Thursday, 14 January 2016

இரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க


நாம் நமது கணினியின் வன் தட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட பார்ட்டிஷனில்,நமது முக்கியமான இரகசிய கோப்புகளை வைத்திருப்போம். உங்களைத் தவிர பிறரும் உபயோகிக்கும் கணினியில் உங்கள் இரகசியத்தை பாதுகாக்க ஒரு இலவச மென்பொருள் கருவி NoDrives Manager. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது).

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொண்ட பிறகு, இந்த கருவியை இயக்கி,


உங்கள் வன் தட்டில் உள்ள எந்த ட்ரைவை மறைக்க வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது, ட்ரைவ்களை தேர்வு செய்துகொண்டு, கீழே உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.


இதை செய்து முடித்த பிறகு  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off செய்து விட்டு மறுபடியும் வந்து பார்க்கையில் அந்த குறிப்பிட்ட ட்ரைவ் My Computer லிருந்து மறைக்கப்பட்டிருக்கும்.

மறுபடியும் அந்த குறிப்பிட்ட ட்ரைவை தோன்ற வைக்க இதே மென்பொருளை இயக்கி, குறிப்பிட்ட ட்ரைவிற்கு நேராக உள்ள டிக் மார்க்கை நீக்கிவிட்டு,  Exit the program பொத்தானை அழுத்தி விட்டு கணினியை Log off  செய்தால் போதுமானது.


Duplicate கோப்புகளை கண்டறிந்து நீக்க


நாம் நமது கணினியில் டாக்குமெண்டுகள், புகைப்படங்கள், MP3 பாடலகள், வீடியோ க்ளிப் போன்ற பலவகையான கோப்புகளை வைத்திருப்போம். பல சமயங்களில் ஒரே கோப்பு உங்கள் வன் தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரைவ் மற்றும் ஃபோல்டர்களில் இருப்பதுண்டு. இதனால் உங்கள் வன் தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதும் உண்டு. 


இந்த பிரச்சனையை தீர்க்க பல கட்டணம் செலுத்த வேண்டிய மென்பொருட்கள் இருந்தாலும், ஒரு இலவச மென்பொருள் Duplicate Cleaner. வெறும்  3 எம்பி அளவுள்ள மிகவும் பயனுள்ள கருவி!. உங்கள் கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள். (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

இதன் Installation Wizard இல் Registry Reviver பகுதியில் Registry Cleaner தேவையில்லை என்றால், Do not Install Registry Reviver ஐ தேர்வு செய்து Install பொத்தானை அழுத்தி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

 

இந்த கருவியை இயக்கும் பொழுது, முதல் திரையில் எச்சரிக்கை செய்தியை வாசித்து, OK பொத்தானை அழுத்துங்கள்.


இப்பொழுது திறக்கும் Duplicate Cleaner திரையில், இடதுபுற பெட்டியில் தேவையான ட்ரைவ் மற்றும் கோப்புறைகளை தேர்வு செய்து அடுத்த பெட்டிக்கு ADD செய்து கொள்ளுங்கள்.


அடுத்து வலது புறமுள்ள File Search பகுதியில் உள்ள File Filter இல் கோப்பு வகையை கொடுங்கள் (Word கோப்பு எனில் *.DOC எனவும், படங்களுக்கு *.JPG.. )


பிறகு, கீழே உள்ள GO பொத்தானை அழுத்துங்கள். உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புகளின் அளவை பொறுத்து தேடும் வேகம் மாறுபடும்.


அடுத்த திரையில் தேடுதல் பணி முடிந்து விட்டதற்கான அறிவிப்பு வருவதை கவனிக்கலாம்.


இனி தேவையற்ற டூப்ளிகேட் கோப்புகளை கவனமாக தேர்வு செய்து கீழே உள்ள பொத்தான்களில் தேவையானதை க்ளிக் செய்து, டூப்ளிகேட் கோப்புகளை உங்கள் கணினியிலிருந்து நீக்கி, உங்கள் வன் தட்டினை பராமரிக்கலாம்.



PenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க


இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள். 


ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.

இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு  இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide  செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.


இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.





அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,



தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.



