Thursday, 24 December 2015

2500 இந்திய ரூபாய் பெறுமதியான Icecream PDF Converter மற்றும் PDF Split & Merge மென்பொருள்கள் இலவசமாக.

2500 இந்திய ரூபாய் பெறுமதியான Icecream PDF Converter மற்றும் PDF Split & Merge மென்பொருள்கள் இலவசமாக.

இன்று அதிகமான ஆவணங்கள் PDF வடிவத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படுகின்றது.
இவ்வாறு PDF வடிவில் உருவாக்கப்படும் ஆவணங்களை எமக்குத் தேவையான ஆவன வடிவங்களுக்கும் அல்லது வேறு வடிவங்களில் இருக்கக் கூடிய ஆவணங்களை PDF வடிவத்திற்கும் மாற்றிக்கொள்ள ஏராளமான மென்பொருள்கள் மற்றும் இணையதளங்கள் எமக்கு துணை புரிகின்றன.
அந்த வகையில் மேற்கூறிய செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் பல்வேறு இணையதளங்களையும் மென்பொருள்களையும் அறிமுகப்படுத்தி இருந்தோம்.
இதனடிப்படையில் Icecream PDF Converter எனும் மென்பொருளும் எமது PDF ஆவணங்களை நிர்வகிப்பதற்காக ஏராளமான வசதிகளை தருகின்றது.
இதில் இலவச பதிப்பு கட்டணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பு என இரு வேறு பதிப்புகள் உள்ளன. இதன் இலவச பதிப்பில் வரையறுக்கப்பட்ட வசதிகளையே பெற முடிகின்றது என்றாலும் இதன் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பின் மூலம் வரையரற்ற இலவச பதிப்பை விட மேலதிக வசதிகளை பெற முடியும்.
இதன் இலவச பதிப்பில் ஆகக் கூடியது 10 பக்கங்களை கொண்ட PDF ஆவணங்களையே ஏனைய ஆவன வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடிவதுடன் ஏனைய வடிவங்களில் அமைந்துள்ள ஆவணங்களை PDF வடிவிற்கு மாற்றும் போது ஆகக் கூடியது 5 பக்கங்களையே கொண்டிருத்தல் வேண்டும். எனினும் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய பதிப்பில் இது போன்ற வரையறைகள் இல்லை.
Icecream PDF Converter Pro பதிப்பின் மூலம் பின்வரும் வசதிகளை பெறலாம்.
DOC, DOCX, XLSX, ODS, JPG, PNG, EPUB, MOBI, BMP, XLS, TIFF, ODT, HTML போன்ற எந்த விடிவில் அமைந்த ஒரு ஆவணத்தையும் PDF வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.
எந்த ஒரு PDF ஆவணத்தையும் JPG, BMP, DOC, ODT, HTML, TIFF, PNG, GIF, EPS,WMF, HTML போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
வெவ்வேறு வடிவங்களில் அமைந்துள்ள ஆவணங்களை ஒரே PDF ஆவணமாக மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் PDF ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் கடவுச்சொற்களை இடும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.
இவைகள் தவிர இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ள இந்த Icecream PDF Converter Pro எனும் மென்பொருளானது சுமார் 20 அமெரிக்க டொலர்கள் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய மென்பொருளாகும்.
இருப்பினும் chip1507icecream@chip.cz எனும் முகவரிக்கு ஒரு வெற்று மின்னஞ்சலை அனுப்புவதன் மூலம்  Icecream PDF Converter Pro  மற்றும் Icecream PDF Split & Merge Pro எனும் மென்பொருள்களுக்கான இலவச Licence Key ஐ பெற்றுக்கொள்ள முடியும்.
Icecream PDF Split & Merge Pro எனும் மென்பொருளானது வெவ்வேறுபட்ட PDF ஆவணங்களை ஒன்றாக இணைத்துக் கொள்வதற்கும் ஒரு நீண்ட PDF ஆவணத்தை வெவ்வேறாக பிரித்துக்கொள்ளவும் உதவுகின்றது. மேலும் நீங்கள் ஒன்றிணைக்கும் PDF ஆவணத்திற்கு கடவுச்சொல் இடுவதன் மூலம் அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் முடியும்.
இதனை பின்வரும் இணைப்புகள் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.
மேலே தரப்பட்டுள்ள இணைப்புக்களில் இருந்து இலவச பதிப்பை தரவிறக்கி கணினியில் நிறுவிய பின் குறிப்பிட்ட மென்பொருளின் Settings பகுதிக்கு சென்று நீங்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்ட Licence Key ஐ உள்ளிடுவதன் மூலம் அவற்றினை முழுமையான (Pro) பதிப்புக்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.


