Friday, 19 February 2016

விண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க் மேனேஜரை எனேபிள் மற்றும் டிசேபிள் செய்ய

விண்டோஸ் இயங்குதளத்தின் வேகம் சற்று முடக்கப்படும் போது டாஸ்க் மேனேஜரை திறந்து திறந்திருக்கும் தேவையற்ற அப்ளிகேஷன்களை மூடுவோம் இதனால் இயங்குதளம் சற்று வேகமாக செயல்படும், கணினி மிக மோசமான மந்த நிலைக்கு தள்ளப்படும் போது அனைத்து கணினி பயன்பாட்டாளர்களும் செல்லும் இடம் டாஸ்க் மேனேஜர் ஆகும். இந்த டாஸ்க் மேனேஜரை பயனர் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். 
Ctrl+Alt+Delete பொத்தான்களை ஒரு சேர அழுத்தி டாஸ்க் மேனேஜரை திறக்கலாம், இல்லையெனில் Ctrl +Shift+Esc பொத்தான்களை ஒரு சேர அழுத்தியும் டாஸ்க் மேனேஜரை திறக்க முடியும். இதனை ஒப்பன் ஆகாமல் தடுக்கவும் வழி உள்ளது அதுவும் மூன்றாம் தர மென்பொருள் உதவி இல்லாமல், விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடன் செய்ய முடியும். 
டாஸ்க் மேனேஜரை ஒப்பன் ஆகாமல் தடுக்க முதலில் விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் விண்டோவில் gpedit.msc என்று உள்ளிட்டு பின் OK பொத்தானை அழுத்தவும். 


தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி திறக்கவும். User Configuration >Administrative Templates >System >Ctrl+Alt+Del Options கிளிக் செய்யவும். வலதுபுறம் தோன்றும் விண்டோவில் Remove Task Manager என்னும் தேர்வினை சுட்டியினால் இரட்டை கிளிக் செய்யவும். இல்லையெனில் ரைட் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Edit தேர்வினை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Enabled என்னும் ஆப்ஷன் பொத்தானை தேர்வு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.


இப்போது டாஸ்க் மேனேஜரை திறந்து பாருங்கள் திறக்க முடியாது, மீண்டும் டாஸ்க் மேனேஜரை திறக்க வேண்டுமெனில் Disabled ஆப்ஷன் பொத்தானை தேர்வு செய்து பின் Ok பொத்தானை அழுத்தவும்.

No comments:

Post a Comment