Windows Security: முடங்கிப்போன கணினியை உயிர்ப்பிக்க


Anti Virus நிறுவப்படாத கணினி அல்லது முறையான உரிமம் இல்லாத Anti Virus மென்பொருட்கள் நிறுவப்பட்டுள்ள கணினிகள், வைரஸ்/மால் வேர் தாக்குதல்களிலிருந்து தப்புவது மிகக் கடினமான விஷயமாகும். ஒரு சில சமயங்களில், உங்களது கணினி மிக மோசமான வைரஸ்/மால்வேர் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு, அதன் இயக்கும் முற்றிலும் முடக்கப் பட்டு, இயங்குதளம் கூட ஒழுங்காக பூட் ஆகாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். 



இது போன்ற சந்தர்ப்பங்களில் உங்களது மிக முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் அந்த கணினியில் இருந்தால் இன்னும் டென்ஷன்தான். உங்கள் பாதிக்கப்பட்ட கணினியை சோதிக்கும் கணினி வல்லுனர், புதிதாக இயங்குதளத்தை நிறுவினால்தான் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். என்று சொல்லும் நிலை கூட வரலாம். 

இது போன்ற சமயங்களில் நமக்கு சமய சஞ்சீவியாக அமைவது Kaspersky நிறுவனத்தின் இலவச Bootable Kaspersky Rescue Disk.


இந்த பயனுள்ள கருவி, ISO இமேஜ் கோப்பாக தரவிறக்க Kaspersky தளத்திலேயே கிடைக்கிறது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரபட்டுள்ளது). இந்த ISO கோப்பை தரவிறக்கம் (வைரஸ்/மால்வேர் அல்லாத கணினியில்) செய்து கொண்டு, Nero Burning Rom போன்ற CD/DVD Burning Software ஐ பயன் படுத்தி இந்த ISO Image லிருந்து, CD ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மென்பொருட்கள் இல்லாதவர்கள் இறுதியில் தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து ImgBurn மென்பொருளை தரவிறக்கி உபயோகித்துக் கொள்ளுங்கள்.


இப்படி உருவாக்கிய Kaspersky Rescue Disk ஐ பாதிக்கப்பட்ட கணினியில், First Boot Device ஐ Bios Settings இல் CD/DVD க்கு  மாற்றிவிட்டு, இந்த CD ஐ கொண்டு பூட் செய்யுங்கள். திரையில் Kaspersky Rescue Disk. Graphic Mode என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


பின்னர் இதில் தொடரும் விசார்டை பின் பற்றி உங்கள் வன்தட்டில் உள்ள வைரஸ்/மால்வேர்களை நீக்கி, உங்கள் கணினியை உயிர்ப்பிக்கலாம்.



இது போன்ற பிரச்சனைகள் உங்கள் கணினியில் இல்லாவிட்டாலும் கூட, இந்த Rescue CD ஐ உருவாக்கி வைத்துக் கொள்வது, ஆபத்து நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.





உபயோகமான Desktop Icons - ON/OFF


ஒரு சிலரது கணினின் டெஸ்க்டாப்பில் கோப்புகள், ஷார்ட்கட்கள், ஃபோல்டர்கள் என நிரம்பி வழிவதை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கே என்ன என்ன ஐகான்கள் தங்கள் டெஸ்க்டாப்பில் உள்ளன என்பது நினைவில் வைத்திருப்பது கடினம்தான். 


இவ்வாறு தங்கள் டெஸ்க்டாப்பை வைத்திருப்பவர்கள், தங்களுக்கு விருப்பமான, அழகான ஒரு வால் பேப்பரை திரையில் அமைக்கும் பொழுது, இந்த ஐகான்களை OFF செய்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்தால், வழக்கமாக நாம் செய்வது, டெஸ்க்டாப்பில் வலது க்ளிக் செய்து, Arrange Icons by --> Show Desktop Icons க்ளிக் செய்வதன் மூலமாக, ON/OFF செய்ய முடியும்.


ஆனால், இந்த பணியை எளிதாக்க, Hide Desktop Icons எனும் மிகச் சிறிய இலவச மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் பதிந்து கொண்ட பிறகு இதற்கு ஒரு ஷார்ட்கட் ஐ உருவாக்கி டெஸ்க்டாப்பில் வைத்து விடாதீர்கள்.(ஏனென்றால் டெஸ்க்டாப் ஐகான்களை OFF செய்த பிறகு, மறுபடியும் ON செய்வதில் சிரமம் ஏற்படலாம்) மாறாக Start Menu / Quick Launch பாரில் இணைத்துக் கொள்ளலாம். இதனை ஒரு முறை க்ளிக் செய்ய, Desktop Icon கள் OFF ஆகும், மறுமுறை க்ளிக் செய்ய ON ஆகும். 






