Monday, 11 January 2016

கூகிள் கதை

கூகிள் கதை


Google Story In Tamil 

வணக்கம் நண்பர்களே..!

நாமெல்லாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையத்தளங்களில் முதன்மையானது கூகிள் தளம்தான். கூகிள் வழங்கும் பல்வேறு இலவச வசதிகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். கூகிள் தளம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் முடங்கிவிட்டால், உலகம் முழுவதும் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும் அளவிற்கு அதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை (Google Users)உள்ளது. அந்தளவிற்கு ஏராளமான இலவச வசதிகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறது கூகிள். 

இத்தனை பெருமைமிகு கூகிள் நிறுவனம் (Google company) உருவான சுவராஷ்யமிக்க கதையை பார்ப்போம். 
Google founder Larry page
கூகிள் நிறுவனர் லாரி பேஜ்

கூகிள் என்ற பெயர் உருவானதே ஒரு சுவராஷ்யம்தான். "கோடிக்கணக்கான இணையப் பக்கங்கள் இருந்தாலும் நீங்கள் தேடிய தகவல்களை அவற்றிலிருந்து உடனடியாக தேடித் தந்துவிடுவோம்" என்ற அர்த்தத்தில்தான் கூகால் (googol) என்ற பெயரை வைத்தார்கள். 

பெயரில் தவறு: 

"ஒரு சிறிய தவறு, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும்" என்பது கூகால் என்ற பெயரில் நடந்துவிட்டது. கூகால் என்ற பெயரை தவறுதலாக எழுதிவிட்டார்கள். தவறுதலாக எழுதிய பெயரே Google. 

தற்பொழுது Google என்ற பெயர் புதிய தலைமுறைகளிடம் மிகப் பிரபலமடைந்துவிட்டது.

கூகிள் நிறுவனர்கள்
(Google Founders)
Google நிறுவனத்தை நிறுவியர் லாரி பேஜ் (Larry Page). தனது நண்பர் செர்ஜிபிரின் (Sergey Brin) உடன், சாதாரண கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு, திறமையை மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு  தொடங்கி கண்டிபிடித்த தேடல் தொழில்நுட்பந்ததான் கூகிள் சர்ச் என்ஜின். (Google Search Engine)

இந்த தேடல் நுட்பத்தை கண்டிபிடித்தபோது இதை ஒரு பெரிய நிறுவனத்திற்கு விற்று காசு பார்த்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய இலக்காக இருந்தது. 

google's founder friend sergey brim
கூகுள் நிறுவனரின் நண்பர் செர்ஜி பிரின்

ஆனால் தேடல்நுட்பத்தைப் போய் இவ்வளவு விலைகொடுத்த வாங்க வேண்டுமா? என்ற எண்ணத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த நிறுவனங்கள் அவற்றை வாங்க முன்வரவில்லை. அவர்கள் எதிர்பார்த்த விலை போகவில்லை என்பதால், அதை மேலும் மேம்படுத்த எண்ணினார்கள். 

விளைவு? கூகிள் நிறுவனம் ஆரம்பமானது. இதற்கிடையே கூகிள் தேடல் இயந்திரம் உருவான காலத்திலும் யாஹூ(Yahoo Search Engine) உட்பட சில தேடல் இயந்திரங்கள் இருந்தன. ஆனால் அவற்றில் ஒரு முறைப்படுத்தப்பட்ட தேடல் முடிவுகள் கிடைக்கவில்லை. 

இணையப்பக்கங்களிலுள்ள வார்த்தைகளைக் கொண்டு அவற்றைத் தேடித்தந்தன. தேடலுக்கு தொடர்பில்லாத வலைத்தளங்களே அதிகமாக அதில் காணப்பட்டன. 

கூகிளின் நுட்பம்: 
(Google's technique)
இவ்வாறு கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் இணைத்தளங்களிலிருந்து ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தகவல்களைத் தேடிக்கொண்டிருந்த தேடல் நுட்பத்தில் ஒரு புதிய யுக்தியை கடைப்பிடிக்கத் தொடங்கியது. 

