Thursday, 15 May 2014

அன்றாட வாழ்வில் நவீனம்

அன்றாட வாழ்வில் நவீனம்

இன்றைய நவீன உலகத்தில் கணினி இல்லாத வீடோ அல்லது அலுவலகமோ இருக்கும்மென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். பிறப்பு சான்றிதழ்  முதல் இறப்பு சான்றிதழ் வரை விண்ணப்பம் செய்ய இன்று கணினி பயன்படுகிறது .அன்றெல்லாம் கணினி ஒரு ஆடம்பர செலவு என்று நினைத்தவர்கள் கூட இன்று தம் பிள்ளைகளுக்கு கணினி வாங்கித்தருவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.சரி அது போகட்டும்.

என்னதான் நம்ம வீட்டுல கணினி வைத்திருந்தாலும் அதை பற்றி நமக்கு முழுசா தெரிவதில்லை. எனக்கு எல்லாம் தெரியுமே என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. சரி முதலில் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு யோசிக்காமல் பதில் கூறுங்கள் பார்போம். உதரணத்திற்கு நீங்கள் உங்கள் கணினியை இயக்க முற்படும் போது உங்கள் கணினி திரும்ப திரும்ப ரீஸ்டார்ட் ஆகிக்கொண்டே இருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்?!.பதில் தெரிந்தால் விட்டுவிடுங்கள்.மத்தவங்க யோசிகிறீங்களா?!.

அங் ! உடனே கணினி சர்வீஸ் செய்பவரை அழைப்பீர் தானே. இதுதான் நாம லெவல். எதுக்கு தேவை இல்லாம எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு. நமக்கு தெரிந்ததே போதும் என்று நினைபவர்கள் பலர். அப்படி விஞ்ஞானிகளும் ,அறிவியல் மேதைகளும் நினைத்திருந்தால் நீங்கள் இன்று உங்கள் வீட்டிலிருந்து கொண்டு எதோ ஒரு நாட்டில் இருக்கும் உறவினர்களுகோ அல்லது நன்பர்களுகோ வீடியோ காலிங் செய்ய முடியுமா. அல்லது தொலைகாட்சியில் நாடகம்தான் பார்க்க முடியுமா.அதனால் முடிந்தவரை எதாவது கற்றுகொள்ளுங்கள்.சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் அடுத்த கட்டுரையில் கூறுகிறேன்.அதுவரை பொருத்துருங்கள்.

மாணவா்கள் சுற்றுலா


பெண்களின் பாதுகாப்பு

பெண்களின் பாதுகாப்பு


நாட்டில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிவரும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.யாரை சொல்லி என்ன பயன் .

"திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

என்ற பாடலை போல பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களாக பார்த்து திருந்தாவிட்டால் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் தீரப்போவதே இல்லை .
சரி ,அது ஒரு புறம் இருந்தாலும் நம்மை நாமே தீயவர்களிடம் இருந்து காப்பற்றிகொள்வதே சிறந்தது.

அதற்காக இதோ உங்களுக்கு சில குறிப்புகள் .

1 . இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ ,உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனியுங்கள் .காதில் ஹெட் செட்டை மாட்டிகொண்டு தீயவர்களின் பிடியில் மாட்டி கொள்ளாதீர் .

2. எப்போதும் நண்பர்கள்,குடும்பத்தார்,அல்லது காவல் நிலையத்தின் எண்களை SPEED DIAL களில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.அவசரம் என்றால் உடனடியாக அழைக்க ஏதுவாக இருக்கும் .

3. என்ன நடந்தாலும் கண்களில் பயத்தை காட்டாதீர் .இந்த தைரியம் ஒன்றே உங்களுக்கு துணை நிற்கும் .நம்மால் முடியும் .பெண் ஆணுக்கு சளைத்தவள் இல்லை என்று உங்களை நீங்களே தேற்றிக்கொள்ளுங்கள்    .இந்த மாதிரி நேரங்களில் கிரண் பேடி ,திலகவதி IPS ,போன்றோரை நினைத்து கொள்ளுங்கள்,தைரியம் தன்னால வரும் . (இவர்களை தெரியவில்லை என்றால் நடிகை விஜயசாந்தியை நினைத்துக்கொள்ளுங்கள்)    

4. இரவு நேரங்களில் தனியாக ஆட்டோ அல்லது வாடகை கார்களில் பயணம் செய்வதைவிட பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யுங்கள் .அப்படி ரயில் அல்லது பேருந்து கிடைக்காமல் ஆட்டோ,வாடகை கார்களில் பயணம் செய்ய நேர்ந்தால், நீங்கள் வரும் வண்டியின் நம்பர் ,எங்கே வந்து கொண்டிருக்கிறீர் ,இன்னும் எவ்வளவு நேரத்தில் வந்து சேர்வீர் போன்ற தகவல்களை உங்கள் பெற்றோருக்கு அல்லது நீங்கள் பார்க்க செல்லும் உறவினர்களுக்கோ,வாகன ஓட்டுனர் காதில் விழும்படி போனில் பேசி தெரியப்படுத்துங்கள் .உண்மையாக, பேச யாரும் இல்லை என்றாலும் சும்மாவது போனில் பேசுவது போல் நடிங்க !

5.வெளியில் செல்லும் போது ஆடை விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.எப்போதும் பாதுக்காப்பான ஆடைகளை அணியுங்கள்.பிறர் மனதை தூண்ட கூடியது போன்ற ஆடைகள் எப்போதும் உடுத்த வேண்டாம்.என் மனதுக்கு பிடித்த ஆடைகளை நான் உடுத்த எனக்கு உரிமை இல்லையாயென்றால்? .அதெல்லாம் இருக்கிறது .ஆனால் நம்மை நாமே காப்பற்றிகொள்ளத்தான் இத்தன்னையும்.

மாணவா்கள் சுற்றுலா


மாணவா்கள் சுற்றுலா


ஸ்ரீ முருகன் கணினி பயிற்சி நிறுவனம் - செஞ்சி மாணவிகள்


ஸ்ரீ முருகன் கணினி பயிற்சி நிறுவனம் - செஞ்சி மாணவிகள்


ஸ்ரீ முருகன் கணினி பயிற்சி நிறுவனம் - செஞ்சி மாணவிகள்


ஸ்ரீ முருகன் கணினி பயிற்சி நிறுவனம் - செஞ்சி மாணவிகள்

ஆசிாியாின் பிறந்த நாள் விழா - 2013 - 2014

13-05-2014

ஸ்ரீ முருகன் கணினி பயிற்சி நிறுவனம் - செஞ்சி மாணவிகள் 1


ஸ்ரீ முருகன் கணினி பயிற்சி நிறுவனம் - செஞ்சி

ஆசிாியாின் பிறந்த நாள் விழா - 2013 - 2014

13-05-2014

ஆசிாியாின் பிறந்த நாள் விழா


ஸ்ரீ முருகன் கணினி பயிற்சி நிறுவனம் - செஞ்சி