரை வைத்தார்கள். 

பெயரில் தவறு: 

"ஒரு சிறிய தவறு, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்" என்பது கூகால் என்ற பெயரில் நடந்துவிட்டது. கூகால் என்ற பெயரை தவறுதலாக எழுதிவிட்டார்கள். தவறுதலாக எழுதிய பெயரே Google. 

தற்பொழுது Google என்ற பெயர் புதிய தலைமுறைகளிடம் மிகப் பிரபலமடைந்துவிட்டது.

கூகிள் நிறுவனர்கள்
(Google Founders)
Google நிறுவனத்தை நிறுவியர் லாரி பேஜ் (Larry Page). தனது நண்பர் செர்ஜிபிரின் (Sergey Brin) உடன், சாதாரண கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு, திறமையை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு  தொடங்கி கண்டிபிடித்த தேடல் தொழில்நுட்பந்ததான் கூகிள் சர்ச் என்ஜின். (Google Search Engine)

இந்த தேடல் நுட்பத்தை கண்டிபிடித்தபோது இதை ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்று காசு பார்த்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய இலக்காக இருந்தது. 

google's founder friend sergey brim
கூகுள் நிறுவனரின் நண்பர் செர்ஜி பிரின்

ஆனால் தேடல்நுட்பத்தைப் போய் இவ்வளவு விலைகொடுத்த வாங்க வேண்டுமா? என்ற எண்ணத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த நிறுவனங்கள் அவற்றை வாங்க முன்வரவில்லை. அவர்கள் எதிர்பார்த்த விலை போகவில்லை என்பதால், அதை மேலும் மேம்படுத்த எண்ணினார்கள். 

விளைவு? கூகிள் நிறுவனம் ஆரம்பமானது. இதற்கிடையே கூகிள் தேடல் இயந்திரம் உருவான காலத்திலும் யாஹூ(Yahoo Search Engine) உட்பட சில தேடல் இயந்திரங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் ஒரு முறைப்படுத்தப்பட்ட தேடல் முடிவுகள் கிடைக்கவில்லை. 

இணையப்பக்கங்களிலுள்ள வார்த்தைகளைக் கொண்டு அவற்றைத் தேடித்தந்தன. தேடலுக்கு தொடர்பில்லாத வலைத்தளங்களே அதிகமாக அதில் காணப்பட்டன. 

கூகிளின் நுட்பம்: 
(Google's technique)
இவ்வாறு கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் இணைத்தளங்களிலிருந்து ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தகவல்களைத் தேடிக்கொண்டிருந்த தேடல் நுட்பத்தில் ஒரு புதிய யுக்தியை கடைப்பிடிக்கத் தொடங்கியது. 

அதுதான் பேஜ் ரேங்க். வலைத்தளப் பக்கங்களை அதிகம் பார்வையிடப்பட்ட தளங்கள், அத்தளங்களிற்கு கிடைத்துள்ள வரவேற்புகள், பார்வையாளர்களின் விமர்சனங்கள், அந்தப் பக்கத்திற்கு பிற தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றைத் தரப்படுத்தி (PageRank) ஒரு வலைத்தளத்தை நொடியில் நூறு மடங்கிற்கும் குறைவான நேரத்தில் வரிசைப்படுத்தி தேடித்தந்துவிடும் நுட்பத்தை கையாண்டது கூகிள். 

அதனால் ஒரு கட்டத்தில் யாஹீவிடம் விலைப்போவதற்கான வாய்ப்புகள் வந்தது. அப்படி விலைபோயிருந்தால் நிச்சயம் யாஹூவின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் கூகிள். (ஆனால் நமக்கு இதுபோன்ற இலவச சேவைகள் கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே!)

கூகிள் நிர்வாகம்: 
(Google management:)
கூகிள் நிர்வாகம் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் வித்தியாசமானது. வேலைக்காக பணியாளர்கள் இல்லை.. பணியாளர்களுக்காகவே வேலை என்ற தாரக மந்திரத்தை பின்பற்றுகிறது. ஆம் நண்பர்களே..! கூகிளிலுள்ள உள்ள ஆயிரக்கணக்கான என்ஜினியர்கள் அவர்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை யாரும் கட்டுப்படுத்துவதில்லை. அவர்களை அவர்களே கட்டுபடுத்துகிறார்கள். அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலே வேலை செய்துகொள்கிறார்கள்.

சாதாரணமாக மற்ற நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு எதிராகவே உள்ளது. அதாவது பின்னாலிருந்து கண்காணித்துக்கொண்டே இருக்கும்  சூப்பர்வைசர்கள் இல்லை. அடிக்கடி 'என்னாச்சு. . வேலை முடிந்த்தா?..' என்று மிரட்டும் முதலாளிகளும் இல்லை. 

அவர்கள் நினைக்கும் நேரத்தில் வேலை பார்க்கலாம். புதிய புதிய யோசனைகள் எண்ணங்கள் எப்பொழுதுமே வரவேற்கப்படும். எந்த ஒரு நெருக்கடியும் கொடுப்பதில்லை.. காரணம் சுதந்திரமாக வேலை செய்ய விட்டால்தான் பொறுப்புடன் வேலை செய்வார்கள் என்பது கூகிளின் எண்ணம். 

அதைப்போலவே அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருகிறது. ஆக, ஒரு அலுவலகத்தில் பணிசெய்வது போன்ற எண்ணத்தை உருவாக்க விடாமல் பார்த்துக்கொள்கிறது. குடும்பம், குழுந்தை குட்டிகள், தனக்கு பிடித்த விருப்பமான செல்லப்பிராணிகள், தேவையான உணவு வகைகள், நீச்சல் குளம், விளையாட்டரங்கங்கள்...மருத்துவ வசதிகள்,  என பல்வேறு பட்ட வசதிகளை வழங்கி அவர்களை எப்பொழுதும் உற்சாகத்துடனே வைத்திருக்கிறது கூகிள். 

கீழிருக்கும் வீடியோவைப் பாருங்கள். அவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன என்ற ஆச்சர்யங்கள் நம்மை திக்குமுக்காடச் செய்கிறது. 


This article covered title of Google story, Google's technique, Google's management in Tamil.

நன்றி.

 -தங்கம்பழனி

No comments:

Post a Comment