அன்றாட வாழ்வில் நவீனம்
இன்றைய நவீன உலகத்தில் கணினி இல்லாத வீடோ அல்லது அலுவலகமோ இருக்கும்மென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை விண்ணப்பம் செய்ய இன்று கணினி பயன்படுகிறது .அன்றெல்லாம் கணினி ஒரு ஆடம்பர செலவு என்று நினைத்தவர்கள் கூட இன்று தம் பிள்ளைகளுக்கு கணினி வாங்கித்தருவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.சரி அது போகட்டும்.
என்னதான் நம்ம வீட்டுல கணினி வைத்திருந்தாலும் அதை பற்றி நமக்கு முழுசா தெரிவதில்லை. எனக்கு எல்லாம் தெரியுமே என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. சரி முதலில் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு யோசிக்காமல் பதில் கூறுங்கள் பார்போம். உதரணத்திற்கு நீங்கள் உங்கள் கணினியை இயக்க முற்படும் போது உங்கள் கணினி திரும்ப திரும்ப ரீஸ்டார்ட் ஆகிக்கொண்டே இருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்?!.பதில் தெரிந்தால் விட்டுவிடுங்கள்.மத்தவங்க யோசிகிறீங்களா?!.
அங் ! உடனே கணினி சர்வீஸ் செய்பவரை அழைப்பீர் தானே. இதுதான் நாம லெவல். எதுக்கு தேவை இல்லாம எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு. நமக்கு தெரிந்ததே போதும் என்று நினைபவர்கள் பலர். அப்படி விஞ்ஞானிகளும் ,அறிவியல் மேதைகளும் நினைத்திருந்தால் நீங்கள் இன்று உங்கள் வீட்டிலிருந்து கொண்டு எதோ ஒரு நாட்டில் இருக்கும் உறவினர்களுகோ அல்லது நன்பர்களுகோ வீடியோ காலிங் செய்ய முடியுமா. அல்லது தொலைகாட்சியில் நாடகம்தான் பார்க்க முடியுமா.அதனால் முடிந்தவரை எதாவது கற்றுகொள்ளுங்கள்.சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் அடுத்த கட்டுரையில் கூறுகிறேன்.அதுவரை பொருத்துருங்கள்.
No comments:
Post a Comment