Sunday, 27 December 2015

பவர் பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய

பவர் பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய

வணக்கம் நண்பர்களே..!

மைக்ரோசாப்ட்டின் ஆபீஸ்(MS Office) தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் செயலியை நம்மில் பலர் பயன்படுத்தி வருகிறோம். எளிதாக தகவல்களை தொகுத்து animation வேலைகளுடன் வழங்க இந்த பவர்பாய்ண்ட் நமக்கு உதவுகிறது. இதிலுள்ள  பயன்பாடுகள் ஏராளமானவை.

ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பவர்பாய்ண்ட்டை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வகுப்புகளில், கருத்தருங்குகளில் என எல்லாவற்றிலும் இந்த பவர்பாய்ண்ட் ப்ரசண்ட்டேஷனைப் பயன்படுத்திதான் தங்களுது கருத்துகளை எடுத்து கூறுகின்றனர். பாடம் நடத்தவும் சில வேளைகளில் பவர்பாய்ண்ட் பிரசன்ட்டேஷன் உதவுகிறது என்றால் அது மிகையாகாது.



powerpoint to video convertor


இவ்வாறு பவர்பாய்ன்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை மற்ற கணினிகளில் வேலை செய்ய வைக்க அந்த கணினிகளில் பவர்பாய்ன்ட்(Powerpoint application) அல்லது பவர்பாய்ன்ட் வியுவர்(Powerpoint viewer) இருந்தால்தான் பவர்பாய்ண்ட் கோப்புகளை(power point presentation)  காண முடியும். இவற்றையே வீடியோ கோப்புகளாக மாற்றிவிட்டால் உங்கள் வீட்டு டி.வியில் கூட பவர்பாய்ண்ட்டில் உருவாக்கிய கோப்புகளை காண முடியும். அதாவது டிவிடி பிளேயர், CD Player போன்ற பிளேயர்களில் உள்ளிட்டு அவற்றை டிவியில் பார்க்கலாம். பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக(Video files) மாற்ற பவர்பாய்ண்ட்டில் வசதி தரப்படவில்லை. எனவே பவர்பாயிண்ட்டில் வீடியோவாக மாற்றுவது என்பது இயலாத காரியம். இதற்காகவே இந்த மென்பொருள் பயன்படுகிறது. மென்பொருளின் பெயர்

Leawo PowerPoint to Video Free. 

இந்த இலவச மென்பொருள் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோ கோப்புகளாக மாற்றம் செய்ய முடியும். உங்கள் பவர்பாய்ன்ட் கோப்புகளை 3PG, 3G2, ASF, WMV, ஆகிய பார்மட்களில் வீடியோ கோப்புகளாக மாற்றிக் கொள்ளலாம்.


இந்த மென்பொருளைத் தரவிறக்க சுட்டி:Download Leawo PowerPoint to Video Free.

 இந்தமென்பொருளானது பவர்பாய்ண்ட்டின் அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது(Support). PPT, POT, PPTX, PPS போன்ற பவர்பாய்ண்டின் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் இம்மென்பொருள் மூலம் வீடியோவாக மாற்ற முடியும்.

மேலும் பவர்பாய்ண்டில் நாம் உருவாக்கிய அனைத்து அனிமேஷன்களும், வீடியோவாக மாற்றம் செய்தபிறகு அப்படியே வேலை செய்யும் என்பது இம்மென்பொருளின் கூடுதல் சிறப்பு.

என்ன நண்பர்களே... இந்த மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் பவர்பாய்ண்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற தயாராகிவிட்டீர்களா?...

உங்கள் பவர்பாய்ண்ட் ஆக்கங்களை இனி உங்கள் வீட்டு  டிவியிலும் போட்டுக் காண்பித்து பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையான PowerPoint Presentation நீங்களே உருவாக்கி வீடியோவாக மாற்றி CD பதிவேற்றிக்கொடுங்கள். அவர்களுக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்

ஆன்லைன் வீடியோ- Downloader

ஆன்லைன் வீடியோ- Downloader

தினமும் ஆன்லைனில் பல்வேறு விதமான வீடியோக்களை பார்த்து வருகிறோம், அவறை டவுண்லோட் செய்து பார்க்க வேண்டும் பலருக்கு ஆசை இருக்கும். எதாவது வீடியோ வேண்டுமென்றால் அனைவரும் நாடி செல்வது  YOUTUBE தளம் ஆகும். இந்த தளத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் பல்வேறு வழிகளில் இணையத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்கி பயன்படுத்த முடியும்.

