Tuesday, 12 January 2016

Wi-Fi Direct என்றால் என்ன?

Wi-Fi Direct என்றால் என்ன?

 Wi-Fi P2P என முதலில் அழைக்கப்பட்டது. இது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக் கொள்ள உதவுகின்றது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. சாதனங்களில் Wi-Fi Direct/Wi-Fi வசதி இருந்தாலே போதுமானது. 

மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), கேமரா, கம்ப்யூட்டர், விளையாட்டு சாதனங்கள்(PS3) போன்றவை ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் இணைந்து தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications), பைல்கள்(files) போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும்.

எதிர்காலத்தில் இந்த வசதி மூலம் வீட்டின் விளக்குகளை மொபைலின் மூலம் அணைக்கவோ எரியவைக்கவோ இயலும்..இதுபோல பல விஷயங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உள்ளன..வருங்காலம் இந்த தொழில்நுட்கத்தை உபயோகித்து பயன்பெறும் என்பதில் ஐயமில்லை..
இந்த பயனை குறிக்கும் வீடியோ இதோ..



Wi-Fi Direct சாதனம் WPA2™ என்னும் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் இயங்குவதால் தகவல் பாதுகாப்பு குறித்து கவலைபட தேவை இல்லை.

Wi-Fi Direct உள்ள மொபைல் போன்கள்,
Samsung Galaxy S3,S4
LG Nexus 5

apple vlc player - ஆப்பிள் ஸ்டோரில் வி.எல்.சி. பிளேயர்


apple vlc player - ஆப்பிள் ஸ்டோரில் வி.எல்.சி. பிளேயர்
2011 ஆம் ஆண்டு, வீடியோலேன் நிறுவனத்தின் வி.எல்.சி. பிளேயர், ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பதிப்பு 2.0.1 என்ற பெயருடன், மீண்டும் அதே ஸ்டோரில் இடம் பிடித்துள்ளது. ஐ போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்தும் பதிப்பாக இந்த வி.எல்.சி. பிளேயர் இடம் பெற்றது. என்ன காரணத்தினாலோ நீக்கப்பட்டு, தற்போது புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டு இடம் பெற்றுள்ளது. இதில் கீழ்க்காணும் வசதிகள் புதியனவாக இடம் பெற்றுள்ளன. 

வை-பி மூலம் இந்த சாதனங்களுக்கு பைல்களை அப்லோட் செய்திடலாம். ட்ராப் பாக்ஸ் இந்த சாதனங்களுடன் இணைக்கப்பட்டு பைல்களைக் கையாளும் வசதி தரப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் பயன்படுத்தி ஒரு வீடியோ மீடியா லைப்ரேரி ஒன்றை உருவாக்கி நிர்வகிக்கலாம்.
வண்ணக் கலவைகள் எப்படி இருக்க வேண்டும் என இதன் மூலம் செட் செய்திடலாம்.
அனைத்து வகையான பைல்களையும் இதில் இயக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பல ஆடியோ ட்ரேக்குகளை இதில் இயக்கலாம். 
நெட்வொர்க் பைல் இயக்கத்திற்கு வழி தரப்பட்டுள்ளது. 
புளுடூத் ஹெட் செட் மற்றும் ஏர் பிளே ஆகியவற்றை இதில் மேற்கொண்டு செயல்படுத்த முடியும்.
இது முற்றிலும் இலவசம் மற்றும் ஓப்பன் சோர்ஸ் தன்மை கொண்டது.
வருங்காலத்தில், மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் மற்றும் கூகுள் ட்ரைவ் ஆகியவற்றுக்கும் சப்போர்ட் தரப்படும்.
சென்ற ஆண்டு ஜூலையில், வீடியோ லேன், ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான வி.எல்.சி. பிளேயரை சோதனைப் பதிப்பாக வெளியிட்டது. இது இன்னும் சோதனைப் பதிப்பாகவே உள்ளது.
ஆப்பிள் சாதனங்களில் வி.எல்.சி. பிளேயரை இயக்க ஐ.ஓ.எஸ். சிஸ்டம் பதிப்பு 5.1 அல்லது அதற்கும் மேற்பட்டது தேவை. இந்தியாவின் ஆப்பிள் ஸ்டோரிலும் வி.எல்.சி. மீடியா பிளேயர் இலவசமாகக் கிடைக்கிறது

