Monday, 11 January 2016

ஆன்லைன் போட்டோ டிசைன் | Photo Punia



போட்டோக்களை டிசைன் செய்ய போட்டோஷாப் மென்பொருள் தான் வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுது போட்டோஷாப் மென்பொருள் இல்லாமலேயே ஆன்லைனிலேயே அருமையாக போட்டோ டிசைன் செய்ய முடியும்.

போட்டோ டிசைன் செய்ய ஆன்லைனில் நிறைய  போட்டோ எடிட்டிங் (Online Photo Editing / Design Websites ) இணையதளங்கள் உள்ளன. அது போன்றதொரு போட்டோ டிசைன் செய்யும் இணையதளம்தான் போட்டோ புனியா.

இந்த இணையதளத்தில் உங்களுடைய போட்டோக்களை தரவேற்றி (Upload) , அதில் உள்ள போட்டோ டிசைன்களை செலக்ட் செய்தால், அதிலிருக்கும் டிசைன் மாதிரியே உங்களுடைய போட்டோவும் மாறிவிடும்.

ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் பிண்ணனியுடன் உங்களுடைய போட்டோவை அழகு படுத்திக்கொள்ளலாம். 
Online Photo Design
போட்டோ டிசைன்
போட்டோ புனியாவில் Photo Design செய்யும் வழிமுறை:  

  • முதலில் இத்தளத்தில் உள்ள டிசைன்களில் ஏதேனும் ஒரு டிசைனை தேர்வு செய்யுங்கள்... 
  • பிறகு உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்யுங்கள்... பிறகு go என்பதை சொடுக்குங்கள்.. 
  • பிராசசிங் நடக்கும். 
  • இறுதியாக போட்டோ டிசைன் செய்யப்பட்டு, Save ஆப்சனுடன் கிடைக்கும். 
  • டிசைன் செய்யப்பட்டப் புகைப்பட்டத்தை சமூக இணைய தளங்களிலும் பகிர Share வசதியும் உண்டு. 
Photo Punia இணையதளத்தின் சுட்டி: போட்டோ டினை செய்ய - Photo Punia

Sunday, 10 January 2016

உங்களது மொபைலில் இலவசமாக டேட்டா,பணம்,ரீசார்ச் தரும் புதிய Mobile Application.


இன்று நம்முடைய மொபைலில் டேட்டா ரீசார்ச் செய்வது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. டேட்டாக்களுக்கான கட்டணமும் பல மடங்கு உயர்ந்து விட்டது.இன்நிலையில் இலவசமாக நமது மொபைல் எண்ணிக்கு டேட்டாவும்,கையில் பணமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அருமை! அப்படி ஒரு அருமையான Application தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க இருப்பது.
எவ்வாறு Download செய்து பயன்படுத்த வேண்டும்? 

முதலில் கீழ் காணும் Download Linkஐ click செய்யவும். Download TaskBuck Application click here ... 

Open browse ல் Google Chrome என்பதை தேர்வு செய்யவும். அதில் Play store என்பதை clik செய்து instal செய்யவும்.
பின்பு Application ஐ Open. செய்யவும்.
-->என்று மூன்று முறை கடந்த பிறகு
Start now என்பதை தேர்வு செய்யவும்.
அதில் உங்களது
Mobile number,
Email id,
Referral code: SZW1SGPI ஆகியவற்றை பதிவு செய்யவும்.அவ்வளவுதான் உங்களது Application தயார். 

எவ்வாறெல்லாம் பணம் பெறலாம்? 
*Application ல் வரும் Offer என்பதை Click செய்துஅதில் வரும் Application ஐ Download செய்யலாம்.(Download செய்து விட்டு நமது கணக்கில் பணம் ஏறியவுடன் நமக்கு தேவையில்லாத Application ஐ Uninstall செய்து விடலாம்.)
*Story என்பதை Click செய்து மற்ற நண்பர்களுக்கு அனுப்பலாம்.
*Share என்பதை Click செய்து உங்களது நண்பர்கள் இணைவதன் மூலமும் பணம் பெற முடியும்.

 எவ்வாறெல்லாம் பணத்தை பயன்படுத்தலாம்?
*நமது கணக்கில் உள்ள பணத்தை ரீசார்ச் செய்து கொள்ளலாம்.
*Paytm மூலமாக நமது வங்கி கணக்கில் பணமாக பெறலாம்.
*நமது கணக்கில் உள்ள டேட்டாவை ரீசார்ச் செய்து கொள்ளலாம்.

                                       நன்றி...

Saturday, 9 January 2016

பாஸ்வேர்டை திருடும் Key Logging தடுப்பது எப்படி?