Wednesday, 13 January 2016

கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் தெரிந்துகொள்ள வேண்டிய சில கணினி தகவல்கள், படித்து பகிரவும்

கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் தெரிந்துகொள்ள வேண்டிய சில கணினி தகவல்கள், படித்து பகிரவும்
HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD
Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered trademark symbol
Alt + 0176 ...°......degre­e symbol
Alt + 0177 ...±....plus-or­-minus sign
Alt + 0182 ...¶.....paragraph mark
Alt + 0190 ...¾....fractio­n, three-fourths
Alt + 0215 ....×.....multi­plication sign
Alt + 0162...¢....the cent sign
Alt + 0161.....¡..... .upside down exclamation point
Alt + 0191.....¿..... ­upside down question mark
Alt + 1...........smiley face
Alt + 2 ......☻.....bla­ck smiley face
Alt + 15.....☼.....su­n
Alt + 12......♀.....f emale sign
Alt + 11.....♂......m­ale sign
Alt + 6............s­pade
Alt + 5............. ­Club
Alt + 3............. ­Heart
Alt + 4............. ­Diamond
Alt + 13......♪.....e­ighth note
Alt + 14......♫...... ­beamed eighth note
Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)
Alt + 251.....√.....s­quare root check mark
Alt + 8236.....∞..... ­infinity
Alt + 24.......↑..... ­up arrow
Alt + 25......↓...... ­down arrow
Alt + 26.....→.....ri­ght arrow
Alt + 27......←.....l­eft arrow
Alt + 18.....↕......u­p/down arrow
Alt + 29......↔... left right arrow

Tuesday, 12 January 2016

HD டிவி/வீடியோ என்றால் என்ன?



ஹை டெபனிசன் டிவி( High Definition TV ) என்பது டிஜிடல் டிவியின்( Digital TV) வரையறைக்குட்பட்டது. இதுவரை நாம் அனலாக்(Analog) எனப்படும் முறையிலேயே டிவி சேனல்களின் வீடியோகளை நம் வீட்டு அனலாக் டிவியில்(Analog TV) பார்த்து வந்தோம். தற்போது டிஜிட்டல் முறைக்கு நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அதாவது டிஜிட்டல் டேட்டாக்களை நேரடியாக வாங்கி நமக்கு வீடியோவை கொடுக்கக் கூடிய டிவிக்கள்( LCD, LED, Plasma  ) தற்போது வந்துவிட்டன. இதற்கு நமக்குத் தேவை HD TV மற்றும் ஹைச் டி செட்டாப் பாக்ஸ்(HD Set-top box).செட்டாப் பாக்ஸ்ல் உள்ள HDMI போர்ட் மூலம் நாம்முடைய HD டிவியானது வீடியோவை துள்ளியமாக காண்பிக்கின்றது. 

அனலாக் முறையிலான வீடியோவை நாம் AV அல்லது RF கேபிள்வழியாக டிவிக்கு இணைத்து பார்க்கின்றோம். அதேபோல் HDMI கேபிளானது HD டிவியுடன் இணைந்து துள்ளியமான வீடியோவை( Digital Video ) நமக்குத்தருகின்றது. HD டிவியில் நாம் காணும் வீடியோவில்  முந்தைய அனலாக் டிவியை விட 5 அல்லது 6 மடங்கு துள்ளியமாக காணவும் கேட்கவும் முடியும்.
HDடிவி 720p 1080i, 1080p வகையான நீள அகலமுடைய வீடியோவை நமக்கு காண கொடுக்கின்றது. அதாவது அகன்ற திரை(16:9) வீடியோவினை நாம் காணலாம்.

720p, 1080i, 1080p நீள அகலத்தை கீழே இருக்கும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நடுவில் இருப்பது அனலாக் வீடியோ அதாவது நாம் தற்போது அனலாக் டிவிகளில் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவாகும். படத்தைப்பார்த்தாலே எவ்வளவு அளவிலான வீடியோவை HDடிவி மூலம் நாம் காணலாம் என்பது உங்களுக்குப்புரியும்.

1080i அல்லது 1080p யை காண்பிக்கத்தகுந்த டிவிகள் சந்தையில் ஏராளம். குறிப்பக 1080p ல் வீடியோ தெளிவு சிறப்பாக இருக்கும்..