தமிழக அரசு அலுவலகங்கள், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கள் உட்பட அனைத்து வர்த்தக வங்கி களுக்கும், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள்,வாரியங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு அறிவித்துள்ள விடுமுறை அடிப்படையில், ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு, மார்ச் 25ம் தேதி புனிதவெள்ளி, வங்கிக்கணக்கு முடிப்பு நாள் ஏப்ரல் 1-ம் தேதி, தெலுங்கு வருடப்பிறப்பு ஏப்ரல் 8-ம் தேதி ஆகியவை வெள்ளிக்கிழமையில் வருவதால், தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை இருக்கும்.
அதேபோல், சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, மிலாடிநபி ஆகியவை திங்கள் கிழமைகளில் வருவதாலும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். தீபாவளி, கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி, மே தினம், உழவர் திருநாள், திருவள்ளுவர் தினம் ஆகியவை வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu - நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

Tamilnadu - நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்
1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 )  இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்
5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
14வது இடம்
6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?
மதுரை
7 )  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
2004
8 )  தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?
72993
9 )  தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?
சென்னை
10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?
1076 கி.மீ
11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது
1986
12 )  தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?
கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)
13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?
சென்னை (23,23,454)
14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
சென்னை (46,81,087)
15 )  தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
68.45 ஆண்டுகள்
16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?
13 மாவட்டங்கள்
17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
234
18 )  தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?
1
19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?
12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன
20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?
சென்னை
21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?
71.54 ஆண்டுகள்
22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15979
23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
561
24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
146
25 )  தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
18
26 )  தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?
39
27 )  தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?
தர்மபுரி (64.71 சதவீதம்)
28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?
பெரம்பலூர் 5,64,511
29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்? 
சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)
30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?
நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)
31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?
3,74,901
32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?
32
33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?
அரியலூர்
34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?
திருப்பூர்
35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்
80.33 சதவீதம்
36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?
17.58 சதவீதம்
37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?
வரையாடு
38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி
39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது? 
காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி
40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை
2.  கோவை
3. மதுரை 
4. திருச்சி   
5 தூத்துக்குடி 
6 சேலம்
41 )  தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?
999பெண்கள்(1000 ஆண்கள்)
42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. நீலகிரி         
2. சேலம்         
3. வேலூர்         
4. கன்னியாக்குமாரி
43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?
1. திருவாரூர்     
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி     
4. கடலூர்
44 )  தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?
மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)
45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?
www.tn.gov.in
46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?
ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்
48 )  தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோபுரம்
49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?
கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்
50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?
நீராடும் கடலுடுத்த
51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?
பரத நாட்டியம்
52 )  தமிழ்நாட்டின் மாநில பறவை எது?
மரகதப்புறா
53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?
செங்காந்தர் மலா்
55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?
கபடி

56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?
1,30,058 ச.கி.மீ
57 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958              
ஆண் 36158871       
பெண் 35980087
கண்டிப்பாக பகிரவும் மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள் ....
இவன்
- மக்களில் ஒருவன்

Tuesday, 22 December 2015

ஆண்டாரய்டு கேம்களை கம்ப்யூட்டரில் விளையாடுவது எப்படி?

ஆண்டாரய்டு கேம்களை கம்ப்யூட்டரில் விளையாடுவது எப்படி?

நாம் பலரும் Andriod போன்களில் கேம் விளையாட மிகவும் விருப்பம்உடையவர்களாக இருப்போம். அதை நமது PC/Laptopil விளையாடினால்…
என்ன Andriod OS வேண்டும் என்கிறிகளா அல்லது அதற்காக தலையைபிய்த்து கொண்கிறிகளா….
உங்கள் தேடலுக்கு இதோவிடை…..
இதற்கு பல மென்பொருள்கள்உள்ளன.அவற்றில் Bluestacksயும் ஒன்று.அதை பற்றி பார்போம்.
Bluestacks மென்பொருள் Andriod apps களை PC/Laptopil பயன்படுத்த உதவும்.
முதலில் Bluestacksஐ இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யாவும்
பிறகு install செய்யவும்.
click Run–>click Next–>
Blustacks with GO launcher
Search button பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான app டவுன்லோட் செய்யலாம்