அதுதான் பேஜ் ரேங்க். வலைத்தளப் பக்கங்களை அதிகம் பார்வையிடப்பட்ட தளங்கள், அத்தளங்களிற்கு கிடைத்துள்ள வரவேற்புகள், பார்வையாளர்களின் விமர்சனங்கள், அந்தப் பக்கத்திற்கு பிற தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அவற்றைத் தரப்படுத்தி (PageRank) ஒரு வலைத்தளத்தை நொடியில் நூறு மடங்கிற்கும் குறைவான நேரத்தில் வரிசைப்படுத்தி தேடித்தந்துவிடும் நுட்பத்தை கையாண்டது கூகிள். 

அதனால் ஒரு கட்டத்தில் யாஹீவிடம் விலைப்போவதற்கான வாய்ப்புகள் வந்தது. அப்படி விலைபோயிருந்தால் நிச்சயம் யாஹூவின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் கூகிள். (ஆனால் நமக்கு இதுபோன்ற இலவச சேவைகள் கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே!)

கூகிள் நிர்வாகம்: 
(Google management:)
கூகிள் நிர்வாகம் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் வித்தியாசமானது. வேலைக்காக பணியாளர்கள் இல்லை.. பணியாளர்களுக்காகவே வேலை என்ற தாரக மந்திரத்தை பின்பற்றுகிறது. ஆம் நண்பர்களே..! கூகிளிலுள்ள உள்ள ஆயிரக்கணக்கான என்ஜினியர்கள் அவர்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை யாரும் கட்டுப்படுத்துவதில்லை. அவர்களை அவர்களே கட்டுபடுத்துகிறார்கள். அவர்களின் விருப்பத்தின் அடிப்படையிலே வேலை செய்துகொள்கிறார்கள்.

சாதாரணமாக மற்ற நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு எதிராகவே உள்ளது. அதாவது பின்னாலிருந்து கண்காணித்துக்கொண்டே இருக்கும்  சூப்பர்வைசர்கள் இல்லை. அடிக்கடி 'என்னாச்சு. . வேலை முடிந்த்தா?..' என்று மிரட்டும் முதலாளிகளும் இல்லை. 

அவர்கள் நினைக்கும் நேரத்தில் வேலை பார்க்கலாம். புதிய புதிய யோசனைகள் எண்ணங்கள் எப்பொழுதுமே வரவேற்கப்படும். எந்த ஒரு நெருக்கடியும் கொடுப்பதில்லை.. காரணம் சுதந்திரமாக வேலை செய்ய விட்டால்தான் பொறுப்புடன் வேலை செய்வார்கள் என்பது கூகிளின் எண்ணம். 

அதைப்போலவே அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருகிறது. ஆக, ஒரு அலுவலகத்தில் பணிசெய்வது போன்ற எண்ணத்தை உருவாக்க விடாமல் பார்த்துக்கொள்கிறது. குடும்பம், குழுந்தை குட்டிகள், தனக்கு பிடித்த விருப்பமான செல்லப்பிராணிகள், தேவையான உணவு வகைகள், நீச்சல் குளம், விளையாட்டரங்கங்கள்...மருத்துவ வசதிகள்,  என பல்வேறு பட்ட வசதிகளை வழங்கி அவர்களை எப்பொழுதும் உற்சாகத்துடனே வைத்திருக்கிறது கூகிள். 

கீழிருக்கும் வீடியோவைப் பாருங்கள். அவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன என்ற ஆச்சர்யங்கள் நம்மை திக்குமுக்காடச் செய்கிறது. 


This article covered title of Google story, Google's technique, Google's management in Tamil.

நன்றி.

 -தங்கம்பழனி

ஜிமெயில் அட்டாச்மெண்ட் ஃபைல்களை கூகிள் டிரைவில் சேமிக்கும் வசதி



கூகிள் வழங்கும் இலவச சேவைகளில் மிக முக்கியமானது ஜிமெயில். உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் இச்சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் இடம்பெற்றுள்ள வசதிகளும் ஏராளம். 

ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் அனுப்புவதோடு மட்டுமல்லாமல்,  அட்டாச்மெண்ட்டாக கோப்புகள் (Images, Documents) அனுப்ப முடியும்.
email attachment save to google drive
Email அட்டாச்மெண்ட் கூகிள் டிரைவில் சேமிக்கும் வசதி


அவ்வாறு மின்னஞ்சலுடன் இணைப்பட்டு வரும் கோப்புகளை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் சேமிப்பீர்கள். கம்ப்யூட்டருக்கு பதிலாக இப்பொழுது கூகிள் ட்ரைவிலும் கோப்புகளை சேமிக்கலாம். 


அதாவது உங்களுக்கு வந்திருக்கும் மின்னஞ்சலில் உள்ள அட்டாச் பைல்களை நீங்கள் தரவிறக்கும்பொழுது (Download)  தானாகவே உங்களுடைய கணக்கில் உள்ள கூகிள் டிரைவிலும் (Google Drive) அக்கோப்புகள் சேமிக்கப்படும். 

நன்மைகள்: 

உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு, அதனால் டவுன்லோட் செய்யபட்ட ஃபைல்கள் அழிந்து விட்டாலும், கூகிள் டிரைவில் உள்ள கோப்புகள் பாதுகாப்பாக இருக்கும். அவற்றை மீண்டும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். 

இந்த முறையில் வீடியோக்கள், படங்கள், பிடிஎப் கோப்புகள், வேர்ட் டாகுமெண்ட்கள், எக்சல் டாக்குமெண்ட்கள் (Videos, IMages, PDF files, Word documents, Excel documents) போன்ற கோப்புகளினை சேமிக்க முடியும் என கூகிள் அறிவித்துள்ளது. 


இனி, நீங்கள் ஜிமெயில் டவுன்லோட் செய்த ஃபைலை (Downloaded file) தொலைத்து விட்டாலும், உடனடியாக கூகிள் டிரைவ் சென்று அவற்றை மீண்டும் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

உங்கள் ஜிமெயில் மூலம் கிடைக்கும் கோப்புகள் அனைத்திருக்கும் இனி இரட்டைப் பாதுகாப்புதான். 



ஃபேஸ்புக்கில் விரைவாக வெப்சைட் பக்கங்களை பகிர



பேஸ்புக் இணையதளத்திற்கு செல்லாமலேயே இணையத்தில் நீங்கள் பார்க்கும் வலைத்தளப் பக்கங்கள் (Web Page), படங்கள் (Images), வீடியோக்கள் (Videos)  அல்லது உங்களுக்குப் பிடித்த உள்ளடக்கத்தை உடனடியாக பேஸ்புக்கில் பகிர பயன்படுகிறது Facebook Share Bookmarklet  வசதி.

share on facebook
Share On Facebook

Share on Facebook வசதியை செயல்படுத்த


இந்த வசதியை உங்கள் பிரௌசரில் செயல்படுத்த இங்கு செல்லவும். 

இப்பொழுது பேஸ்புக்கில் லாகின் செய்ய உங்களுடைய பயனர் பெயர் (Email or Phone) மற்றும் கடவுச்சொல் கேட்கும். உங்கள் பேஸ்புக் பயனரைக் கொடுத்து லாகின் செய்துகொள்ளுங்கள். 

quickly share  pages videos prictures in FaceBook

நீங்கள் ஏற்கனவே லாகின் செய்திருந்தால் நேரடியாக உங்களுக்கு கீழ்கண்டவாறு ஒரு பக்கம் தோன்றும். 


அதில் உள்ள share on Face book என்ற பட்டனை இழுத்து (Drag and Drop உங்களுடைய பிரௌசரின் புக்மார்க் பாரில் (Book mark bar) மீது விட்டுவிடுங்கள். 

பிறகு share on Face book என்ற பட்டன் உங்கள் பிரௌசரில் இப்படி காட்சியளிக்கும். அவ்வளவுதான். 