:

கீ லாகிங் என்றால் என்ன? 

கீலாகிங் என்பது இணைய திருடர்களால் நிரலாக்கப்பட்ட ஒரு மென்பொருள். இந்த மென்பொருளை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கி, நீங்கள் உள்ளிடும் பாஸ்வேர்ட்களை திருடிவிடும். திருடிய பாஸ்வேர்டை உடனுக்குடன் அந்த புரோகிராமை இயக்குபவருக்கு அப்படியே அச்சு பிசகாமல் அவற்றை அனுப்பி வைத்துவிடும்.

கீ லாகிங் முறையில் திருடபடுபவைகள்

1. இமெயில் பாஸ்வேர்ட்,
2. பேங்க் அக்கவுண்ட் பாஸ்வேர்ட்
3. இணையத்தில் Password கட்டத்தில் நிரப்படுபவை அனைத்தும்.

அதாவது இன்டர்நெட்டில் நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள், யூசர் நேம்கள் போன்றவற்றை அப்படியே தன்னுள் பதிந்துகொண்டு, அவற்றை கீலாகிங் புரோகிராமை உங்கள் கம்ப்யூட்டரில் செட் செய்தவருக்கு மின்னஞ்சலாக அனுப்பி விடும்.

anti key-logger software free

கம்ப்யூட்டரில் கீ-லாகிங் நிரல் செயல்படுகிறதா என எப்படி கண்டுபிடிப்பது?

கீலாகர் புரோகிராம் கம்பூயூட்டரில் செயல்பட்டு கொண்டிருக்கிறதா என இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்.

1. CTR+ALT+DEL கீகளை ஒரே சமயத்தில் அழுத்தி TASK MANGER சென்று ஏதாவது தொடர்ப்பபில்லாத புதிய புரோகிராம் இயங்கி கொண்டிருக்கிறதா என பார்க்கலாம். அப்படி சந்தேகத்திற்குரிய புரோகிராமாக இருந்தால் அதை "END Process கொடுத்து நிறுத்த முடியும்.

2. ஆன்டி கீ லாகிங் மென்பொருள்மூலமும் கீ லாகிங் நிரல்களை கண்டுபிடிக்கலாம்.

கீலாகிங் நிரலை தடுப்பது எப்படி?

இதுபோன்ற கீலாகர் புரோகிராம்களுக்கு பாஸ்வேர்ட் செல்லாமல், நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்ட்களை உடனுக்குடன் Scrambling செய்து தடுப்பவைதான் ஆன்டி லாகர் மென்பொருள். இந்த வகை மென்பொருள் நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்ட்டை மற்ற கீலாகர்கள் உணரும் முன்பு அவற்றை சிதைத்துவிடுகிறது.

அதாவது, நீங்கள் தட்டச்சிடும் பாஸ்வேர்ட், பயனர் பெயர்கள் உடனுக்குடன் ஸ்கிராம்ப்ளிங் (சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை) செய்யபடுவதால் கீலாகர் புரோகிராம் ஆனது நீங்கள் தட்டச்சிடுவதை (Key Stroke)  என்ன எழுத்து என கண்டுபிடிக்க முடியாது. அவை கீ லாகர்களுக்கு சிதைக்கப்பட்ட எழுத்துக்களாகவே கிடைக்கும்.

எனவே கீ-லாகர் புரோகிராம்உங்களுடைய கம்ப்யூட்டரில் பதிய பட்டிருந்தாலும், ஆண்டி லாகர் மென்பொருள் நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ளிடும் பாஸ்வேர்ட் தகவல்களை சிதைத்து விடுவதால் சிதைந்த எழுத்துகளையே கி - லாகர் புரோகிராம் பெற முடியும்.

சிதைந்த எழுத்துகளை பெற்று, யாரும் பாஸ்வேர்ட்டை முழுவதுமாக கண்டுபிடிக்க இயலாது. இதனால் கீலாகிங் புரோகிராம் அனுப்பியவருக்கு தேவையான தகவல்கள் கிடைக்காது.

ஆன்டி கீ - லாகர் போன்ற மென்பொருள் உங்களுடைய முக்கியமான பாஸ்வேர்ட், பயனர் பெயர்கள் திருடு போகாமல் தடுத்து பாதுகாக்கிறது.

AntiLogger மென்பொருளை தரவிறக்க சுட்டி: 

Download AntiLogger For Free

உங்கள் பென்டிரைவ் காப்பியாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறதா !! அதை தடுக்க சில வழிகள் !!