.https://itunes. apple.com/in/app/id650377962 என்ற இணைய தளம் சென்று இதனைப் பெறலாம்.

Monday, 11 January 2016

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கான பயனுள்ள உதவிக்குறிப்புகள்



பேஸ்புக் தளமானது உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் மிகப்பெரியதொரு சமூக வலைத்தளமாகும். இதனை கணினி மூலம் பயன்டுத்துபவர்களை விட ஸ்மார்ட் போன்கள் மூலம் பயன்படுத்துபவர்களே இன்று அதிகம்.

ஆண்ட்ராய்டு பேஸ்புக்


அந்த வகையில் இன்று பேஸ்புக் செயலி நிறுவப்படாத ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என்றே கூற வேண்டும். அத்துடன் பெரும்பாலான மொபைல் சாதனங்களை புதிதாக வாங்கும் போதே அதில் பேஸ்புக் செயலி நிறுவப்பட்டிருக்கின்றன.


எது எப்படியோ சமூக வலைதளத்தில் பேஸ்புக் போல மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டு என்றே கூற வேண்டும். இதனடிப்படையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக் தளத்தை வலம் வரும் பயனர்களே ஏராளம்.

எனவே நீங்களும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் மூலம்பேஸ்புக் தளத்தை பயன்படுத்துபவர் எனின் பின்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையலாம்.


10. எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களில் பகிர்ந்து கொள்ள 

பொதுவாக பேஸ்புக் தளத்தில் எண்கள் எழுத்துக்கள் குறியீடுகளைக் கொண்டு எமது நிலைத் தகவல்களை பகிந்துகொள்ள முடிந்தாலும் நாம் அதில் தட்டச்சு எழுத்துக்களை வெவ்வேறு தோற்றங்களுக்கு மாற்ற முடிவதில்லை எனினும் Fsymbols எனும் இணையதளமானது நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை பல அட்டகாசமான தோற்றங்களுக்கு மாற்றித்தருகிறது. பின் அவற்றை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். நாம் எழுதக்கூடிய எழுத்துக்களை சுற்று வட்டமிடப்பட்டதாகவும், தலைகீழாகவும், வலம் இருந்து இடமாகவும் என பல அருமையான தோற்றங்களுக்கு மாற்றிப்பெற்றுக்கொள்ள முடியும்.


9. நண்பர்களின் இற்றைபடுத்தல்களை அறிய பேஸ்புக் விட்ஜெட் வசதியை பயன்படுத்தலாமே 

ஆண்ட்ராய்டு பேஸ்புக் விட்ஜெட்


எமது ஸ்மார்ட் போனுக்கு நாம் செயலிகளை நிறுவும் போது பெரும்பாலான செயலிகள் அவற்றுக்கான விட்ஜெட்டை வசதியுடன் நிறுவப்படுகின்றன. இவற்றின் மூலம் குறிப்பிட்ட செயலியில் உள்ள வசதிகளை ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே மிக இலகுவில் பெற்றுக்கொள்ளலாம்.

அதே போல் பேஸ்புக் செயலிக்கான விட்ஜெட் வசதியை உங்கள் ஸ்மார்ட் போனின் ஹோம் ஸ்க்ரீன் பகுதியில் இணைத்துக் கொள்வதன் மூலம் ஹோம் ஸ்க்ரீனில் இருந்தவாறே உங்கள் நண்பர்களின் இடுகைகளை கண்காணிக்கலாம்.

