Thursday, 24 December 2015

LIVE TV பார்க்க மிக சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்.

LIVE TV பார்க்க மிக சிறந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்.




            இன்று ஆண்ட்ராய்ட்  போன் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். மிக குறைந்த விலையில் பல தரமான போன்கள்  கிடைபதால் பலர் அதை விரும்பி வாங்குகின்றனர். அப்படி வாங்கும் போனில் பல அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வோம். அதில் பெரும்பாலானவை பொழுதுபோக்கு சம்பந்தபட்டதாகவே இருக்கும். 



    இப்போது வீட்டில் சீரியல் பார்க்கும் ஆட்கள் அதிகமாக உள்ளதால் நம்மால் அந்த நேரத்தில் செய்திகள் பார்க்க முடியாது. இதுபோன்ற கஷ்டத்தை போக்க சில நேரலை டிவி அப்ளிகேஷன்கள் உள்ளன. அவறை பற்றி பாப்போம்.


1. புதியதலைமுறை.


           இன்றைய நிலையில் வேகமாகவும், ஓரளவு உண்மையாகவும், கொஞ்சம் நடுநிலையாகவும் உள்ள செய்தி சேனல் புதியதலைமுறை தான். அதன் செய்திகளை நேரடியாகவே தரும் அப்ளிகேஷன் இது. மிகவும் குறைவான நினைவுத்திறனை எடுத்துகொள்ளும் அப்ளிகேஷன் என்பதால் பயபடாமல் நிறுவலாம்.

தரவிறக்கம் செய்ய :   CLICK HERE

2. தந்தி டிவி 


       இது அப்பப்ப மாறி மாறி ஜால்ரா அடிக்கும். கேள்விக்கென்ன பதிலில் கலந்துகொள்ளும் கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த சேனலை கண்டிப்பாக கழுவி ஊத்துவார்கள். நல்ல பொழுதுபோக்கு செய்தி சேனல் இது .

தரவிறக்கம் செய்ய :   CLICK HERE

3. NEWS 7- தமிழ்

          புதிதாக வந்துள்ள செய்தி சேனல் இது. இதிலும் பல நிகஷ்சிகள் பார்க்கும்படி உள்ளது. இது குறைந்த அளவு நினைவு திறனே எடுத்துகொள்ளும் . செய்திகளை தலைப்பு வாரியாக பிரித்து கொடுப்பது இதன் சிறப்பு.

தரவிறக்கம் செய்ய :   CLICK HERE

4. PT இன்று 

          புதிய தலைமுறையில் மற்றுமொரு அப்ளிகேஷன். இதில் என்ன வசதி என்றால் டிவி பார்க்கலாம். டேட்டா கொஞ்சமாக இருந்தால் செய்தியின் ஒலி யை மட்டும் கேட்கலாம். அல்லது செய்தித்தாள் போல் படிக்கலாம். இதும் பயன்படுத்த எளிதான அப்ளிகேஷந்தான்.

தரவிறக்கம் செய்ய :   CLICK HERE

5. JAYA TV

    டேட்டா வெட்டியா இருந்தா , அம்மா புராணம் கேட்கனும்னு ஆசை இருந்தா தமிழ்நாடே சொர்க்கபுரியா இருக்குனு நீங்க நம்பனும்னா இந்த சேனலை டவுன்லோட் செய்து பாருங்கள்.

தரவிறக்கம் செய்ய :   CLICK HERE

No comments:

Post a Comment