கணினி பயனர்கள் (Computer Users) என்னதான் எச்சரிக்கையாக செயல்பட்டாலும், ஏதேனும் ஒரு தருணத்தில் ஒரு சில தவறுகளைச் செய்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அதுபோன்ற செயல்களில் ஒன்றுதான் முக்கியமான கோப்புகளை அறியாமல் திடீரென அழித்துவிடுவது. இதுபோன்ற தவறான செயல்கள் நடக்க ஒரு நொடியே ஆகிறது. அதனால் சில சமயங்களில் இவ்வாறான செயல்களை இடைப்பட்ட நேரத்தில் தடுத்து நிறுத்தவும் முடிவதில்லை.
தவறாகவோ அல்லது அஜாக்கிரதையாலோ முக்கியமான கோப்புகளை அழித்துவிட்டு அதை மீட்டெடுக்க Recovery Software - ஐ நாடுகின்றனர். அதிலும் இலவச மென்பொருள்களையே பலரும் விரும்புகின்றனர்.
இலவசமாக கிடைக்கும் மென்பொருள்களில் ஒரு குறிப்பிட்ட வசதிகளை மட்டுமே பெற முடியும். அதாவது ஒரு சில நாட்களுக்கு முன் (சமீபத்தில்)அழித்த கோப்புகளை மட்டுமே பெற முடியுமாறு அந்த மென்பொருள்களை வடிவமைத்திருப்பார்கள். கூடுதலான வசதிகளைப் பெற வேண்டியிருப்பின் அத்தகைய மென்பொருள்களை பணம் கொடுத்து (Paid Software) வாங்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் ஒரு இலவச மென்பொருளே அழித்த கோப்புகளை அனைத்து கோப்புகளையும் மீட்டுத் தந்தால் நன்மைதானே..!ஒரு இலவச மென்பொரு அழித்த கோப்புகளை மீட்டுத் தருகிறது. அதுவும் முற்றிலும் இலவசமாக. இது கணினயில் அழிக்கப்பட்ட கோப்புகளை சேதமில்லாமல் Recover செய்வதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது.
மென்பொருளின் பெயர்: ரெய்ட் டூ ரெய்ட் (Raid to Raid)
மென்பொருளின் சிறப்புகள் - Features of Raid to Raid Data Recovery Software:
- இது கணினியில் உள்ள Hard Disk லிருந்து கோப்புகளை மீட்டுக் கொடுக்கிறது.
- ஃப்ளாஷ் டிரைவ் (Flash Drive), மெமரி கார்ட் (Memory Card) போன்ற கணனியுடன் இணைத்து செயல்படும் சாதனங்களிலிருந்தும் தேவையான டேட்டாவை மீட்டுக்கொடுக்கிறது.
- இவ்வாறான Removable Device களை கணினியில் இணைத்து இந்த மென்பொருளைச் செயல்படுத்தி தரவுகளை மீட்கலாம்.
- அவ்வாறு ரீமூவபிள் டிவைஸிலிருந்து மீட்கப்படும் கோப்புகள் கணினியில் உள்ள Hard Disk ல் பதியும்படி அமைப்புகள் உள்ளது.
- Hard Disk -ல் பிரச்னை ஏற்பட்டு, அதை பார்மட் செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் அதிலுள்ள கோப்புகளை ஒரு இமேஜாக மாற்றிக் கொடுக்கிறது. அதை தேவையான இடத்தில் பாதுகாப்பாக சேமித்துக்கொண்டு, Hard Disk Format - ஐத் தொடங்கலாம்.
- அவ்வாறு பார்மட் செய்து முடித்த பிறகு இமேஜிலிருந்து வேண்டிய கோப்புகளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
பயன்படுத்தும் விதம்:
How to use this Data Recovery Software
மென்பொருளைத் திறந்து கொள்ளுங்கள். கோப்புகளை மீட்க நினைக்கும் டிரைவின் மீது கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள அனைத்து வகையான கோப்புகளையும் காட்டும். அதில் உங்களுக்கு எந்த கோப்பு மீட்கப்பட வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்து Recover this file என்பதைக் கொடுப்பதன் மூலம் அந்த கோப்பு மீண்டும் உங்கள் கணினியில் சேமிக்கப்படும்.
குறிப்பு: மீட்கப் பட வேண்டிய கோப்பு எந்த டிரைவில், சேமிக்கப்படவேண்டும் என்பதை நீங்கள் முன்னரே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
மென்பொருள் தரவிறக்கச் சுட்டி: Download Free Data recovery software
No comments:
Post a Comment