HD வீடியோ பார்க்க உங்களிடம் இருக்க வேண்டியது ஹைச் டி செட்டாப்பாக்ஸ்( HD set-top box ) மற்றும் அதற்கான HD டிவி, HDMI கேபிள். HD செட்டாப் பாக்ஸ் அதிக கொள்ளளவு உடைய டிஜிட்டல் வீடியோவை( HD Video ) HD டிவிக்கு கொடுக்கின்றது. HD டிவியானது அதனை நமக்கு காண்பிக்கின்றது. மேலும் HD சேனலில் 5.1 ஆடியோ(audio) வசதியும் உண்டு.

தெரிந்து கொள்வோம்..



பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான முதல் ஹார்ட் டிஸ்க்கினை 1979 ஆம் ஆண்டு முதன் முதலாக ஸி கேட்( Seagate ) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் கொள்ளளவு 5 எம்.பி.( MB )

முதன் முதலில் தங்களுக்கென ஓர் இணையதளப் பெயருக்கு விண்ணப்பித்தவர்கள் டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன்(digital equipment corporation) ஆகும்.

ஐ.பி.எம் பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த 12 பொறியாளர்களை என்ன குறியீட்டுப் பெயர் கொண்டு அழைத்தார்கள் தெரியுமா? ‘தி டர்ட்டி டஜன்’ ( The Dirty Dozen )

VIRUS ன் விரிவாக்கம்( கண்டிப்பா 'நண்பன்' படம் சத்தியராஜ் பெயர் இல்லை )
Vital Information Resource Under Siege

SIM  ன் விரிவாக்கம் ( Sim card சொல்வோமே அதுதான் Simran இல்லப்பா.. )
Subscriber Identify Module


CD-ROM ன் விரிவாக்கம்
Compact Disk-Read Only Memory

ANSI ன் விரிவாக்கம்
American National Standards Institute

ASCII ன் விரிவாக்கம்
American Standard Code for Information Interchange

ATM ன் விரிவாக்கம்
Automated Teller Machine

ஹார்ட் டிஸ்க் சிக்கலா??!!



chkdsk.exe என்னும் பைலை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கில்(hard disk) ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைகளை அறியலாம். இது ஒரு DOS புரோகிராம் ஆகும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவில்(drive) அல்லது முழு டிஸ்க்கை இந்த
 பைல் சோதனை செய்து பிரச்சினைகள் இருந்தால் அவற்றைச் சரி செய்திடும்.
எனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறையேனும் இந்த பைலை இயக்கிப் பார்த்தல் நல்லது..

இதை பைலை இயக்க, ஸ்டார்ட் அழுத்தி கிடைக்கும் ரன் விண்டோவில் ‘command’ அல்லது ‘cmd’ என டைப்செய்து என்டர் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழ்காணும் கட்டளையை இயக்கவும்..

c:\>chkdsk e:
இது ஹார்ட் டிஸ்க்கின் 'e' டிரைவை சோதனை செய்யும்..

c:\>chkdsk e: /f /r


/f என்னும் கட்டளை டிஸ்க்கினை சோதனை செய்கையில் ஏதேனும் பிழைகளைக்கண்டால்; தானாகவே சரிசெய்துவிடும்..

/r என்னும் கட்டளை பழுதாகிப்போன மீண்டும் பயன்படுத்த முடியாத டிஸ்க்கிக் பகுதிகளை( Bad Sectors ) கண்டறிந்து அதிலுள்ள தகவல்களை மீட்டுத்தர முயற்சிக்கும்..



இந்த செக்டிஸ்க் கட்டளை கொடுத்தபின் கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவும்..பூட் ஆகும் போது செக்டிஸ்க் தானாக இயங்கி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட்டம் திரைக்கு வந்துவிடும்..

குறிப்பு
  • இந்த பைலை இயக்க ஒரு கம்ப்யூட்டருக்குள் நீங்கள் அட்மினாக (admin)நுழைந்திருக்க வேண்டும்.

  • ஹார்ட் டிஸக்கில் உள்ள தவறுகளை இந்த கட்டளை திருத்த வேண்டுமென்றால் நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த பைலையும் திறந்து வைத்திருக்கக் கூடாது.. 
இப்பத்தான் நான் சோதனை செய்து முடித்தேன் என்னுடைய டிஸ்க்கில் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..ம்ம்..அப்பாடி..

கூகுள் டிரைவ்


கூகுள் அக்கவுண்ட் உள்ள யாரும் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஜிபி[இலவசமாக] அளவிலான பைல்களை இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பின் மூலம், கூகுள் ட்ரைவ் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். 


மேலும் தெரிந்துகொள்ள,
https://drive.google.com/start#home

https://drive.google.com/#my-drive