விட்ஜெட்டை இணைக்கும் முறையானது சாதனத்துக்கு சாதனம் வேறுபடலாம் இருப்பினும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் அதன் ஹோம் ஸ்க்ரீனை தொடர்ச்சியாக சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் விட்ஜெட்களை இணைப்பதற்கான வசதியை பெறலாம்.


8. நோட்டிபிகேஷகளை நிர்வகிக்க 

பேஸ்புக் தளத்தில் எமக்கு புதியதொரு செய்தி (Message) வரும் போதும், புதிய நண்பர்களின் கோரிக்கை வரும் போதும், புகைப்படங்களில் நாம் Tag செய்யப்படும் போதும் என இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் எமது பேஸ்புக் கணக்கில் நிகழும் பல்வேறு மாற்றங்களை நாம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் செயலியில் நோட்டிபிகேஷன் வசதி தரப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷன்


இது ஒரு சிறந்த வசதியாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான நோட்டிபிகேஷன்கள் வரும் போது அதுவே எமக்கு தொந்தரவாகவும் அமைந்துவிடுவதுண்டு.

எனவே எமது பேஸ்புக் கணக்கில் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்களுக்கு மாத்திரம் நோட்டிபிகேஷன்கள் தோன்றும் வகையில் பேஸ்புக் செயலியை அமைத்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தோன்றும் மூன்று கோடுகளாலான மெனு பட்டனை சுட்டும் போது தோன்றும் App Settings ===> Notification எனும் பகுதி மூலம் மேற்குறிப்பிட்ட செயற்பாட்டை மேற்கொள்ளலாம்.


7. அருகிலுள்ள நண்பர்களையும் இடங்களையும் அறிய 

அத்துடன் கணினியின் மூலம் பெறமுடியாத ஆனால் ஸ்மார்ட் போன்கள் மூலம் பெற முடிகின்ற ஒரு வசதியே Nearby Places மற்றும் Nearby Friends என்பதாகும். நீங்கள் உலகின் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும் உங்களுக்கு அருகில் இருக்கும் விடுதிகள், உணவகங்கள், விற்பனை நிலையங்கள் போன்ற இன்னும் பல இடங்களையும் Nearby Friends என்பதன் மூலம் உங்களுக்கு அருகில் இருக்கும் உங்களது முகநூல் நண்பர்களையும் அறிந்து கொள்ளலாம்.




பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Nearby Places மற்றும் Nearby Friends என்பவற்றை சுட்டுவதன் மூலம் மேற்குறிப்பிட்ட வசதிகளை பெறலாம்.


6. தானாக இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை தடுக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய வீடியோ கோப்புக்கள் தானாகவே இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எமது பேஸ்புக் பக்கத்தில் தோன்றக்கூடிய அனைத்து வீடியோ கோப்புக்களும் தானாக இயங்குவதால் தேவையற்ற விதத்தில் எமது தரவுப்பாவனை அதிகரிக்கின்றது.



எனவே இதனை தவிர்த்துக்கொள்ள Video Auto Play வசதியை நிறுத்திக் கொள்ளலாம். இதனை மேற்கொள்ள நாம் மேலே குறிப்பிட்ட வகையில் App Settings பகுதிக்கு சென்று அதில் தரப்பட்டிருக்கும் Auto Play என்பதை சுட்டுக. பின் Never Auto Play Video என்பதை தெரிவு செய்வதன் மூலம் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்குவதை தடுக்கலாம்.


5. பதிவுகளை சேமிக்க:

பேஸ்புக் தளத்தில் பகிரப்படக்கூடிய கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், இணைய இணைப்புகள் போன்றவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்ப்பதற்காக அதனை சேமித்து வைக்க முடியும்.

