மவுஸ் கேர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்துவது எப்படி?
சில வேளைகளில் மவுஸ் மயக்க மருந்து சாப்பிட்டது போல என்ன செய்தாலும் நகராது. கேர்சர் ஒரே இடத்தில் அப்படியே இருக்கும். வெகு நாட்கள் மவுசை சுத்தம் செய்யாமல் விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சிறிய பாகங்கள் மவுசினுள் மோசமாகிப் போனாலோ அல்லது மவுஸ் சார்ந்த மென்பொருளில் பிரச்சனை ஏற்பட்டாலோ இந்த நிலை ஏற்படலாம்.
அப்போது மவுஸ் கேர்சரின் நகர்த்தலை கீ போர்ட் மூலம் மேற்கொள்ளலாம். இந்த கீ போர்ட் மவுஸ் மூலம் அனைத்து வேலைகளையும் மேற்கொள்ளலாம். கீ போர்ட் மவுசை இயக்கத்துக்கு கொண்டு வர பின்வரும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
முதலில் Alt + Left Shift + Num Lock கீகளை ஒரே சேர அழுத்தவும். உடனே சிறிய மவுஸ் கீஸ் என்ற பெட்டி கிடைக்கும். இப்போது மவுஸ் கீகளை செயல்படுத்த ஓகே பட்டனை அழுத்தவும். கீகளை மவுஸ் கேர்சர் இயக்கத்திலிருந்து விடுவிக்க கேன்சல் (cancel) அழுத்த வேண்டும்.
செட் செய்வதற்கு செட்டிங்க்ஸ் பட்டன் அழுத்துங்கள் கிடைக்கும் கட்டத்தில் மேலதிக வசதிகளை பெறலாம் அதாவது மவுஸ் கேர்சரின் வேகம், துடிப்பு என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பின் ஓகே க்ளிக் செய்து வெளியேறவும். இப்போது மவுஸ் கேர்சரை சுலபமாக கீ போர்டின் உதவியுடன் நகர்த்த முடியும்.
=>1,2,3,4,5,6,7,8,9 ஆகிய கீகள் கேர்சரை பல்வேறு திசைகளில் நகர்த்த உதவும்.
=> 5 என்ற கீ மவுசின் இடது க்ளிக் செயல்பாட்டிற்கு பயன்படும்.
=>Insert கீ மவுஸ் கேர்சரை அழுத்திப் பிடிப்பதற்கான செயலை மேற்கொள்ளும்.
=>+ கீ டபிள் க்ளிக் செய்ய உதவும்.
=>Delete பட்டனை அழுத்தினால் மவுஸ் செலக்ட் செய்த பகுதியில் இருந்து விலகிவிடும்.
=> 5 என்ற கீ மவுசின் இடது க்ளிக் செயல்பாட்டிற்கு பயன்படும்.
=>Insert கீ மவுஸ் கேர்சரை அழுத்திப் பிடிப்பதற்கான செயலை மேற்கொள்ளும்.
=>+ கீ டபிள் க்ளிக் செய்ய உதவும்.
=>Delete பட்டனை அழுத்தினால் மவுஸ் செலக்ட் செய்த பகுதியில் இருந்து விலகிவிடும்.
நம்லாக் (Num lock) பட்டனில் க்ளிக் செய்தால் கீ போர்ட் மவுஸ் அமைப்பு விலகி விடும்.