பென்டிரைவ் என்பது தற்போது கணினி பயன்படுத்துபவர்களையும் தாண்டி, அனைவராலும் பயன்படுத்தப் படுகிறது. 

சில சமயங்களில் கணினியில் பென்டிரைவ்களை இணைத்து தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது (தகவல்களை காபி செய்யும்போது) நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் நமக்கு நேரம் விரயமாவதுடன், கோவமும் வரும். 

இந்தகைய சூழ்நிலைகளை தவிர்ப்பது எப்படி? கணினியில் இருந்து டேட்டாக்களை விரைவாக பென்டிரைவுக்கு காபி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று இங்கு காண்போம். 

பென்டிரைவை உங்கள் கணினியில் இணைத்து. MY COMPUTER-க்கு செல்லவும். 

அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.

பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். 

மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். 

இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். 

இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உங்களுக்கு பயன்படும்.

Friday, 8 January 2016

எப்படி ஃபேஸ்புக் கணக்கை முழுமையாக நீக்குவது?




எப்படி ஃபேஸ்புக் கணக்கைஃபேஸ்புக் பற்றி அறியாத இணைய பயன்பாட்டாளர்கள் அதிகமாக இருக்க மாட்டார்கள்.
புகழ்பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் தகவல்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள கொள்ள பயன்படுகிறது.
தற்போது ஃபேஸ்புக் தளம் தனது போட்டியாளரான கூகுளினை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி விட்டது. தற்போது உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட தளமாக உருவெடுத்துள்ளது.
இந்த தளத்தில் பகிரப்படும் பகிர்வுகள் பல தவறானவைகளாகவே உள்ளது. மேலும் ஆபாசமான செய்திகளும் அதிகம் பகிரப்படுகிறன. அதற்கும் மேலாக நம்முடைய சுயதகவல்கள் திருடப்படுகிறன என்பது மிகவும் வருத்தம் அளிக்ககூடிய ஒன்றாக உள்ளது.
இதனால் பலர் தங்களுடைய ஃபேஸ்புக் கணக்கினை நீக்க முடிவு செய்துள்ளனர். ஃபேஸ்புக் கணக்கில் இருந்து விருப்பதேர்வினை பயன்படுத்தி நீக்க முயன்றால் நம்முடைய தகவல்கள் மறைக்கபடுமே தவிர, நம்முடைய கணக்கு முழுமையாக நீக்கப்படமாட்டாது.
 
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று ஃபேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் மேலே குறிப்பிட்டுள்ள படத்தில் உள்ளவாறு தோன்றும் அதில் Delete my account என்னும் பொத்தானை அழுத்தவும்.
 
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் கொடுக்கப்பட்டுள்ள அடையாள சொற்களை உள்ளிட்டு OK பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் வேலை முடிந்தது.
ஆனால் நீங்கள் ஃபேஸ்புக் கணக்கினை நீக்கும் முன் அதில் உள்ள தகவல்களை நகல் எடுத்து வைத்து கொள்ளவும். நீங்கள் செய்த நாளிலிருந்து 14 நாட்கள் வரை குறிப்பிட்ட ஃபேஸ்புக் கணக்கில் உள்நுழையக்கூடாது. அவ்வாறு இருந்தால் மட்டுமே ஃபேஸ்புக் கணக்கு நீக்கம் செய்யப்படும்.

Tuesday, 5 January 2016

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய..?


உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய..?



இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos) வெளியானால் என்னாவது? சில நேரம் குடும்பப் புகைப்படங்கள் கூட மோசமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் புகைப்படத்துறையில் இருப்பவரெனின் எடுக்கும் புகைப்படங்களுக்கு நீங்கள் மட்டுமே அதன் சொந்தக்காரராக இருப்பீர்கள்.

 உங்கள் புகைப்படத்தில் காப்பிரைட் (copyright and watermark ) போன்று எதாவது வாசகத்துடன் அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பீர்கள்.ஆனால் அது இணையத்திலேயே பல இடங்களில் பல பேரால் நகல் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும். இதையெல்லாம் எப்படி கண்டறிவது?

இதற்கு தான் TinEye என்று ஒரு புதுமையான இணையதளம் உள்ளது. உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளளன என்று விரைவாக தேடித்தரும். உங்களுக்கு வேண்டிய புகைப்படத்தின் இணைப்பு கொடுத்ததும் அல்லது உங்கள் கணிப்பொறியில் இருந்து அப்லோட் (upload) செய்தும் தேடலாம். இத்தளம் உங்களின் புகைப்படத்தின் டிஜிட்டல் தன்மையை (digital signature) புரிந்து கொண்டு தேடுகிறது.