இதனை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட பதிவின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள அம்புக்குறி அடையாளத்தை சுட்டும் போது பெறப்படும் சாளரத்தில் Save Video அல்லது Save Link எனும் பட்டனை சுட்டுவதன் மூலம் அவற்றை பிறகொரு சந்தர்பத்தில் பார்த்துக் கொள்ளும் வகையிலும் சேமித்துக் கொள்ளலாம்.

சேமிக்கப்பட்டவற்றை பெற்றுக்கொள்ள மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Saved என்பதை சுட்ட வேண்டும்.



4. வேண்டாமே கவலை:

உங்கள் பேஸ்புக் கணக்கை இன்னும் ஒருவர் உபயோகப்படுத்துவதாக உணர்கிறீர்களா? 

இதற்கு பெரும்பாலும் எமது கவனயீனமே ஒரு காரணமாக அமைந்துவிடலாம். நாம் பொது இடங்களில் இருக்கும் கணினிகளிலோ அல்லது நண்பர்களின் ஸ்மார்ட் போன்கள் மூலமாகவோ எமது முகநூல் கணக்கை பயன்படுத்தி விட்டு அதனை Logout செய்ய மறந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதுண்டு.

இருப்பினும் இதற்கு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பேஸ்புக் செயலியின் மெனு பகுதியில் தரப்பட்டுள்ள Account settings ===> Security ===> Active Sessions எனும் பகுதி மூலம் நாம் Logout செய்ய மறந்த சாதனங்களில் இருந்து எமது பேஸ்புக் கணக்கை Logout செய்துகொள்ள முடியும்.



3. நண்பர் தான் ஆனால் பதிவுகள் வேண்டாம்:

முகநூலில் இருக்கும் நண்பர் ஒருவர் பகிரக்கூடிய தகவல்கள் உங்களுக்கு பிடிக்கவில்லைய? எனவே அவரது பதிவுகள் உங்களுக்கு தோன்றாமல் இருக்க அவரை நண்பர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு பதிலாக அவரை Unfollow செய்யலாம். இதன் போது அவர் தொடர்ச்சியாக எமது நண்பர் பட்டியலில் இருந்தாலும் அவர் பகிரக்கூடிய தகவல்கள் எமக்கு தோன்ற மாட்டாது.




இதனை மேற்கொள்ள குறிப்பிட்ட நண்பரின் சுயவிவர (Profile) பகுதிக்குச் சென்று Following என்பதை சுட்டுவதன் மூலம் Unfollow என்பதை தெரிவு செய்ய வேண்டியது தான்.


2. பதிவுகளை தவறாமல் பார்க்க வேண்டுமெனில்:

மேலே குறிப்பிட்ட முறைக்கு மாறாக ஒரு நண்பரின் அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளை தவறாமல் பெற்றுக்கொள்ள விரும்பினால் அதற்கும் வசதி தரப்பட்டுள்ளது.

இதனை மேற்கொள்ள வேண்டுமெனில் குறிப்பிட்ட நண்பரின் அல்லது முகநூல் பக்கத்தின் Profile பகுதிக்கு சென்று  Following என்பதை சுட்டும்போது பெறப்படும் சாளரத்தில் See First என்பதை அழுத்த வேண்டும்.



1. அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள:

நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை அரட்டைக்கான பகுதியில் (Chatting Window) Pin செய்துகொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் Pin செய்யும் நண்பர்களின் பெயர்கள் அரட்டைக்கான சாளரத்தின் மேற்பகுதியில் தோன்றும். 

எனவே அரட்டையில் ஈடுபடவேண்டிய ஒவ்வொரு சந்தர்பங்களிலும் உங்கள் நண்பர் பட்டியலில் இருந்து அவர்களை தேடிப்பெற வேண்டிய அவசியம் இருக்காது.



பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள நண்பர்களை அடையாளப்படுத்தும் குறியீட்டை சுட்டுவதன் மூலம் உங்கள் நண்பர்களின் பட்டியலை பெறலாம்.