வாட்ஸ்அப்-கணிணியில் பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப்-கணிணியில் பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் நிறுவனமானது வாட்ஸ்அப் வெப்  என்ற சேவையை அறிமுகபடுத்தியது. ஆனால், இச்சேவையை பற்றிய சில தவறான தகவல்கள் பயனர்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால் வாட்ஸ்அப் வெப் சேவையின் மூலம் கைபேசி இல்லாமல் வாட்ஸ்அபில் அளவலாம் என்பதேய். ஆனால் இது தவறான கருத்து.
தற்போதைய வாட்ஸ்அப் வெப் சேவையை பயன்படுத்தும் போதும் உங்கள் கைபேசி இணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். அதாவது, இச்சேவை கண்ணாடி போல செயல் படும். அதாவது, கைபேசியில் உள்ள பேச்சு தொகுப்புகள் உங்கள் கணிணியில் சின்க் செய்யபடும். அதோடு உங்கள் கைபேசி இணைய தொடர்பில் இருக்கும் வரை உங்கள் கணிணி வாயிலாக உங்களால் சாட் செய்ய இயலும். ஆகவே உங்கள் கணிணியின் கிபோர்ட் உதவியுடன் விரைவாக சாட் செய்வதுடன், உங்கள் நண்பர்கள் அனுப்பும், புகைப்படங்கள், குறும்ஒலி செய்திகள் (வாய்ஸ் மெசேஜ்), காணொளிப்பதிவுகளை நேரடியாக உங்கள் கணிணியில் சேமிக்கலாம்.
சரி, இப்போது இச்சேவையை எப்படி பயன்படுத்துவது என்று பார்போம்.
  1. முதலில் உங்கள் கைபேசியின் வாட்ஸ்அப் செயலியை (WhatApp application) புதிய பதிப்பிற்கு புதுப்பித்து கொள்ளவும்.
  2. தற்போதைய வாட்ஸ்அப் வெப் சேவையை கூகிள் க்ரோம் உலாவியில் (Google Chrome) மட்டுமே செயல்படுத்த இயலும்.
  3. இப்போது கணிணியில் இந்த தளத்திற்கு செல்லவும். https://web.whatsapp.com/
4. உங்கள் கைபேசியில்வாட்ஸ்அப் செயலியை (WhatApp application) திறக்கவும்
5. அதில் மெனுவிற்கு செல்லவும்.
  விண்டோஸ் போனில்
ஆண்ட்ராட் போனில்
6. WhatsApp web என்பதை கிளிக் செய்க
7. இந்த திரை ஓபன் ஆகும்
8. QR code ஸ்கேன் செய்க
9. உங்கள் கணக்கிற்கு தானாகவே உள்நுழையும்
அவ்வளவு தான்!

Monday, 21 December 2015

30 டாலர் மதிப்புள்ள Animation Wallpaper படங்களை உருவக்கும் சாப்ட்வேர் இலவசம்

30 டாலர் விலைமதிப்புள்ள அனிமேஷன் வால்பேப்பர் மேங்கிங் சாப்ட்வேர்லைசென்ஸ் கீயுடன் இலவசமாக கிடைக்கிறது.

இச்சலுகை இன்னும் இரு நாட்களுக்கு மட்டும்தான். டிசம்பர் 24 ம்தேதியுடன் முடிவடைகிறது. தேவைப்படுபவர்கள் டவுன்லோட் செய்து பயன்பெறலாம்.

பயன்: இந்த மென்பொருளில் உருவாகப்பட்ட அனிமேஷன் வால்பேப்பர்களை டெஸ்க்டாப் பேக்ரவுண்டாக வைத்து  டெஸ்க்டாப்பை அழகூட்டலாம்.

free animated wallpaper maker
அனிமேட் வால்பேப்பர் தயாரிக்கும் மென்பொருள்


டவுன்லோட் லிங்க்: Download Animated wallpaper software

லைசென்ஸ் கீ : GA-WP-98R-NV-DMIX

ரெஜிஸ்டர் செய்யும் முறை: 
  • முதலில் மேற்கண்ட இணைப்பை கிளிக் செய்து வால்பேப்பர் மேக்கர் சாப்டவேரை டவுன்லோட் செய்துகொள்ளவும். (Download என்ற பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்)
  • டவுன்லோட் செய்யப்பட்ட சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும். 
  • இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேரை கணினியில் திறக்கவும்.
  • இப்பொழுது Help ஆப்சன் சென்று Register என்பதை கிளிக் செய்யவும். (Ctrl +R)


    • தோன்றும் பெட்டியில் இங்குள்ள லைசென்ஸ் கீயை காப்பி செய்து உள்ளிட்டு Register பட்டனை அழுத்தவும்.
    அவ்வளவுதான். 30$ மதிப்புள்ள வால்பேப்பர் மேக்கர் சாப்ட்வேர் உங்களுக்குஇலவசமாக கிடைத்துவிட்டது.




