Thursday, 15 May 2014

பெண்களின் பாதுகாப்பு

பெண்களின் பாதுகாப்பு


நாட்டில் பெண்களுக்கு எதிராக அரங்கேறிவரும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.யாரை சொல்லி என்ன பயன் .

"திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

என்ற பாடலை போல பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களாக பார்த்து திருந்தாவிட்டால் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் தீரப்போவதே இல்லை .
சரி ,அது ஒரு புறம் இருந்தாலும் நம்மை நாமே தீயவர்களிடம் இருந்து காப்பற்றிகொள்வதே சிறந்தது.

அதற்காக இதோ உங்களுக்கு சில குறிப்புகள் .

1 . இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ ,உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனியுங்கள் .காதில் ஹெட் செட்டை மாட்டிகொண்டு தீயவர்களின் பிடியில் மாட்டி கொள்ளாதீர் .

2. எப்போதும் நண்பர்கள்,குடும்பத்தார்,அல்லது காவல் நிலையத்தின் எண்களை SPEED DIAL களில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.அவசரம் என்றால் உடனடியாக அழைக்க ஏதுவாக இருக்கும் .

3. என்ன நடந்தாலும் கண்களில் பயத்தை காட்டாதீர் .இந்த தைரியம் ஒன்றே உங்களுக்கு துணை நிற்கும் .நம்மால் முடியும் .பெண் ஆணுக்கு சளைத்தவள் இல்லை என்று உங்களை நீங்களே தேற்றிக்கொள்ளுங்கள்    .இந்த மாதிரி நேரங்களில் கிரண் பேடி ,திலகவதி IPS ,போன்றோரை நினைத்து கொள்ளுங்கள்,தைரியம் தன்னால வரும் . (இவர்களை தெரியவில்லை என்றால் நடிகை விஜயசாந்தியை நினைத்துக்கொள்ளுங்கள்)    

4. இரவு நேரங்களில் தனியாக ஆட்டோ அல்லது வாடகை கார்களில் பயணம் செய்வதைவிட பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்யுங்கள் .அப்படி ரயில் அல்லது பேருந்து கிடைக்காமல் ஆட்டோ,வாடகை கார்களில் பயணம் செய்ய நேர்ந்தால், நீங்கள் வரும் வண்டியின் நம்பர் ,எங்கே வந்து கொண்டிருக்கிறீர் ,இன்னும் எவ்வளவு நேரத்தில் வந்து சேர்வீர் போன்ற தகவல்களை உங்கள் பெற்றோருக்கு அல்லது நீங்கள் பார்க்க செல்லும் உறவினர்களுக்கோ,வாகன ஓட்டுனர் காதில் விழும்படி போனில் பேசி தெரியப்படுத்துங்கள் .உண்மையாக, பேச யாரும் இல்லை என்றாலும் சும்மாவது போனில் பேசுவது போல் நடிங்க !

5.வெளியில் செல்லும் போது ஆடை விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.எப்போதும் பாதுக்காப்பான ஆடைகளை அணியுங்கள்.பிறர் மனதை தூண்ட கூடியது போன்ற ஆடைகள் எப்போதும் உடுத்த வேண்டாம்.என் மனதுக்கு பிடித்த ஆடைகளை நான் உடுத்த எனக்கு உரிமை இல்லையாயென்றால்? .அதெல்லாம் இருக்கிறது .ஆனால் நம்மை நாமே காப்பற்றிகொள்ளத்தான் இத்தன்னையும்.

No comments:

Post a Comment