ஆனால் வேறு ஏதாவது ஒரு தளத்திலிருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் அங்கு வருகிறது சிக்கல், இவற்றுக்கெல்லாம் தீர்வாக ஆன்லைனில் எந்த ஒரு தளத்தில் இருந்து வேண்டுமானாலும் வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும்.

தளத்தின் முகவரி: BenderConverter


இந்த தளத்திற்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும்  Format னை தேர்வு செய்யவும். உதாரணமாக  mp3, .wav, .avi, .mpeg and also Apple iPad, iPod, iPhone போன்றவை ஆகும். பிறகு இணையத்தின் முகவரி (URL) யை உள்ளிட்டு  Convert என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் விருப்பிய Video வினை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

Saturday, 26 December 2015

எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்.....


எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்.....
பிறரும் இந்த விபரங்களை தெரிந்து கொள்ள அதிகம் பகிருங்கள்.
யாம் பெற்ற இன்பம், இவ்வையகம் பெறட்டும்.
கண்டிப்பாக ஒவ்வொருவரும் தங்களின் வீட்டிலும் எலி, பல்லி, ஈ, கொசுக்கள், கரப்பான் பூச்சி, மூட்டைப்பூச்சி போன்றவைகளால் அதிக தொந்தரவுகளை சந்தித்திருப்போம்.
கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களையும் பயன்படுத்தி அவைகளை விரட்டுவதற்கு பதிலாக, ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டே அவற்றை எளிதில் விரட்டலாம்.
‪#‎எலி‬
எலிக்கு புதினாவின் வாசனை பிடிக்காது.
எனவே புதினாவை அவை வரும் இடங்களில் கசக்கிப் போட்டாலோ அல்லது புதினா எண்ணெயை பஞ்சில் நனைத்து எலி வரும் இடங்களில் வைத்தாலோ, அவை வருவதைத் தடுக்கலாம்.
‪#பல்லி‬
உங்கள் வீட்டு சுவற்றை பல்லிகள் ஆக்கிரமித்துள்ளதா..?
அப்படியெனில் வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை வையுங்கள்.
இதனால் அதன் நாற்றத்தினால், பல்லிகள் போய்விடும்.
‪#‎ஈ‬
சில வீடுகளில் ஈ அதிகம் மொய்க்கும்.
அப்படி உங்கள் வீட்டில் ஈ அதிகம் இருந்தால், துளசி செடியை வீட்டு ஜன்னல்களில் வைத்து வளர்த்து வாருங்கள்.
இல்லாவிட்டால் லாவெண்டர், யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களை தெளித்து விடுங்கள்.
இதனாலும் ஈக்கள் வருவதைக் கட்டுப்படுத்தலாம்.
‪#‎கொசுக்கள்‬
கொசுக்கள் வராமல் இருக்க வேப்பிலை உதவும்.
மேலும் பல கொசு விரட்டிகளை விட வேப்பிலை மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் கூறுகின்றன.
எனவே உங்கள் வீட்டில் கொசுக்கள் அதிகம் இருந்தால், காய்ந்த வேப்பிலையைக் கொண்டு தீ மூட்டுங்கள்.
இதனால் அப்போது வரும் புகையினால் கொசுக்கள் அழிந்துவிடும்.
‪#‎கரப்பான்_பூச்சி‬
கரப்பான் பூச்சியைக் கண்டு பயப்படுவோர் அதிகம்.
அப்படி பயமுறுத்தும் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சிறிது நீரில் கலந்து தெளித்தால், அவைகள் வருவதைத் தடுக்கலாம்.
‪#‎மூட்டைப்பூச்சி‬
மூட்டைப்பூச்சி உங்கள் வீட்டின் மெத்தையில் அதிகம் இருந்தால், வெங்காய சாற்றினை தெளித்து விட்டால், மூட்டைப்பூச்சிகள் அதன் வாசனையில் அழிந்து விடும்.

Friday, 25 December 2015

Hard disk பிரச்னையை சரிசெய்யும் மென்பொருள்



உடனடியாக உங்கள் ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்யும் மென்பொருள்


கம்ப்யூட்டரில் ஏற்படும் ஸ்டார்ட் அப் பிரச்னை, முக்கியமான பைல்கள் திடீரென காணாமல் போகுதல், சில டேட்டாக்களில் ஏற்படும் பாதிப்புகள் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று அறிந்துகொள்ளலாம்.
check hard disk for errors
ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரிசெய்யும் மென்பொருள்

இதுபோன்று கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் ஏற்படும் பிரச்னையை சரி செய்ய TuneUp Disk Doctor என்ற மென்பொருள் பயன்படுகிறது. அடிக்கடி மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து, நீக்கும் கம்ப்யூட்டர்களில் பிழைச்செய்திகள் தோன்றும். Error MSG காட்டினால் கட்டாயம் ஹார்ட் டிஸ்கில் பிரச்னை என்று புரிந்துகொள்ளலாம். அதுபோன்ற சமயங்களில் என்ன பிரச்னை என கண்டறிந்து அதை தீர்க்க இந்த Tuneup Disk Doctor என்ற மென்பொருள் பயன்படுகிறது. இம்மென்பொருள் ஹார்ட் டிஸ்க் பிரச்னைகளை கண்டறிந்து அதை சரிசெய்கிறது.

மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி: 

பேஸ்புக் & யூடியுப் வீடியோவை எவ்வாறு எளிதில் டவுன்லோட் செய்து கொள்வது என வீடியோவை பாருங்கள்.

பேஸ்புக் & யூடியுப் வீடியோவை எவ்வாறு எளிதில் டவுன்லோட் செய்து கொள்வது என வீடியோவை பாருங்கள்.

இதோ ஆப்ளிகேசன் லிங்க்:::

WhatApp Full Mode Profile Picture Making Simple Steps



வாட்ஸ்ஆப்ல உங்களின் போட்டோவை முழுமையாக எவ்வாறு செட் செய்வது என வீடியோவில் பார்ப்போம்.
இதோ லிங்க்:::

கவனிக்கவும்>இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே அடியில் உள்ள விளம்பர படத்தை ஒரு முறை தொடவும்!! உங்கள் வளர்ச்சி பாதையில் நாங்கள் எப்போதும் இருப்போம்

Keyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை உபயோகிக்க

Special character பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் உபயோகிக்கும் கணினி keyboard-ல் அனைத்து special Character இருக்காது. நூற்றுகணக்கான Special character-கள் உள்ளது. இந்த special character அனைத்தையும் எப்படி நம் கணினியில் உபயோகிப்பது என பார்க்கலாம். இதற்கென ஒரு இணைய தளம் உள்ளது. இந்த தளத்தில் எண்ணற்ற special characters அடங்கியுள்ளது. இந்த special characters பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.


முதலில் இந்த http://copypastecharacter.com/ link-ல் click செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.


இதில் உங்களுக்கு தேவையான special character மீது click  செய்தால் அந்த special character copy செய்யப்படும். மேலே உள்ள படத்தில் நான் வட்டமிட்டு காட்டி இருப்பதை adjust செய்து special character அளவை பெரிது படுத்தி கொள்ளலாம்.

மற்றும் special character-களை Html Code ஆகவும் copy செய்து கொள்ளலாம். இப்படி நூற்றுகணக்கான special characterகளையும் உங்கள் document பதிவிலோ உபயோகித்து கொள்ளலாம்.  இந்த தளம் டிசைனர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாக இருக்கும்.

MP3 பாடல்களில் உங்களுடைய புகைப்படத்தை இணைக்க வேண்டுமா???

MP3 பாடல்களில் உங்களுடைய புகைப்படத்தை இணைக்க வேண்டுமா???

வணக்கம் நண்பர்களே!!!
எல்லாம் தமிழால் முடியும்,
எல்லாம் தமிழனால் முடியும்.
mp3 பாடல்களில் உங்களுடைய புகைப்படத்தை இணைக்க வேண்டுமா???
இந்த லிங்கை install செய்து கொள்ளவும். Check out "iTag - Music Tag Editor" -

https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.itag   

ஈமெயில் பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி?