Bookmark Bar -ல் Share on Facebook






நீங்கள் பிரௌஸ் செய்யும்பொழுது உங்களுக்குப் பிடித்த பக்கங்களை, படங்களை, வீடியோக்களை (web content, videos, pictures and more content) அல்லது வலைத்தளத்தில் உள்ள ஏதாவது ஒன்றை உங்களுடைய பேஸ்புக் நண்பர்களுக்கும் பகிர வேண்டுமானால், ஷேர் ஆன் பேஸ்புக் பட்டனை அழுத்தினாலே போதுமானது. 

நீங்கருள் விப்பட்ட பகுதியானது உங்கள் நண்பர்களுக்கு பேஸ்புக் தளத்திற்குச் செல்லாமலேயே அங்கு தோன்றும் விண்டோவில், லாகின் செய்து பகிர்ந்துவிடலாம். (ஏற்கனவே லாகின் செய்திருந்தால், லாகின் செய்யக் கேட்காது.) தோன்றும் விண்டோவில் Share  என்பதை அழுத்தி, உங்களுடைய பேஸ்புக் நண்பர்களுக்கு அவற்றை பகிர்ந்துவிடலாம்.

====================================================

ஃபேஸ்புக்கில் Fan Page உருவாக்க:


பேன்பேஜ் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறோம். நீங்கள் ஒரு வலைத்தளம் அல்லது வலைப்பூ வைத்திருந்தால், உங்கள் வலைத்தளத்திற்கான பேஸ்புக் பேன்பேஜ் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் உங்களுடைய நண்பர்களுக்கு, தகவல்களை (படங்கள், வீடியோக்கள், வலைப்பக்கங்கள்) பகிரலாம். 

Facebook Fan page உருவாக்க முகவரி: https://www.facebook.com/pages/create.php


  • இங்கு சென்று Company, Organization or Institution என இருப்பதில் கிளிக் செய்யவும்.
  •  choose a category என்பதில் உங்கள் வலைத்தளம் எந்த வகையானது என்பதை தேர்ந்தெடுக்கவும். 
  • கம்பெனி நேம் என்பதில் வலைத்தளம் அல்லது கம்பெனி பெயரை கொடுக்கவும்.
  • I Agree  என்பதில் டிக் மார்க் ஏற்படுத்திக்கொண்டு, Get started என்பதில் சொடுக்கவும்.
  • அடுத்து பேஸ்புக்கில் லாகின் செய்ய கேட்கும். லாகின் செய்து கொள்ளுங்கள். பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்கள் புதிய அக்கவுண்டை திறந்துகொள்ளவும். (நீங்கள் ஏற்கனவே பேஸ்புக்கில் லாகின் செய்திருந்தால் லாகின் செய்யச்சொல்லிக் கேட்காது.)
  • Add a description and website to improve the ranking of your Page in search என கேட்கும் பெட்டியில் உங்கள் நிறுவனம் அல்லது உங்களுடைய வலைத்தளத்தைப் பற்றிய விளக்கத்தை கொடுக்கவும்.
  • அடுத்துள்ள கட்டத்தில் உங்களுடைய வலைத்தளத்தின் முகவரியை (Website URL): கொடுக்கவும். 
  • Save Info  பட்டனை கிளிக் செய்யவும்.



  • அடுத்து உங்களுடைய ப்ரோபைல் பிக்சரை தேர்வு செய்யவும். அல்லது ஸ்கிப் கொடுக்கவும். (எப்பொழுது வேண்டுமானாலும் புரோபைல் பிக்சரை வைத்துக்கொள்ளலாம்)
  • அடுத்து Add to Favorite  கொடுக்கவும். அல்லது ஸ்கிப் கொடுத்துவிடலாம்.
  • உங்களுடை பேஸ்புக் பக்கம் நிறைய நபர்களைப் போய் சேர வேண்டுமெனில் பணம் கொடுத்தும் பிரபலமாக்கலாம். அதற்கான ஆப்சன் Reach More People. தேவையில்லை எனில் இதையும் ஸ்கிப் கொடுத்துவிடலாம். 