இதன் மூலம் தேடுபொறிகளில் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒளிப்படங்களை வினாடிகளில் கண்டுபிடித்து தரும். மேலும் உங்கள் புகைப்படங்களை சிறிது மாற்றம் செய்து பயன்படுத்திருந்தாலும் கண்டுபிடித்துவிடும். இது இலவச சேவை தான். இதனை வலை உலவிகளில் நீட்சியாகவும் (addon IE/firefox) பயன்படுத்தி எளிதாக தேடலாம்.

எந்த புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து கொள்ளாதவர்களும் எதாவது இணையத்தில் தரவிறக்கிய படங்களையும் தேடலாம். முடிவுகள் எந்தெந்த இணையதளங்களில் காணப்படுகிறது என்று அறியலாம்.

இணையதள முகவரி :  http://www.tineye.com/

Sunday, 3 January 2016

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!


ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
aadhar-online
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

டீம் வியூவர் | கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் அணுகல் மென்பொருள்



கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் அக்சஸ் செய்ய பயன்படும் மென்பொருள் டீம் வியூவர். அதாவது நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்தாவாறே டீம் வீயூவர்மூலம் வேறொரு இடத்தில் உள்ள உங்களுடைய நண்பருடைய கம்ப்யூட்டரை அணுகுவதற்கு உருவாக்கப்பட்ட மென்பொருள்தான் டீம்வியூவர்.
team-viewer-software
டீம் வியூவர் | கம்ப்யூட்டர் to கம்ப்யூட்டர் 

இன்னும் எளிதாக கூறுவதென்றால், நண்பருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீன் அப்படியே உங்கள் ஸ்கிரீனுக்கு வந்துவிடும். அப்பொழுது உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்தவாறே உங்களுடைய கம்ப்யூட்டரின் மௌஸ், கீபோர்ட் இரண்டையும் பயன்படுத்தி, தொலைதூரத்தில் உள்ள நண்பரின் கம்ப்யூட்டரை இயக்கலாம்.   நீங்கள் இங்கிருந்து அவருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீனீல் செய்யும் வேலைகள் அனைத்தையும் அங்கிருந்தவாறே நண்பர் கவனிக்க முடியும்.

இதற்கு தேவை.

1. இன்டர்நெட் கனெக்சன்
2. டீம் வியூவர் மென்பொருள் (இரு கம்ப்யூட்டர்களிலும்)

டீம் வியூவர் பயன்படுத்தும் முறை: 


  • இருவருடைய கம்ப்யூட்டரிலும் முதலில் டீம்வியூர் மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். 
  • பிறகு Team Viewer மென்பொருளை Open செய்து கொள்ளவும். 
  • உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும். அதில் டீம் வீயூவர் ID மற்றும் பாஸ்வேர்ட் காட்டும். 
  • யாருடைய கம்ப்யூட்டரை அணுக வேண்டுமோ, அவருடைய டீம்வியூர் பாஸ்வேர்ட் மற்றும் டீம் வியூவர் ID யை மற்றவருக்கு அனுப்ப வேண்டும். 
  • (அலைபேசியிலோ அல்லது FB, Google Plus சாட்டிங்களோ அவற்றை அனுப்பிவிடலாம்)
  • டீம் வியூவர் ID, Password இரண்டையும் அணுக போகிறவரின் டீம்வியூர் விண்டோவில் கொடுக்க வேண்டும். 


அவ்வளவுதான். இப்பொழுது நண்பருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீன் உங்கள் ஸ்கீரினில் தெரிய ஆரம்பிக்கும். இப்பொழுது அவருடைய கணினியை நீங்கள் அணுக முடியும்.

டீம் வீயூவர் பயன்கள்:


  • நண்பருடைய கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமில் (அல்லது ஏதேனும் ஒரு வேலை) ஏதேனும் அவருக்கு தெரியவில்லை எனில், இங்கிருந்தே அதை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி சொல்லிக் கொடுக்கலாம். 
  • உங்களுடைய கம்ப்யூட்டரிலிருக்கும் ஃபைல்களை அவருடைய கம்ப்யூட்டருக்கு மாற்றிக்கொள்ளலாம். | File Transfer வசதி
  • ஒருவருக்கொருவர் தகவல்களை அனுப்ப முடியும் |  Chat  வசதி...
  • ஆன்லைன் மூலம் பேசிக்கொள்ளும் வசதி | Online Meeting 
  • Business Presentation பரிமாறிக்கொள்ள 

இப்படி நிறைய வசதிகள் இதில் உண்டு. தற்பொழுது டீம் வியூவர் மென்பொருளானது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களுக்கும் வெளிவந்திருக்கிறது. நீங்கள் ஆன்ட்ராய்ட்மொபைல் பயன்படுத்தினால், அதற்கான டீம் வியூவர் மென்பொருளும் உண்டு.