    Tuesday, 15 December 2015

    மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த

    மவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த சில வேளைகளில் மவுஸ் மயக்க மருந்து சாப்பிட்டது போல என்ன செய்தாலும் நகராது. கர்சர் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும். வெகுநாட்கள் மவுஸைச் சுத்தம் செய்யாமல் விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சிறிய பாகங்கள் மவுஸினுள் மோசமாகிப் போனாலோ அல்லது மவுஸ் சார்ந்த சாப்ட்வேரில் பிரச்னை ஏற்பட்டாலோ இந்த நிலை ஏற்படலாம். அப்போது மவுஸ் கர்சரின் நகர்த்தலை கீ போர்டு மூலம் மேற்கொள்ளலாம். இந்த கீ போர்டு மவுஸ் மூலம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். கீ போர்டு மவுஸை இயக்கத்திற்குக் கொண்டு வரக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும். முதலில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள அட்மினிஸ்ட்ரேட்டராக நீங்கள் கம்ப்யூட்டருக்குள் நுழைய வேண்டும். அதன்பின் கீ போர்டு மவுஸ் செட் செய்வதற்கு Alt+Shift+NumLock கீகளை ஒரு சேர அழுத்தவும். உடன் ஒரு சிறிய மவுஸ்கீஸ் என்ற பெட்டி கிடைக்கும். இதில் மவுஸ் கீகளை செயல்படுத்த ஓகே பட்டன் அழுத்தவும். கீகளை மவுஸ் கர்சர் இயக்கத்திலிருந்து விடுவிக்க கேன்சல் பட்டன் அழுத்த வேண்டும். செட் செய்வதற்கு செட்டிங்ஸ் பட்டன் அழுத்தவும். செட்டிங்ஸ் கட்டத்தின் மூலம் மவுஸ் கர்சரை இன்னும் கொஞ்சம் விரிவாக செட் செய்திடலாம். எடுத்துக் காட்டாக மவுஸ் கர்சரின் வேகம், துடிப்பு, இப்போது செட்டிங்ஸ் பார் மவுஸ் கீஸ் என்ற கட்டம் கிடைக்கும். இதில் தேவையான மாற்றங்களை மேற்கொண்ட பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது நம்லாக் கீ பேட் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தலாம். 1,2,3,4,5,6,7,8,9 ஆகிய கீகள் மவுஸ் கர்சரை பல்வேறு திசைகளில் நகர்த்த உதவும். 5 என்ற கீ மவுஸ் இடது கிளிக் செயல்பாட்டிற்குப் பயன்படும். இன்ஸெர்ட் கீ மவுஸ் கர்சரை அழுத்திப் பிடிப்பதற்கான செயலை மேற்கொள்ளும். + கீ எந்த பொருளின் மீதும் டபுள் கிளிக்கிற்கு உதவிடும். டெலீட் பட்டனை அழுத்தினால் மவுஸ் அதன் இடத்திலிருந்து ரிலீஸ் ஆகும். நம் லாக் பட்டனில் கிளிக் செய்தால் கீ போர்டு மவுஸ் அமைப்பு விலகிடும்

    YouTube-வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?

    Facebook-ல் நம்முடைய நண்பர்கள் Youtube வீடியோக்களை share செய்து இருப்பார்கள் அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த்து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள்.Youtube தளத்தில் வீடியோக்களை Download செய்யும் வசதி இல்லாததால் பெரும்பாலனவர்கள் சில Downloader மென்பொருட்களை பயன்படுத்தி டவுன்லோட் செய்கின்றனர். சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை மிக இலகுவாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.1.முதலில் Youtube தளத்துக்கு சென்று உங்களுக்கு விரும்பிய வீடியோ ஒன்றை ஓபன் செய்து கொள்ளுங்கள் 2. இப்பொழுது நீங்கள் ஓபன் செய்த வீடியோ Link-இல் சின்ன மாற்றம் செய்ய வேண்டும் உதாரணத்துக்கு நீங்கள் ஓபன் செய்த வீடியோவின் Link இவ்வாறு இருக்கும் http://www.youtube.com/watch?v=sVOMh9CL-fI இதில் நீங்கள் Youtube.com இற்க்கு முன்னால் இரண்டு SS சேர்க்கவேண்டும் உதாரணத்திற்கு http://www.ssyoutube.com/watch?v=sVOMh9CL-fI இதபோல் இரண்டு SS சேர்த்து Enter ஐ அழுத்தவும். 3.இப்பொழுது http://en.savefrom.net/ என்ற தளம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் Open செய்த வீடியோவின் Format மற்றும் Quality ஐ காண்பிக்கும் உங்களுக்கு தேவையான வீடியோ Format-இல் கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளலாம் அவ்வளவுதான்ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.