Facebook Fan Page -ன் பயன்கள்


உங்களுக்கான - உங்கள் வலைத்தளத்திற்கான பேஸ்புக் பக்கத்தை உருவாக்கிவிட்டீர்கள்.

இனி நீங்கள் உங்கள் வலைப்பூ அல்லது வலைத்தளத்தில் பகிரும் விடயங்கள் அனைத்து இப்பக்கத்திலும் பகிரலாம். 

உங்கள் பேஸ்புக் பேஜில் பகிரும் ஒவ்வொரு விடயமும், அதில் இணையும்-இணைந்திருக்கும் நண்பர்களுக்கு உடனடியாக பகிரப்படும். 

இதுபோன்ற உங்கள் வலைத்தளத்திற்காக ஒரு பேஸ்புக் பேஜ் உருவாக்கி அதன் மூலமும் நீங்கள் இணையத்தில் பார்வையிடும் வீடியோக்கள், படங்கள், மற்ற பயனுள்ள தகவல்களை உங்களுடைய பேஸ்புக் பேஜிலும் பகிரலாம். 

Facebook Fan Page for tholilnutpam.com


புதிய பேஸ்புக் பேஜ் இது. 



முந்தைய பேஸ்புக் பக்கத்திற்கான முகவரி இது


விருப்பபடுபவர்கள் இதில் இணைந்துகொள்ளலாம். இப்பக்கங்களில் இணைவோருக்கு, இத்தளத்தில் பகிரப்படும் பதிவுகள் அனைத்தும் உடனடியாக வந்தடையும். 

இவ்வாறு நீங்கள் இணையத்தில் விரும்பும் அனைத்தையும், இணையத்தில் காணும் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பேஸ்புக் நண்பர்களுக்குப் பகிர முடியும். 


நன்றி நண்பர்களே...!

ஆன்லைன் போட்டோ டிசைன் | Photo Punia



போட்டோக்களை டிசைன் செய்ய போட்டோஷாப் மென்பொருள் தான் வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்பொழுது போட்டோஷாப் மென்பொருள் இல்லாமலேயே ஆன்லைனிலேயே அருமையாக போட்டோ டிசைன் செய்ய முடியும்.

போட்டோ டிசைன் செய்ய ஆன்லைனில் நிறைய  போட்டோ எடிட்டிங் (Online Photo Editing / Design Websites ) இணையதளங்கள் உள்ளன. அது போன்றதொரு போட்டோ டிசைன் செய்யும் இணையதளம்தான் போட்டோ புனியா.

இந்த இணையதளத்தில் உங்களுடைய போட்டோக்களை தரவேற்றி (Upload) , அதில் உள்ள போட்டோ டிசைன்களை செலக்ட் செய்தால், அதிலிருக்கும் டிசைன் மாதிரியே உங்களுடைய போட்டோவும் மாறிவிடும்.

ஒரே கிளிக்கில் நீங்கள் விரும்பும் பிண்ணனியுடன் உங்களுடைய போட்டோவை அழகு படுத்திக்கொள்ளலாம். 
Online Photo Design
போட்டோ டிசைன்
போட்டோ புனியாவில் Photo Design செய்யும் வழிமுறை:  

  • முதலில் இத்தளத்தில் உள்ள டிசைன்களில் ஏதேனும் ஒரு டிசைனை தேர்வு செய்யுங்கள்... 
  • பிறகு உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்யுங்கள்... பிறகு go என்பதை சொடுக்குங்கள்.. 
  • பிராசசிங் நடக்கும். 
  • இறுதியாக போட்டோ டிசைன் செய்யப்பட்டு, Save ஆப்சனுடன் கிடைக்கும். 
  • டிசைன் செய்யப்பட்டப் புகைப்பட்டத்தை சமூக இணைய தளங்களிலும் பகிர Share வசதியும் உண்டு. 
Photo Punia இணையதளத்தின் சுட்டி: போட்டோ டினை செய்ய - Photo Punia