Thursday, 10 March 2016

யூடியூப் வீடியோ பாடல்களை MP3 ஆக மாற்ற உதவும் இணையதளம்

யூடியூப் இணையதளத்தில் எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன. குறிப்பாக சினிமா பாடல்கள் அடங்கிய வீடியோக்கள் நிறைய உண்டு. வீடியோவெல்லாம் வேண்டாம்...அதில் இருக்கிற பாட்டு (Audio) மட்டும்தான் வேண்டும் என நினைத்தால் அவற்றை  வீடியோவிலிருந்து தனியாக MP3 ஆடியோவாக பிரித்து, டவுன் லோட் செய்து கொள்ளலாம். இதற்கென நிறைய Online Tools (Websites) உள்ளன. அவற்றில் இரண்டு முக்கியமான இணையதளங்களைப் பற்றி மட்டும் இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

youtube video to mp3 converter
யூடியூப் To MP3 கன்வர்ட்டர்

YouTube வீடியோக்களில் உள்ள ஆடியோக்களை மட்டும் MP3 பார்மேட்டில் பிரித்து கொடுக்க உதவும் அந்த இணைய தளத்தின் பெயர் THE YOU MP3. மற்றொரு இணையதளத்தின் பெயர் YouTube MP3.
எவர் ஒருவரும் மிக மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதியை கொண்டுள்ளது இந்த இணையதளங்கள்.

youtube video to mp3 online
யுடீயூப் வீடியோவை  MP3  ஆடியோவாக மாற்றும் முறை


The You Mp3 இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது?

கீழிருக்கும் சுட்டியை அழுத்தி தளத்திற்கு செல்க.
  • அதில் நீங்கள் விரும்பிய வீடியோவின் URL கொடுத்து "Convert" என்ற பட்டனை அழுத்தவும்.
  • சில நிமிடங்களில் வீடியோவிலிருந்து ஆடியோ மட்டும் பிரிக்கப்பட்டு Mp3 வடிவில் டவுன்லோட் செய்வதற்கான இணைப்பு (Download Button) கிடைக்கும். 
  • அதை கிளிக் செய்து MP3 ஆடியோவை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 


ஆன்ட்ராய்ட், டேப்ளட், ஐபோன் போன்ற எந்த ஒரு சாதனத்தின் மூலமும் இந்த தளத்தைப் பயன்படுத்தி, யூடியூப் வீடியோவில் உள்ள ஆடியோவை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

இந்த இணையதளத்தை பரிந்துரைப்பதற்கான காரணங்கள்: 


  • இந்தளத்தைப் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு கணக்கையும் தொடங்க தேவையில்லை.
  • யார் வேண்டுமானாலும், இந்த தளத்தை எளிதாக பயன்படுத்தி MP3 டவுன்லோட் செய்து கொள்ளலாம். 
  • முற்றிலும் இலவசம். 
  • வீடியோவிலிருந்து பிரிக்கப்படும் ஆடியோ தரமானதாகவும், துல்லியமாகவும் இருக்கும். 
  • மிக விரைவாக ஆடியோவை பிரித்துக் கொடுக்கிறது. 
  • வீடியோ URL ஐ உள்ளிட்டு கன்வர்ட் பட்டனை கிளிக் செய்த பிறகு, Video Title, video preview மற்றும் எவ்வளவு நேர நீளம் கொண்டது என்பதையும் காட்டும் வசதி. 
  • எத்தனை வீடியோக்கள் இருந்து வேண்டுமானாலும், MP3 ஆடியோவாக மாற்றி டவுன்லோட் செய்துகொள்ள முடியும். லிமிட்டேஷன் ஏதும் இல்லை. 


கீழே வழங்கியுள்ள சுட்டியை கிளிக் செய்து இணையதளத்திற்குச் செல்லவும்.

சுட்டி 1: TheYouMp3
சுட்டி 2: யூடியூப் MP3

No comments:

Post a Comment