வாட்ஸ்அப்-கணிணியில் பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப் நிறுவனமானது வாட்ஸ்அப் வெப் என்ற சேவையை அறிமுகபடுத்தியது. ஆனால், இச்சேவையை பற்றிய சில தவறான தகவல்கள் பயனர்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால் வாட்ஸ்அப் வெப் சேவையின் மூலம் கைபேசி இல்லாமல் வாட்ஸ்அபில் அளவலாம் என்பதேய். ஆனால் இது தவறான கருத்து.
தற்போதைய வாட்ஸ்அப் வெப் சேவையை பயன்படுத்தும் போதும் உங்கள் கைபேசி இணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். அதாவது, இச்சேவை கண்ணாடி போல செயல் படும். அதாவது, கைபேசியில் உள்ள பேச்சு தொகுப்புகள் உங்கள் கணிணியில் சின்க் செய்யபடும். அதோடு உங்கள் கைபேசி இணைய தொடர்பில் இருக்கும் வரை உங்கள் கணிணி வாயிலாக உங்களால் சாட் செய்ய இயலும். ஆகவே உங்கள் கணிணியின் கிபோர்ட் உதவியுடன் விரைவாக சாட் செய்வதுடன், உங்கள் நண்பர்கள் அனுப்பும், புகைப்படங்கள், குறும்ஒலி செய்திகள் (வாய்ஸ் மெசேஜ்), காணொளிப்பதிவுகளை நேரடியாக உங்கள் கணிணியில் சேமிக்கலாம்.
சரி, இப்போது இச்சேவையை எப்படி பயன்படுத்துவது என்று பார்போம்.
- முதலில் உங்கள் கைபேசியின் வாட்ஸ்அப் செயலியை (WhatApp application) புதிய பதிப்பிற்கு புதுப்பித்து கொள்ளவும்.
- தற்போதைய வாட்ஸ்அப் வெப் சேவையை கூகிள் க்ரோம் உலாவியில் (Google Chrome) மட்டுமே செயல்படுத்த இயலும்.
- இப்போது கணிணியில் இந்த தளத்திற்கு செல்லவும். https://web.whatsapp.com/

4. உங்கள் கைபேசியில்வாட்ஸ்அப் செயலியை (WhatApp application) திறக்கவும்
5. அதில் மெனுவிற்கு செல்லவும்.

விண்டோஸ் போனில்

ஆண்ட்ராட் போனில்
6. WhatsApp web என்பதை கிளிக் செய்க
7. இந்த திரை ஓபன் ஆகும்

8. QR code ஸ்கேன் செய்க
9. உங்கள் கணக்கிற்கு தானாகவே உள்நுழையும்

அவ்வளவு தான்!
No comments:
Post a Comment