கடந்த அய்ந்தாண்டுகளில் இளைய சமூகம் ஈ மெயில் பயன்பாட்டினை அதிகரித்து வந்துள்ளது. தற்போது சாதாரண அஞ்சல் என்பது இல்லவே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஈ மெயில் இப்போது இளைய சமூகத்தால் எவ்வாறு உபயோகிக்கப் பட வேண்டும் என அறிந்து கொள்வது இன்றி அமையாதது. ஈ மெயில் நமக்கு பல வழிகளில் பயண பாடு உடையது. நாம் இதனை விழி வாய்ப்பு தேடும் சமயங்களில் கவர லெட்டர் எனப்படு முகப்பு அஞ்சலாகவோ அல்லது பொதுவான வர்த்தக காரியங்களுக்கு பயன்படும் தொடர்புக் கடிதமாகவோ பயன் படுத்தலாம். அப்போது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நமது ஈ மெயில் குறைந்தது 200 அல்லது 300 வார்த்தைகளை அடக்கியதாக இருக்க வேண்டும்.. அலுவலகக் கடிதங்கள் எழுதும் போது முகவரிகளை எவ்வாறு நாம் மற்ற கடிதங்களை எழுதுகையில் இடுகிறோமோ அவ்வாறே இட வேண்டும். முகப்பில் அனுப்புனர் கடிதம் அல்ல து பெருபர் முகவரி என்று இடலாம்.கடிதங்கள் குறிப்பிட்ட அளவில் அதாவது புல் பிளாக் லெட்டெர் அல்லது செமி ப்ளோக் லெட்டெர் என்று முழுதும் இடப்புறம் ஆரம்பிக்கும் ஒன்றாகவோ அல்லது இடம் வளம் என்று கடிதம் கலந்து எழுதப்பட்டதாகவோ முறையான ஒழுங்குடன் இருக்கலாம்.கடித ஆரம்பம் அய்யா என மரியாதை விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் ஒரு கடிதத்தை வோர்ட் பைலில் தயார் செய்து வைத்துக் கொண்டு பின் மெயிலில் வெறும் பிந்து அட்டச்மெண்ட் என்றும் கொடுக்கலாம். மெயில் முகவரி நல்ல தமிழில் இருப்பதும் கண்ணியமாக இருப்பதும் நல்லது.

உதாரணமாக தியாகு@ஜிமெயில் என்பது கண்ணியமாக உள்ளது. அதற்குப் பதிலாக செக்ஸ்ய்சர@ஜிமெயில்.கம என்பது போன்ற முகவரிகளையோ அல்லது தியாகுகமெஒச் ,தியகுஹர்டின் போன்ற முகவரிகளையோ பயன்படுத்தாதீர்கள் . அதே போல தலை எழுத்தினையும் அதிகம் குறிப்பாக ஆங்கில கடிதத்தில் பயன்படுத்தாதீர்கள் .

 கீழே உங்களுக்குத் தேவையான டிப்ஸ் ஐ வரிசைப்படுத்தி கொடுத்துள்ளேன் . வாசித்துப் பயன் பெறவும்.
1. உங்கள் ஈமெயிலுக்கு நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) எளிதில் கண்டறியமுடியாதபடி மிகவும் வலுவாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அதை மற்றவர்கள் கண்டுபிடித்து துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு உருவாகும்.

- உங்கள் கடவுச் சொல் குறைந்தது 12 எழுத்துக்கள் நீளம் உடையதாக இருப்பது நல்லது.

- உங்கள் ஈமெயில் ஐடியையே கடவுச் சொல்லாக பயன்படுத்த வேண்டாம்

- 1, 2, 3, 4, 5 அல்லது 111111 அல்லது 22222 அல்லது 33333 அல்லது abcdef, Asdfgh அல்லது உங்கள் நிறுவனப் பெயர் முதலான கடவுச்சொற்களை தவிர்ப்பது சிறந்தது.

2. குறைந்தது மாதத்திற்கு ஒருமுறையாவது உங்கள் கடவுச்சொல்லை மாற்றவேண்டும்

3. உங்கள் கடவுச்சொல்லை வேறு எவா¢டமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. பிரபல நிறுவனங்கள் எதுவும் உங்கள் ஈமெயில் ஐடி கடவுச்சொல் விவரங்கள் தரச்சொல்லி கேட்பதில்லை.

4. உங்கள் அலுவலக உபயோக ஈமெயில் ஐடி-க்களை பொதுவான பாரம்களில் பயன்படுத்தவேண்டாம். அவை ஸ்பேமர்கள், ஹேக்கர்கள் முதலான ஆன்லைன் திருடர்கள் கைகளில் சிக்கிவிடும் அபாயம் உள்ளது. பொது பாரம்களில் உங்கள் ஈமெயில் ஐடிக்களை பதிவு செய்வதினால் உங்களுக்கு தேவையற்ற ஈமெயில்கள் வரும் மற்றும் உங்கள் அக்கவுண்ட்டில் அவர்கள் அத்துமீறி நுழைந்து முறைகேடாகப் பயன்படுத்தவும் கூடும்.

5. உங்கள் ஈமெயில் கிளையண்டில் (மைக்ரோசாப்ட் அவுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ், தண்டர்பேர்டு முதலானவை) செய்திகளை டவுன்லோடு செய்து அவற்றை சர்வா¢லிருந்து அழித்துவிடுங்கள். உங்கள் இன்பாக்சில் ஆயிரக்கணக்கான செய்திகள் இருந்தால் அவை ஈமெயில் டவுன்லோடு ஆகும் வேகத்தை குறைக்கும், உங்கள் மெயில் திறக்கவும் நேரம் பிடிக்கும்.