பின் அதில் தரப்பட்டுள்ள EDIT என்பதை சுட்டுவதன் மூலம் நீங்கள் அடிக்கடி அரட்டையில் ஈடுபடும் நண்பர்களை Pin செய்துகொள்ள முடியும் 


தொழில்நுட்ப சொற்கள்:
  • அரட்டை: Chatting
  • முகநூல்: Facebook
  • நிலைத் தகவல்: Status Update
  • இற்றைபடுத்தல்: Update

வெக்டர் கிராபிக்ஸ் படங்கள் வரைய Google Drawing நீட்சி



வெக்டர் கிராபிக்ஸ் படங்கள் வரைய கூகிள் டிராயிங் நீட்சி

கூகிள் தரும் வசதிகள் பல. அவைகள் அனைத்தும் இலவசம். அதுபோன்ற ஒரு இலவச வசதிதான் கூகிள் டிராயிங் நீட்சி.

google-vercor-graphics
வெக்டர் கிராபிக்ஸ் படம்

கூகிள் டிராயிங் நீட்சியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பம்போல் வெக்டர் கிராபிக்ஸ் படங்களை உருவாக்கலாம். அதுமட்டுமல்லாமல் Chart, Diagrams போன்றவற்றினை உருவாக்கும் வசதி இதில் உண்டு.
google-drawing-plugin-to-make-vector-image
google drawing vector graphics

கூகிள் டிரைவ் & டிராயிங்


கூகிள் டிரைவ் என்பது கணினியில் உள்ள Hard Drive போன்றது. ஒரே வித்தியாசம் உங்கள் கணினி ஹார்ட் டிரைவில் (computer hard disk) கோப்புகளை சேமித்தால் உங்கள் கணினியை இருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் கோப்புகளை அணுக முடியும்.

கூகிள் டிரைவில் சேமித்தால், உங்களுக்கு இணைய இணைப்புடன் கூடிய ஏதாவது ஒரு கணினி இருந்தாலே போதும். ஜிமெயிலை அணுகுவது போல, உங்களுடைய கூகிள் கணக்கில் சென்று கூகிள் டிரைவில் உள்ள கோப்புகளை (Google Drive files) உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் எடுத்துப் பயன்படுத்திட முடியும். அவற்றை எடிட் செய்திடவும் முடியும்.

வெக்டர் ஓவியங்களை கூகிள் டிரைவில் சேமிக்கும் வசதி: 


வெக்டர் ஓவியங்கள் வரையும் வசதி, கூகிள் டிரைவ் வசதியுடன் இணைந்தே கிடைக்கிறது.அதனால் கூகிள் டிராயிங் வசதியின் மூலம் நீங்கள் வரையும் ஓவியங்கள், கிராபிக்ஸ் படங்கள், சார்ட்கள், டயகிராம்ஸ்கள் அனைத்தும் (Drawing, Charts, Diagrams) கூகிள் டிரைவ் தானாகவே சேமிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.சேமிக்கப்பட்டவைகளை மீண்டும் மற்ற கணினிகளில் திறந்து பயன்படுத்திட முடியும்.  

கூகிள் டிரைவில் நீங்கள் வரையும் ஓவியங்கள் சார்ட்கள் சேமிக்கப்படுவதால் உலகத்தில் எந்த ஒரு கணினியைப் பயன்படுத்தியும், உங்களது கணக்கில் சேமிக்கப்பட்டுள்ளவற்றை எடுத்துப் பயன்படுத்திட முடியும். அவற்றை மீண்டும் மாற்றம் செய்ய (Editing) முடியும்.

Google Drawing நீட்சியை கூகுள் குரோம் உலவியிலும் இணைத்துப் பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. வெக்டர் கிராபிக்ஸ் படங்கள் வரைய இந்தகூகிள் டிராயிங் நீட்சி பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

கூகிள் டிராயிங் நீட்சியை தரவிறக்கம் செய்ய சுட்டி: