Sunday, 3 January 2016

5 நிமிடத்தில் ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்த எளிய முறை!


ஆதார் கார்டில் பிழைகளை திருத்த எளிய முறை..!

ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா?
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!
5 நிமிடத்தில் மாற்றி கொள்ள வழி இதோ
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
அதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.
aadhar-online
ஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது?
1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் சென்று லாகின் செய்ய வேண்டும்.
2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.
3. டாக்குமென்டுகளை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும்.
ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.
ஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்:
1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.
2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.
3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.
4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.
அ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்கு தேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.
ஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.
இ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.
6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.
7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்
நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள் – http://uidai.gov.in/update-your-aadhaar-data.html

டீம் வியூவர் | கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் அணுகல் மென்பொருள்



கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் அக்சஸ் செய்ய பயன்படும் மென்பொருள் டீம் வியூவர். அதாவது நீங்கள் உங்களுடைய கம்ப்யூட்டரில் இருந்தாவாறே டீம் வீயூவர்மூலம் வேறொரு இடத்தில் உள்ள உங்களுடைய நண்பருடைய கம்ப்யூட்டரை அணுகுவதற்கு உருவாக்கப்பட்ட மென்பொருள்தான் டீம்வியூவர்.
team-viewer-software
டீம் வியூவர் | கம்ப்யூட்டர் to கம்ப்யூட்டர் 

இன்னும் எளிதாக கூறுவதென்றால், நண்பருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீன் அப்படியே உங்கள் ஸ்கிரீனுக்கு வந்துவிடும். அப்பொழுது உங்களுடைய கம்ப்யூட்டரிலிருந்தவாறே உங்களுடைய கம்ப்யூட்டரின் மௌஸ், கீபோர்ட் இரண்டையும் பயன்படுத்தி, தொலைதூரத்தில் உள்ள நண்பரின் கம்ப்யூட்டரை இயக்கலாம்.   நீங்கள் இங்கிருந்து அவருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீனீல் செய்யும் வேலைகள் அனைத்தையும் அங்கிருந்தவாறே நண்பர் கவனிக்க முடியும்.

இதற்கு தேவை.

1. இன்டர்நெட் கனெக்சன்
2. டீம் வியூவர் மென்பொருள் (இரு கம்ப்யூட்டர்களிலும்)

டீம் வியூவர் பயன்படுத்தும் முறை: 


  • இருவருடைய கம்ப்யூட்டரிலும் முதலில் டீம்வியூர் மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். 
  • பிறகு Team Viewer மென்பொருளை Open செய்து கொள்ளவும். 
  • உங்களுக்கு ஒரு விண்டோ தோன்றும். அதில் டீம் வீயூவர் ID மற்றும் பாஸ்வேர்ட் காட்டும். 
  • யாருடைய கம்ப்யூட்டரை அணுக வேண்டுமோ, அவருடைய டீம்வியூர் பாஸ்வேர்ட் மற்றும் டீம் வியூவர் ID யை மற்றவருக்கு அனுப்ப வேண்டும். 
  • (அலைபேசியிலோ அல்லது FB, Google Plus சாட்டிங்களோ அவற்றை அனுப்பிவிடலாம்)
  • டீம் வியூவர் ID, Password இரண்டையும் அணுக போகிறவரின் டீம்வியூர் விண்டோவில் கொடுக்க வேண்டும். 


அவ்வளவுதான். இப்பொழுது நண்பருடைய கம்ப்யூட்டர் ஸ்கிரீன் உங்கள் ஸ்கீரினில் தெரிய ஆரம்பிக்கும். இப்பொழுது அவருடைய கணினியை நீங்கள் அணுக முடியும்.

டீம் வீயூவர் பயன்கள்:


  • நண்பருடைய கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமில் (அல்லது ஏதேனும் ஒரு வேலை) ஏதேனும் அவருக்கு தெரியவில்லை எனில், இங்கிருந்தே அதை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி சொல்லிக் கொடுக்கலாம். 
  • உங்களுடைய கம்ப்யூட்டரிலிருக்கும் ஃபைல்களை அவருடைய கம்ப்யூட்டருக்கு மாற்றிக்கொள்ளலாம். | File Transfer வசதி
  • ஒருவருக்கொருவர் தகவல்களை அனுப்ப முடியும் |  Chat  வசதி...
  • ஆன்லைன் மூலம் பேசிக்கொள்ளும் வசதி | Online Meeting 
  • Business Presentation பரிமாறிக்கொள்ள 

இப்படி நிறைய வசதிகள் இதில் உண்டு. தற்பொழுது டீம் வியூவர் மென்பொருளானது இன்டர்நெட் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களுக்கும் வெளிவந்திருக்கிறது. நீங்கள் ஆன்ட்ராய்ட்மொபைல் பயன்படுத்தினால், அதற்கான டீம் வியூவர் மென்பொருளும் உண்டு.

Widows, Apple Mac, Linux, Chrome OS போன்ற அனைத்து கம்ப்யூட்டர் OS களிலும் இயங்க கூடியது. iPhone, iPad, Android, Windows Phone 8 போன்ற மொபைல் போன்களுக்கும் டீம் வியூவர் மென்பொருள் உண்டு.

"டீம் வியூவர்" மென்பொருள் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free Team viewer Software

Saturday, 2 January 2016

வேர்ட் டிப்ஸ்!-வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்:


வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். ‘bulleted’ என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும். இந்த அடையாளமே புல்லட் என அழைக்கப்படுகிறது.
இது சிறிய புள்ளியிலிருந்து எந்த வகை அடையாளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். A numbered list என்பது, இதே பட்டியலில், அடையாளப் படத்திற்குப் பதிலாக, வரிசையாக எண்கள் இருக்கும். தொடர் கருத்து அல்லது தகவல்களைத் தருகையில், இந்த லிஸ்ட் வகை பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு இல்லாமல், நம் கவனத்தைக் கவரும் வகையில் தரப்படும் தொடர்பற்ற, ஆனால், முக்கியமான தகவல்கள் புல்லட் இணைந்த பட்டியலாகத் தரப்பட வேண்டும். வேர்ட் இதனைத் தயாரித்து வழங்க எளிய வழிகளைக் கொண்டுள்ளது. முதலில், ஒவ்வொரு தகவலையும் டைப் செய்து, அதன் முடிவில் என்டர் அழுத்தவும். ஒரு தகவல், ஒரு வரிக்கு மேல் சென்றாலும், இறுதியில் மட்டுமே என்டர் அழுத்தவும். ஒவ்வொரு வரி முடிவிலும் என்டர் அழுத்த வேண்டாம்.
அனைத்து தகவல்களையும் பட்டியலாகத் தந்த பின்னர், மொத்தமாக அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ரிப்பனில், ஹோம் பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து பாரா குரூப்பில் உள்ள Bullets tool மற்றும் Numbering tool என்பவற்றில், எது உங்களுக்கு தேவைப்படுமோ, அதில் கிளிக் செய்து பட்டியலை நிறைவு செய்திடவும்.
வேர்ட் டேபிளைப் பிரிக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் சில வேளைகளில் பெரிய அளவில் டேபிளை அமைத்து விடுவோம். அதன் பின்னர், அதனைப் பிரிக்க முயற்சித்தால், அதற்கான வழி எளிதில் கிடைக்காது. பல வேளைகளில், பலரும், படுக்கை வரிசைகளைக் காப்பி செய்து, பின் வேறொரு இடத்தில் பேஸ்ட் செய்து, புதிய டேபிளை உருவாக்குவார்கள். பழைய டேபிளிலிருந்து நீக்கப்பட்ட நெட்டு வரிசைகளை, அழித்துவிடுவார்கள். இதற்குப் பதிலாக, வேர்ட், இது போல டேபிளைப் பிரிப்பதற்கு, எளிய வழி ஒன்றைக் கொண்டுள்ளது.
1. ஏற்கனவே அமைந்த டேபிளில், எந்த படுக்கை வரிசையிலிருந்து டேபிளைப் பிரித்து அமைக்க வேண்டுமோ, எந்த வரிசை புதியதாய் அமைய இருக்கும் டேபிளின் முதல் வரிசையாக அமைய வேண்டுமோ, அதில் கர்சரைக் கொண்டு வைக்கவும்.
2. அடுத்து ரிப்பனில், Layout டேப்பினை கிளிக் செய்திடவும். (இந்த டேப், டேபிள் உள்ளாக கர்சர் அமைக்கப்பட்டிருந்தால் தான் காட்டப்படும்)
3. இங்கு Merge குரூப்பில் Split Tool என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போது வேர்ட், நீங்கள் கர்சரை வைத்த வரிசைக்கு மேலாக வழக்கமான வடிவில் பாரா ஒன்றை அமைக்கும். மேலாகவும், கீழாகவும் இரண்டு டேபிள்கள் கிடைக்கும். இவற்றைத் தனித்தனியே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Friday, 1 January 2016

பென் டிரைவில் எந்த மென்பொருளுமின்றி வைரஸை நீக்க


சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.

பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.






பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது



01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்



02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.



03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.





II  அழிக்க முடியாத பைல்களை அழிக்க 



சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.



01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும்



02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  



03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.



04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.



05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.

Wednesday, 30 December 2015

+2 மாணவர்களுக்கு சக்ஸஸ் டிப்ஸ் - கணிதம்


பிளஸ் டூ தேர்வு நேரத்தில் கொடுக்கப்படும் அறிவுரைகளை முன்னதாகவே கொடுத்திருந்தால், தேர்வுக்கு மேலும் நன்றாகத் தயாராகி இருப்போமே என்று நினைக்கும் மாணவர்களுக்காக திறமை வாய்ந்த ஆசிரியர்கள் டிப்ஸ் வழங்குகிறார்கள். இந்த இதழில் கணித பாடத் தேர்வை வெற்றிகரமாக எழுத சக்ஸஸ் டிப்ஸ்:
பிளஸ் டூ தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எளிதில் பெறக்கூடிய ஒரு பாடம் என்றால், அது கணிதம் மட்டுமே. கணிதத்தில் சென்டம் எடுப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. முயற்சியும், இடைவிடாத பயிற்சியும், ஆர்வமும், புரிந்துகொள்ளும் தன்மையும், நினைவாற்றலும் இருந்தால், நூற்றுக்கு நூறு உங்கள் கையில்தான்.
கணக்கு என்றால் காத தூரம் ஓடுபவர்கள்கூட, சரியாகச் செய்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக கணக்கை விரும்புவது இயல்பு. பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கணிதத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் சேர முடியும். எனவே அதற்கான முயற்சிகளை இப்போதிருந்தே மேற்கொள்வது நல்லது.
பிளஸ் டூ கணிதப் பாடத்தைப் பொருத்தவரை, 40 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு சரியான விடைகளைக் கண்டுபிடித்து எழுத, தினந்தோறும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஒதுக்கி பயிற்சி எடுத்தால் 40 மதிப்பெண்களை சுலபமாகப் பெற்றுவிட முடியும். இதில் பெரும்பாலான கேள்விகள், புத்தகத்தின் பின்புறம் உள்ள பயிற்சிக் கணக்குகளிலிருந்தே கேட்கப்படுகின்றன. தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்ட வினா வங்கியிலிருந்தும் பெரும்பாலான கணக்குகள் கேட்கப்படும்.
இதுவரை கேட்கப்படாத வினாக்கள், குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வினாக்கள் இப்பகுதியில் இடம்பெறும். குறிப்பாக, கலப்பெண்கள், பகுமுறை வடிவியல் மற்றும் வகை நுண் கணிதப் பயன்பாடுகள் I ஆகிய பாடங்களில் இருந்து வரலாம். இதில் நன்கு பயிற்சி செய்து பழகுவது அவசியம். இதற்கு பெற்றோர்கள் அல்லது நண்பர்களின் துணையை நாடலாம். முழு விடையையும் எழுதாமல், வினாவிற்கான சரியான எண் மட்டும் குறிப்பிட்டு பெற்றோர் அல்லது நண்பர்களைக் கொண்டு திருத்தச் செய்யலாம். நினைவில் நிற்கக்கூடிய ஏதாவது ஓரு குறுக்குவழியில் விடைகளைப் பயிற்சி செய்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கலாம். உதாரணமாக, முதல் பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் நான்கிற்கு விடை 2 எனவும், ஐந்தாம் பாடத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள் இரண்டிற்கு விடை 5 எனவும் வரும். இதனை நினைவில் கொள்வது எளிது. ஒரு மதிப்பெண் வினாக்கள் நம்முடைய மனப்பாட சக்தியைச் சோதிப்பதாக அமைவதால், 40 மதிப்பெண்கள் எடுப்பது சுலபம். சராசரி மாணவர்கள், தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் இப்பகுதியில் குறைந்தது 30 மதிப்பெண்களை சுலபமாக எடுத்துவிட முடியும்.
ஆறு மதிப்பெண்கள் வினா
பொதுவாக ஆறு மதிப்பெண்கள் வினாவிற்கான விடைகளை எழுதுவதில், மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கணிதப் பாடத்தில் பொதுத்தேர்வு வினாக்களை மட்டும் படிப்பதைத் தவிர்த்து, 1, 2, 3, 5, 9 மற்றும் 10 ஆகிய பாடங்களில் வரும் ஆறு மதிப்பெண்கள் வினாக்களை முழுமையாகப் போட்டுப் பார்க்க வேண்டும். இப்பாடங்களில் இருந்து 2 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இரண்டாம் தொகுதியில் உள்ள பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்கவும். கட்டாய வினாக்களுக்கு விடையளிக்க, இதுவரை கேட்கப்படாத வினாக்களைப் படிக்கவும். ஒரே கேள்வியில் ஏ, பி என்று இரண்டு கேள்விகளுக்கு (3 + 3 மதிப்பெண்கள்) விடையளிக்குமாறு இடம்பெறக்கூடிய கேள்விகளில், இரண்டுக்கும் விடை தெரிந்தால் மட்டுமே விடையளிக்க வேண்டும். வெக்டர் இயற்கணிதப் பாடத்தில் ஒரு கேள்வி இதைப்போன்று வரும். விடைகளை எழுதுவதற்கு முன்பு, சரியான வினாக்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு சில 3 மதிப்பெண்கள் வினாக்கள் 10 மதிப்பெண்கள் வினாக்களுக்கு விடையளிப்பதைவிட அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும். எனவே, கேள்விகளைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கவனம் தேவை.
ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் தெரியவில்லை என்றாலும்கூட அதற்கு முழுமையாக பதில் எழுதாமல் விடுவதைத் தவிர்த்து, அதற்குண்டான ஓரிரு படிகள் அல்லது சூத்திரங்களை (Steps or Formula) எழுதினால் ஓரளவுக்காவது மதிப்பெண்கள் கிடைக்கும். தயாரிக்கப்பட்ட வினா (Created Question) ஒன்று கேட்கப்படும். புத்தகத்தில் இருப்பது போன்று வேறு மாதிரியான வினாவாக இருக்கும். விடையளிப்பதும் சுலபம். முழு மதிப்பெண்ணும் பெற்றுவிடலாம்.
பத்து மதிப்பெண்கள் வினா
பத்து மதிப்பெண்கள் வினாவிற்கான விடைகளை எழுதுவது சுலபம். தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்க வேண்டும். 56-ஆம் வினாவிற்கு விடையளிப்பது சுலபம் என எண்ணி தவறாக எழுதிவிடுகின்றனர். கேள்வியை நன்கு புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டும். ஒருங்கமைவு சமன்பாடுகளைத் தீர்க்கும்போது தர முறையா அல்லது அணிக்கோவை முறையா (Rank method or Determinant method) எனத் தெளிந்து எழுதவேண்டும். இந்த வினாவை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்க்கவேண்டும். தவறு ஏற்பட வாய்ப்புள்ள கேள்வி இது.
வெக்டர் இயற்கணிதத்தில் Sin(A+B), Cos (A+B) ன் படம் தவறாக மாற்றிப் போட வாய்ப்புண்டு. தளங்கள் பகுதியில் ஒரு வினா இடம்பெறும். அதனை நன்கு படித்து சரியான சூத்திரத்தைப் பயன்படுத்தவேண்டும். கலப்பெண்கள் பாடத்தில் பயிற்சி 3.4 மற்றும் 3.5 பகுதிகளில் உள்ள வினாக்களைப் படித்தால் ஒரு வினாவை எழுதிவிடலாம்.