Widows, Apple Mac, Linux, Chrome OS போன்ற அனைத்து கம்ப்யூட்டர் OS களிலும் இயங்க கூடியது. iPhone, iPad, Android, Windows Phone 8 போன்ற மொபைல் போன்களுக்கும் டீம் வியூவர் மென்பொருள் உண்டு.

"டீம் வியூவர்" மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free Team viewer Software

Saturday, 2 January 2016

வேர்ட் டிப்ஸ்!-வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்:


வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். ‘bulleted’ என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும். இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது.
இது சிறிய புள்ளியிலிருந்து எந்த வகை அடையாளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். A numbered list என்பது, இதே பட்டியலில், அடையாளப் படத்திற்குப் பதிலாக, வரிசையாக எண்கள் இருக்கும். தொடர் கருத்து அல்லது தகவல்களைத் தருகையில், இந்த லிஸ்ட் வகை பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், நம் கவனத்தைக் கவரும் வகையில் தரப்படும் தொடர்பற்ற, ஆனால், முக்கியமான தகவல்கள் புல்லட் இணைந்த பட்டியலாகத் தரப்பட வேண்டும். வேர்ட் இதனைத் தயாரித்து வழங்க எளிய வழிகளைக் கொண்டுள்ளது. முதலில், ஒவ்வொரு தகவலையும் டைப் செய்து, அதன் முடிவில் என்டர் அழுத்தவும். ஒரு தகவல், ஒரு வரிக்கு மேல் சென்றாலும், இறுதியில் மட்டுமே என்டர் அழுத்தவும். ஒவ்வொரு வரி முடிவிலும் என்டர் அழுத்த வேண்டாம்.
அனைத்து தகவல்களையும் பட்டியலாகத் தந்த பின்னர், மொத்தமாக அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ரிப்பனில், ஹோம் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து பாரா குரூப்பில் உள்ள Bullets tool மற்றும் Numbering tool என்பவற்றில், எது உங்களுக்கு தேவைப்படுமோ, அதில் கிளிக் செய்து பட்டியலை நிறைவு செய்திடவும்.
வேர்ட் டேபிளைப் பிரிக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் சில வேளைகளில் பெரிய அளவில் டேபிளை அமைத்து விடுவோம். அதன் பின்னர், அதனைப் பிரிக்க முயற்சித்தால், அதற்கான வழி எளிதில் கிடைக்காது. பல வேளைகளில், பலரும், படுக்கை வரிசைகளைக் காப்பி செய்து, பின் வேறொரு இடத்தில் பேஸ்ட் செய்து, புதிய டேபிளை உருவாக்குவார்கள். பழைய டேபிளிலிருந்து நீக்கப்பட்ட நெட்டு வரிசைகளை, அழித்துவிடுவார்கள். இதற்குப் பதிலாக, வேர்ட், இது போல டேபிளைப் பிரிப்பதற்கு, எளிய வழி ஒன்றைக் கொண்டுள்ளது.
1. ஏற்கனவே அமைந்த டேபிளில், எந்த படுக்கை வரிசையிலிருந்து டேபிளைப் பிரித்து அமைக்க வேண்டுமோ, எந்த வரிசை புதியதாய் அமைய இருக்கும் டேபிளின் முதல் வரிசையாக அமைய வேண்டுமோ, அதில் கர்சரைக் கொண்டு வைக்கவும்.
2. அடுத்து ரிப்பனில், Layout டேப்பினை கிளிக் செய்திடவும். (இந்த டேப், டேபிள் உள்ளாக கர்சர் அமைக்கப்பட்டிருந்தால் தான் காட்டப்படும்)
3. இங்கு Merge குரூப்பில் Split Tool என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போது வேர்ட், நீங்கள் கர்சரை வைத்த வரிசைக்கு மேலாக வழக்கமான வடிவில் பாரா ஒன்றை அமைக்கும். மேலாகவும், கீழாகவும் இரண்டு டேபிள்கள் கிடைக்கும். இவற்றைத் தனித்தனியே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, 1 January 2016

பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க


சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.

பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.






பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது



01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்



02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.



03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.





II  அழிக்க முடியாத பைல்களை அழிக்க 



சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.



01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும்



02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  



03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.



04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.



05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.