6. உங்கள் இன்பாக்ஸில் ஒருவார மெயில் அல்லது 15 எம்பி-க்கு மேல் வைத்திருக்கவேண்டாம். ஏதேனும் காரணத்தால் இன்பாக்சில் வைத்திருக்க வேண்டி வந்தால் 7 நாட்களுக்கும் மேலான மெயில்களை தனி போல்டாரில் மாற்றி வைக்கவும்

7. வெப் மெயில் வசதியை பயணத்தின் போது மட்டும் பயன்படுத்தவும்

8. யாஹூ, ஜிமெயில், ஹாட்மெயில், முதலான இலவச ஈமெயில் சேவைகளை அளிக்கும் தளங்களுக்கு மொத்தமாக (பல்க்) செய்திகளை அனுப்புவதைத் தவிர்க்கவும். அப்படிச் செய்தால் உங்கள் டொமைன் மற்றும் ஐபி முகவரி முடக்கிவைக்கப்படும் அபாயம் உள்ளது.

9. 'சப்ஜெக்ட்' என்பதிலும் செய்தியின் "பாடி' பகுதியிலும் அனைத்து எழுத்துக்களும் கேபிடல் எழுத்துகளாக இருப்பதைத் தவிர்க்கவும்

10. அனைத்து எழுத்துக்களையும் கேபிடலாக டைப் செய்து அனுப்பப்படும் செய்திகள் ஸ்பேம் மெயிலாகக் கருதப்படும்

11. முன்பின் தொரியாத நபர்களிடமிருந்து வரும் மற்றும் சந்தேகத்துக்கு¡¢ய தலைப்புச் செய்திகளுடன் (சப்ஜெக்ட்) வரும் ஈமெயில்களை திறக்கவேண்டாம்.

12. அவற்றில் வைரஸ்கள் அல்லது மால்வேர்கள் இருக்கலாம்.

13. நீங்கள் ஒரு பொது இடத்தில் (சைபர் கபே) ஈமெயில் பயன்படுத்தினால் வீடு அல்லது அலுவலகம் திரும்பியவுடன் உங்கள் கடவுச்சொல்லை மறக்காமல் மாற்றிவிடவும்

14. புதிதாக ஏதும் செய்தி வந்துள்ளதா என்று அடிக்கடி பார்க்கவேண்டாம். 'புதிய செய்திகளை ஆட்டோமேட்டிக்காக செக் செய்யவும்' என்றிருப்பதை புதிய செய்திகளை 15 அல்லது 20 நிமிடங்களுக்கொருமுறை செக் செய்யவும்' என்று மாற்றி அமைக்கவும்.

நன்றி : ரா பாலகிருஷ்ணன்

Thursday, 24 December 2015

ஒரே போனில் இரண்டு WHATSAPP பயன்படுத்துவது எப்படி ? மிக எளிய வழி

ஒரே போனில் இரண்டு WHATSAPP பயன்படுத்துவது எப்படி ? மிக எளிய வழி








       இன்றைய ஆண்ட்ராய்ட் உலகில் மிகபெரும்பாலனவர்கள் பயன்படுத்தும் ஒரு அப்ளிகேஷன் WHATSAPP தான் . SMS என்ற ஒன்றை மறக்கடிக்க செய்த பெருமை WHATSAPP யே  சாரும். அரட்டை அடிக்க மட்டுமின்றி போட்டோ , வீடியோகளை அனுப்பவும் இது பயன்படுகிறது. 

           நம்மில் சிலர் சொந்த உபோயகத்திர்க்கு ஒரு எண்ணும், மற்றவர்களுக்கு ஒன்றும் என இரண்டு நம்பர் வைத்திருப்பார்கள். அதுபோல WHATSAPP  இரண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். உங்களுக்காகவே வந்துள்ளது GBWHATSAPP.


பயன்கள் :

  • சிறிய அளவுள்ள பைல் .
  • நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் WHATSAPP ஐ  அழிக்க தேவையில்லை.
  • இரண்டும் தனித்தனியாக பயன்படுத்தலாம்.
  • வெறும் 20 MB தான் .
  • லாஸ்ட் சீன்  ஆப்ஷனை மறக்கும் வசதி .
  • கால் செய்யும் வசதி .



எவ்வாறு INSTALL செய்வது ?


  • டவுன்லோட்  செய்ய இங்கே அழுத்தவும்.

  • டபுள் கிளிக் செய்து INSTALL செய்யவும்

  • போன் நம்பர் வெரிபிகேஷன் செய்யவும்.
  • உங்கள் பழைய WHATSAPP  போலவே இதையும் பயன்படுத்தவும்.