பகுமுறை வடிவியல் பாடத்தில் மூன்று கேள்விகள் கேட்கப்படுவதால் நன்கு பயிற்சி எடுத்தல் அவசியம். பரவளையம், நீள்வட்டம் மற்றும் அதிபரவளையம் என மூன்று கேள்விகள் இடம்பெறும். வகைநுண்கணிதம் பயன்பாடுகள் I என்ற பாடப் பகுதியில் பயிற்சி 5.1 மற்றும் 5.2 ஆகிய இரண்டு பயிற்சிகளில் இருந்து ஒரு வினாவும், 5.10 மற்றும் 5.11 ஆகிய இரண்டு பயிற்சிகள் மற்றும் அதனை உள்ளடக்கிய எடுத்துக்காட்டுகளிலிருந்து ஒரு வினாவும் இடம்பெறும். வகைநுண்கணிதப் பயன்பாடுகள்II என்ற பாடப்பகுதியில் வளைவரை வரைதல் (Curve Tracing) அல்லது பகுதி வகையிடல் (Partial Differentitation) என்ற தலைப்பில் இருந்து ஒரு வினா இடம்பெறும்.
தொகைநுண்கணிதம் பகுதியில் பரப்பு மற்றும் கன அளவு பகுதியில் ஒரு வினாவும், வில்லின் நீளம் மற்றும் வளைபரப்பு பகுதியில் ஒரு வினாவும் இடம்பெறும். தயாரிக்கப்பட்ட வினா கேட்பதற்கும், இப்பாடத்தில் சாத்தியம் உண்டு. வகைக்கெழு சமன்பாடுகள் பாடத்தில் பயிற்சி 8.4 மற்றும் 8.5 மற்றும் 8.6 ஆகிய மூன்று பயிற்சிகளை மட்டும் நன்றாகப் பயிற்சி எடுக்கவேண்டும். தனிநிலை கணக்கியல் பாடத்தில் குலங்கள் (Groups) பகுதியில் இடம்பெறும் வினாவிற்கு விடையளிப்பது சுலபம்.
நிகழ்தகவுப் பரவல் பாடப்பகுதியில் பாய்ஸான் பரவல் மற்றும் இயல்நிலைப் பரவல் பகுதியில் உள்ள கணக்குகளைப் பயிற்சி எடுத்தல்வேண்டும். இந்தப் பாடமானது மிகவும் எளிமையானது. ஆனால் கடைசிப் பாடம் என்பதால், மாணவர்கள் இதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தப் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படித்தால் இரண்டு ஆறு மதிப்பெண்கள் வினாவிற்கும் விடையளிக்கலாம். கட்டாய வினா எந்தப் பாடத்தில் இருந்தும் கேட்கப்படலாம். குறிப்பாக இரண்டாம் தொகுதியில் இருக்கும் பாடங்களைப் படித்தால் கட்டாய வினாவிற்கும் விடையளிக்கலாம்.
சராசரி மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் பயிற்சிக் கணக்குகளை மட்டும் படித்தால்கூட 7 ஆறு மதிப்பெண்கள் வினாவிற்கும், 8 பத்து மதிப்பெண்கள் வினாவிற்கும் விடையளிக்கலாம் அல்லது எடுத்துக்காட்டு கணக்குளை மட்டும் படித்தால் 6 ஆறு மதிப்பெண்கள் வினாவிற்கும், 9 பத்து மதிப்பெண்கள் வினாவிற்கும் விடையளிக்கலாம்.
உங்களுக்கு கடினம் என நினைக்கும் ஒன்று அல்லது இரண்டு பாடத்தில் ஆறு மற்றும் பத்து மதிப்பெண் வினாக்களை ஒதுக்கிவிட்டு, ஒரு மதிப்பெண் வினாக்களை மட்டும் பயிற்சி செய்து வந்தால்கூட நூறு சதவீதம் மதிப்பெண் பெறுவது சாத்தியமாகும்.
மாணவர்கள் செய்யக்கூடாதது:
கணக்குப் பாடத்தைப் பொருத்தவரை, தேவையான இடத்தில் வரைபடம் வரைய வேண்டியது அவசியம். ஆனால் நன்றாகப் படிக்கும் மாணவர்கள்கூட தேவையான இடத்தில் வரைபடம் வரையாமல் விட்டுவிடுகின்றனர். இதைத் தவிர்ப்பது நல்லது. அணிக்கோவைப் பகுதியில் அடைப்புக்குறியைத் தவறாகப் போடுவது, வினாத்தாளில் உள்ள கேள்விக்கான எண்ணைத் தவறாகக் குறிப்பிடுவது, வினாவை நிதானமாகப் படிக்காமல், அவசரமாகப் படித்து தவறாகப் புரிந்துகொண்டு, தவறான விடையை எழுதுவது போன்றவை மாணவர்கள் அடிக்கடி செய்யும் தவறுகள். தேர்வு எழுதும்போது போதிய கவனத்துடன் இத்தவறுகளைத் தவிர்த்து தெளிவாக எழுதினாலே, சென்டம் எடுப்பது சாத்தியம்.

