ஏழைகளின் 'ஐபோன்' ஆன்ட்ராய்ட் என்றால் அது மிகையாகாது. நடுத்தர வர்க்கத்தினரும் வாங்க கூடிய விலை. அதிக பயன்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளது ஆன்ட்ராய்ட் போன்.
அத்தகைய பயன்மிக்க எளிய ஆன்ட்ராய்ட் போனில் அவசியம் என்ன அப்ளிகேஷன்கள் இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
 |
ஆன்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய 15 முக்கிய அப்ளிகேஷன்கள் |
ஆன்ட்ராய்ட் போனில் இயல்பிருப்பாகவே கூகிள் வழங்கும் சில அப்ளிகேஷன்கள் இருக்கும். YouTube, Google Search போன்றவை. அவை இல்லாமல் அவசியமாக இருக்க வேண்டிய சில அப்ளிகேஷன்கள் உண்டு. அவை என்னென்ன என பார்ப்போமா?
1. BarCode Scanner
இந்த அப்ளிகேஷன் இருந்தால், Anroid Market சென்று அப்சை தேடாமல், அதற்குரிய QR Code ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் நேரடியாக அந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய முடியும்.
2. Android Lostஅதிக விலை கொடுத்து வாங்கும் ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடிக்க இந்த அப்ளீகேஷன் உதவும். இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்துவிட்டு, அவர்களுடைய தளத்தில் நம்மைப் பற்றி தகவல்களை பதிந்துவிட்டால் போதுமானது.தகவல் பதியும்போது SMS Notification ல் மட்டும் உங்களுடைய சொந்த மொபைல் நம்பரை கொடுக்காமல், மறக்காமல் நண்பர்கள் அல்லது வீட்டில் உள்ளவர்களின் செல் நம்பரை கொடுக்க வேண்டும். அப்போதுதான் வேறு எங்காவது உங்களுடைய செல்போன் பயன்படுத்திக்கொண்டிருந்தால், உங்களுடைய நண்பரின் எண்ணுக்கு SMS வந்து சேரும்.
3. App to SD Free
போன் மெமரி குறைவாக இருக்கும் பொழுது, SD கார்டில் ஆப்ஸ் நிறுவ இந்த அப்ஸ் பயன்படுகிறது.
4. App Backup and Restore
இது தற்பொழுது ஆன்ட்ராய்ட் போனிலேயே இயல்பிருப்பாக உள்ளது. இல்லை என்றால் இந்த ஆப்சை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளலாம். Android போனில் உள்ள ஆப்சை "பேக்கப்" எடுக்க இந்த அப்ஸ் பயன்படுகிறது.
5. Android System cleaner
கம்ப்யூட்டருக்கு "சிஸ்டம் கிளீனர்" சாப்ட்வேர் இருப்பது போல, ஆன்ட்ராய்ட் போனுக்கும் "System Cleaner" ஆப்ஸ் உண்டு. இது தேவையற்ற ஆப்ஸ் இயங்குவதை நிறுத்தி, ஆன்ட்ராய்ட் போனை வேகமாக செயல்படுத்த பயன்படுகிறது.
6. Opera Mini
"ஓபரா" மினி பிரௌசர் ஆன்ட்ராய்ட் போனில் "Browsing" செய்யப் பயன்படும் ஒரு அருமையான உலவி ஆகும். தற்பொழுது அனைத்து பிரௌசர் அப்ளீகேஷன்களும் "Anroid Market" ல் கிடைக்கிறது.
இது தவிர சில முக்கிய அப்ஸ்களும் உண்டு.
1. Instagram
நீங்கள் எடுத்த போட்டோக்குக்கு வித விதமான Filters மற்றும் Effects களை கொடுத்து "இன்ஸ்டாகிராம்" அக்கவுண்ட் வைத்திருக்கும் நண்பர்களுக்கு பகிரலாம்.
2. Little Photo
உங்களுடைய போட்டோக்களுக்கு Film and Filter எஃபக்ட்களை கொடுக்க இந்த 'லிட்டில் போட்டோ' ஆப்ஸ் பயன்படுகிறது. இதில் 70க்கும் மேற்பட்ட போட்டோ ஃபில்டர்கள் உள்ளது. வித்தியாசமான இரு ஃபில்டர்களை "கம்பைன்" செய்து நீங்களே கூட புதிய போட்டோ பில்டர்களை உருவாக்கலாம்.
3. Olive Office Premium
Word, PPT, XLS போன்ற டாகுமெண்ட்களை ஆன்ட்ராய்ட் போனில் பார்வையிட இந்த ஆப்ஸ் பயன்படுகிறது. PDF கோப்புகளையும் இந்த ஆப்ஸ் வழியாக திறந்து படிக்கலாம்.
4. Google Reader
பிளாக்கர் போஸ்ட் உட்பட, அனைத்து விதமான லேட்டஸ்ட் நியூஸ்களையும் ஒரே இடத்தில் பயன்படுகிறது கூகிள் ரீடர் அப்ஸ்.
5. Battery Deffender - Battery Saver
இது ஆன்ட்ராய்ட் போனில் தேவையற்ற ப்ராசஸ்களையும், தேவையற்ற அப்ளிகேஷன்களை நிறுத்தி, "பேட்டரி சேவ்" செய்ய பயன்படுகிறது. நீங்கள் ஆன்ட்ராய்ட் போனை பயன்படுத்தாதபோது இயங்கி கொண்டிருக்கும் அப்ஸ்களை டிசேபிள் செய்கிறது.
6. viber
இது இலவச SMS கள் அனுப்பவும், போன் கால் செய்யவும் பயன்படும் ஆப்ஸ். தொடர்பு கொள்ளும் இரு போன்களும் இந்த அப்ளீகேஷனை நிறுவி இருக்க வேண்டும். Photos மற்றும் Videos களையும் Share செய்துகொள்ள முடியும்.
இதுமட்டுமல்லாமல், சோசியல் நெட்வொர்க் அப்களும் உண்டு.
மேற்கண்ட அனைத்து "ஆன்ட்ராய் அப்ஸ்" களும் முற்றிலும் இலவசம். உங்களுடைய ஆன்ட்ராய்ட் போன் மூலம் மிக எளிதாக டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும்.