ONLINE JOB வீட்டிலிருந்தே சம்பாதிக்க விருப்பம் உள்ளவரா நீங்கள் !

ONLINE JOB
தயவு செய்து இரண்டு நிமிடங்கள்
உங்களுக்கான பகுதி நேர தொழிலில் முதலிடம் பிடிக்கும்
வீட்டிலிருந்தே சம்பாதிக்க விருப்பம் உள்ளவரா நீங்கள் !
உங்களுக்கு சிறந்த முறையில் கணினியை இயக்கம் திறமை இருந்தால் போதும்...
நீங்கள் சம்பாதிக்க துடிப்பவரா உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
முயன்றால் முடியாதது ஏதும் இல்லை.......
முயற்சித்தால் வெற்றி நாம் கையில்..... ஆன்லைனில் சம்பாதிப்பது சுலபம்
தான் .. அதற்கு தேவை, விடாமுயற்சியும் , தன்னம்பிக்கையும் மட்டுமே.
இந்த வேலையை செய்வதற்க்கு
1) கணிணி
2)இணைய தளம் வசதி
இனி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என காணலாம் வாருங்கள்.
உங்களுக்கு சில அருமையான ஆன்லைன் வேலைகளும் வெப்சைட்களும்
அறிமுகம் செய்து வைக்கப்படும்.
நீங்கள் சரியாக பயன்படுத்தி வந்தால் இத்தளங்கள்
உங்களுக்கு தவறாமல் கனி கொடுக்கின்ற மரங்களை போலாகும்.
இப்பொழுது உங்களுக்கு
*தேவையானவை இரண்டு தான்,
1.இணையவசதி கொண்ட ஒரு கம்ப்யூட்டர்
2.ஆன்லைன் வேலை செய்யத் தேவையான ஆர்வம்
இவைகளைத் தவிர , முதலீடு, முன்-அனுபவம், படிப்பு, திறன்கள் என எதுவும்
தேவையில்லை.
இவ்விரண்டும் உள்ளவர்கள் யாரானாலும் கீழே தொடரலாம்.
வேலைகள் என்ன என தெரிந்து கொண்டு சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். உங்களுக்கு நான் வழி
காட்டுகிறேன் .......
ஆன்லைனில் சம்பாதிப்பது சுலபம் தான் .. அதற்கு தேவை,
விடாமுயற்சியும் , தன்னம்பிக்கையும் மட்டுமே.................
>
>
> குறிப்பு - இந்த வேலைக்காக நீங்கள் ஒரு ருபாய் கூட கொடுக்க வேண்டாம்(no investment)
@@@@@@ DON’T MISS IT @@@@@@@
நான் இந்தத் தொழிலைக் கடந்த ஐந்து வருடங்களாக வெற்றிகரமாகச் செய்துவருகிறேன்.
கீல் உள்ள வெப்சட்டில் சென்று ஜாப் விபரங்கள் தெரிந்து கொள்ளலாம்
இந்த வெப்சட்டை தமிழில் வடிவமைதுல்ளேன்
அனைத்து விபரங்களும் தமிழில் உள்ளது
இந்த வெப்சைடில் வேலை செய்யும் வெப்சட்கள் இருக்கும்
புதிய வெப்சைட்கள் அறிமுகம் செய்து வைகக்ப்படும்
என்னை தொடர்பு கொள்ள
EMAIL : SELVASRNM@GMAIL.COM
PHONE : 8344823879
WHATSAPP : 73-0506-9493
FACEBOOK : WWW.FACEBOOK.COM/SELVAPMS

Monday, 28 December 2015

ஆடியோ எடிட் செய்ய அருமையான மென்பொருள்..!

Audio editing software for free

ஆடியோ எடிட் செய்ய அருமையான மென்பொருள் இது. ஆடியோ எடிட்டிங் மட்டும் இல்லீங்க.. இந்த மென்பொருள் பயன்படுத்தி உங்களோட வாய்சை ரெக்கார்ட் பண்ணலாம். காசு கொடுத்து வாங்கும் மென்பொருளைப் போன்றே இது அருமையாக வேலை செய்கிறது. இன்னும் பல வசதிகள் இதில் அடங்கியிருக்கிறது. இந்த மென்பொருளைத் தரவிறக்க விரும்புகிறீர்களா?

free audio Editing software


இதோ தரவிறக்கச் சுட்டி: http://www.free-audio-editor.com/download/index.htm

இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்..!
பயன்படுத்த மிக எளிதானது..!
பல்வேறு Audio Effect கொடுக்க முடியும்..!
இந்த மென்பொருள் மூலம் visual ஆக உங்கள் ஆடியோ கோப்புகளை எடிட் செய்ய முடியும்..!
இம் மென்பொருள் மூலம் நீங்கள் உங்கள் குரலை Micro Phone அல்லது வேறு ஆடியோ ரெக்கார்ட் செய்யும் உபகரணங்களைக் கொண்டு உங்கள் குரலை Record செய்ய முடியும்.
WMV, MP3, WMA, WAV, OGG போன்ற ஆடியோ வகை கோப்புகளை CD யில் பதிவேற்றம் செய்ய முடியும்.

ஆங்கிலத்தில் இம்மென்பொருளைப் பற்றி தளத்தில் கொடுத்திருக்கும் சிறப்புகள்: 

Powerful audio recording feature
Edit audio files visually
Apply various effects easily
Powerful noise reduction tool
Easy to use interface will get you started editing in just minutes
Real-time effect preview is supported
Easy to use bookmark and region manager
Supports a number of file formats including wav (multiple codecs), mp3, wma, ogg and many more.
Burn your sound files to CD
Tools include speech synthesis (text-to-speech)
Completely Free!

இத்தனை சிறப்பு வாய்ந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.. இனியும் தாமதிக்காமலே தரவிறக்கம் செய்து உங்கள் Audio கோப்புகளை மெருகேற்றிக்கொள்ளுங்கள். Audio Edtiting-ல் தேர்ந்தவராக மாற இந்த மென்பொருள் உங்களுக்கு நிச்சயம் பயன்படும்.

பயன்படுத்திப் பாருங்கள்... உங்கள் கருத்துகளை எழுத மறக்காதீர்கள்..

மேலும் இத்தளத்தில் இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என அருமையாக வீடியோ டுடோரியலாக வைத்திருக்கார்கள். புதியவர்கள் அந்த வீடியோ டுடோரியலைப் பார்த்தீர்களானால் உடனடியாக மென்பொருளைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளலாம்.

வீடியோ டுடோரியல் பார்க்க இந்த இணைப்பில் சொடுக்கிச் செல்லுங்கள்:

http://www.free-audio-editor.com/features/video_tutorial.htm

இத்தனை விபரங்களையும் உங்கள் தெரிவித்த எனக்கு நீங்கள் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்..!

Sunday, 27 December 2015

Sri Murugan Computer Education - Gingee





மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்


மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

'டேட்டா ரெகவரி' செய்ய சிறந்த இலவச மென்பொருள்..!


கணினி பயனர்கள் (Computer Users) என்னதான் எச்சரிக்கையாக செயல்பட்டாலும், ஏதேனும் ஒரு தருணத்தில் ஒரு சில தவறுகளைச் செய்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அதுபோன்ற செயல்களில் ஒன்றுதான் முக்கியமான கோப்புகளை அறியாமல் திடீரென அழித்துவிடுவது.  இதுபோன்ற தவறான செயல்கள் நடக்க ஒரு நொடியே ஆகிறது. அதனால் சில சமயங்களில் இவ்வாறான செயல்களை இடைப்பட்ட நேரத்தில் தடுத்து நிறுத்தவும் முடிவதில்லை. 
தவறாகவோ அல்லது அஜாக்கிரதையாலோ முக்கியமான கோப்புகளை அழித்துவிட்டு அதை மீட்டெடுக்க  Recovery Software - ஐ நாடுகின்றனர். அதிலும் இலவச மென்பொருள்களையே பலரும் விரும்புகின்றனர்.

free data recovery software

இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களில் ஒரு குறிப்பிட்ட வசதிகளை மட்டுமே பெற முடியும். அதாவது ஒரு சில நாட்களுக்கு முன் (சமீபத்தில்)அழித்த கோப்புகளை மட்டுமே பெற முடியுமாறு அந்த மென்பொருள்களை வடிவமைத்திருப்பார்கள். கூடுதலான வசதிகளைப் பெற வேண்டியிருப்பின் அத்தகைய மென்பொருள்களை பணம் கொடுத்து (Paid Software) வாங்க வேண்டும். 
அவ்வாறில்லாமல் ஒரு இலவச மென்பொருளே  அழித்த கோப்புகளை அனைத்து கோப்புகளையும் மீட்டுத் தந்தால் நன்மைதானே..!ஒரு இலவச மென்பொரு அழித்த கோப்புகளை மீட்டுத் தருகிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக. இது கணினயில் அழிக்கப்பட்ட கோப்புகளை சேதமில்லாமல் Recover செய்வதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. 
மென்பொருளின் பெயர்: ரெய்ட் டூ ரெய்ட் (Raid to Raid) 

மென்பொருளின் சிறப்புகள் - Features of Raid to Raid Data Recovery Software: 

  • இது கணினியில் உள்ள Hard Disk லிருந்து கோப்புகளை மீட்டுக் கொடுக்கிறது. 
  • ஃப்ளாஷ் டிரைவ் (Flash Drive), மெமரி கார்ட் (Memory Card) போன்ற கணனியுடன் இணைத்து செயல்படும் சாதனங்களிலிருந்தும் தேவையான டேட்டாவை மீட்டுக்கொடுக்கிறது. 
  • இவ்வாறான Removable Device களை கணினியில் இணைத்து இந்த மென்பொருளைச் செயல்படுத்தி தரவுகளை மீட்கலாம். 
  • அவ்வாறு ரீமூவபிள் டிவைஸிலிருந்து மீட்கப்படும் கோப்புகள் கணினியில் உள்ள Hard Disk ல் பதியும்படி அமைப்புகள் உள்ளது. 
  • Hard Disk -ல் பிரச்னை ஏற்பட்டு, அதை பார்மட் செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் அதிலுள்ள கோப்புகளை ஒரு இமேஜாக மாற்றிக் கொடுக்கிறது. அதை தேவையான இடத்தில் பாதுகாப்பாக சேமித்துக்கொண்டு, Hard Disk Format - ஐத் தொடங்கலாம். 
  • அவ்வாறு பார்மட் செய்து முடித்த பிறகு இமேஜிலிருந்து வேண்டிய கோப்புகளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம். 

பயன்படுத்தும் விதம்: 

How to use this Data Recovery Software

மென்பொருளைத் திறந்து கொள்ளுங்கள். கோப்புகளை மீட்க நினைக்கும் டிரைவின் மீது கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள அனைத்து வகையான கோப்புகளையும் காட்டும். அதில் உங்களுக்கு எந்த கோப்பு மீட்கப்பட வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து Recover this file என்பதைக் கொடுப்பதன் மூலம் அந்த கோப்பு மீண்டும் உங்கள் கணினியில் சேமிக்கப்படும். 
குறிப்பு: மீட்கப் பட வேண்டிய கோப்பு எந்த டிரைவில், சேமிக்கப்படவேண்டும் என்பதை நீங்கள் முன்னரே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். 
மென்பொருள் தரவிறக்கச் சுட்டி: Download Free Data recovery software